நற்செயல்கள் பலசெய்தே
நலம்பேண உழைக்கணும்….
நல்லபெயர் பெற்றிட
நல்லவனாக வாழணும் …
நண்பர்கள் எல்லோரும்
நட்பிலேயே தேறணும்…
நல்லதையே எந்நாளும்
நானிலத்தில் விதைக்கணும்.
நடந்த வழிகளில்
நன்மணிகள் முளைக்கணும்…
நம்மக்களின் வாழ்வினிலே
நாணயங்கள் பெருக்கணும்..
உலகம் எப்போதும்
உன்னையே வரவேற்கணும்…
உல்லாச வாழ்வினை
உறவோடே ஒதுக்கணும்…
மன்னனாய் வாழ்வில்
மணபெறவே பறக்கணும்…
மனங்களில் இடம்பெற்றே
மனிதனாய் வாழ்வுயரணுமே…..
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings