எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த ஏரியாவில் பாலிசி மாமா சதாசிவத்தை பற்றி தெரியாதவர்களே கிடையாது. இன்னும் சொல்லப் போனால் முக்கால் வாசி பேர் அவரை பார்த்தாலே ஓடி ஒளிந்து கொள்வார்கள். அந்த அளவிற்கு எல்லாவற்றிற்கும் என்னோட பாலிசி … என்னோட பாலிசி என்று எல்லோரிடமும் பேசி பேசி irritate ஆக்கி விடுவார். பாவம், அவருடைய மகனும் மனைவியும் நாள் முழுவதும் இவருடைய பாலிசி பேச்சை வேறு வழியில்லாமல் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
ஒரு நாள், ஒரு நபர் இந்த மாமாவின் வீட்டிற்கு வந்தார். வாசலிலேயே நின்றார், அவரை பார்த்து, யாரை பாரக்கணம்? என்றார் சதாசிவம்.
Mr. சதாசிவம்?? என்றார் வந்தவர்.
Yes, நான் தான்.. என்ன விஷயம்??
சார், நான் பாலிசி விஷயமா உங்ககிட்ட பேச வந்திருக்கிறேன் என்றார் அந்த நபர்.
உடனே இந்த மாமாவிற்கு சந்தோஷம் பிடி கொள்ளவில்லை. அவரை உள்ளே அழைத்து உட்கார வைத்தார். மனைவியிடம் காப்பி போட்டு கொண்டு வரச் சொன்னார். மாமியும் காப்பி போட்டு கொண்டு வந்தார்.
காப்பியை வைத்து விட்டு, ஐயோ பாவம், மனுஷன் இன்னிக்கு செத்தான்!! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே வந்தவரை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு உள்ளே சென்று விட்டார்.
வந்தவருக்கோ ஒன்றும் விளங்க வில்லை. பொதுவாக பாலிசி என்று சொன்னாலே எல்லோரும் வாசலிலேயே பேசி துரத்தி விடுவார்கள். ஆனால் இந்த வீட்டிலோ உள்ளே கூப்பிட்டு உட்கார வைத்து காப்பியையும் கொடுத்து விட்டு நக்கலாகவும் சிரித்து விட்டு போகிறார்களே என்று மண்டையை சொறிந்து கொண்டே காப்பியை குடித்தார்.
அதற்குள் பாலிசி மாமா லொட லொட வென தன் பேச்சை. ஆரம்பித்து விட்டார். என்னோட பாலிசி இப்படி ….அப்படி என்று அடுக்கி கொண்டே போனார்..
வந்தவரோ, சார், ஒரு நிமிஷம், நான் சொல்றதை கேளுங்க என்று இடையிடையே கூறிக் கொண்டே இருந்தார். ஆனால், மாமாவோ, சித்த இருங்கோ.. எல்லாத்தையும் நான் சொல்லிடறேன், நீங்க உங்க டவுட்டை அப்றமா கேளுங்கோ என்று விட்ட இடத்திலிருந்து பேச்சை continue செய்தார். இப்போது தான் வந்தவருக்கு மாமியின் சிரிப்பிற்கான அர்த்தம் புரிந்தது.
ஒரு வழியாக மாமா தன் பாலிசி பேச்சை முடித்து விட்டு, இப்போது சொல்லுங்கள்..இது போதுமா.. இல்லை, இன்னும் எதாவது யோசனை வேண்டுமா என்று..
வந்தவரோ பாவம், வங்கி ஏஜண்ட், பாலிசி எடுக்க கோரி வங்கியிலிருந்து வந்திருக்கிறார். இவருடைய பேச்சை கேட்ட பிறகு, எங்கிருந்து வந்திருக்கிறேன்? எதற்காக வந்திருக்கிறேன் என்று கூறாமல்,
இல்லை சார், இத்தனை சொல்லிட்டேளே, இதுவே போதும் என்று கூறி இங்கிருந்து தப்பித்தால் போதும் என்று அந்த வீட்டை விட்டு உடனடியாக வெளியேறி விட்டார்…
எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings