in ,

சூத்திரங்களை மனப்பாடம் செய்வது எப்படி?? (மாணவர்களுக்காக) – அகிலா சிவராமன்

கணக்கு மற்றும் அறிவியல் சூத்திரங்களை எளிதாக  எப்படி மனப்பாடம் செய்யலாம்???

எல்லோராலும் சூத்திரங்களை அதாவது formula வை ஞாபகத்தில் வைத்திருக்க இயலாது. சில பேருக்கு ஒரு தரவை படித்தாலே மனப்பாடமாகி விடும். ஒரு சில பேருக்கு எத்தனை தரவை படித்தாலும் நினைவில் நிற்காமல் மறந்து போய் விடும். மாணவர்களே, கவலையே வேண்டாம் இனி, வாருங்கள்!! இந்த எளிதான மற்றும் தந்திரமான 7 முறைகளை கையாண்டால் சூத்திரங்களை மனப்பாடம் செய்வது மிக சுலபமாக இருக்கும்.

1.மனப்பாடம் செய்வதற்கு முன்னால் புரிந்து கொள்ளுங்கள்: வெறும் மனப்பாடம் மட்டும் செய்யாமல் அந்த formula எப்படி வந்தது, எவ்வாறு செயல்படுகிறது என்பதை புரிந்து கொண்டு மனப்பாடம் செய்யும் போது மூளையானது இயல்பாகவே அதை நினைவில் வைத்திருக்கும்.

2.Flash card களை பயன்படுத்தவும்:  card-ன் ஒரு பக்கத்தில் சூத்திரைத்தையும் மற்றொரு பக்கத்தில் அதன் செயல்பாட்டையும் எழுதி வைத்து கொள்ளவும். இந்த flash card களை தவறாமல் பார்த்தால் அதன் மூலமாக நினைவாற்றல் வலுபடுத்த படும்.

3.Chunking technique(பகுதிகளாக பிரிக்கும் முறை): மிகவும் கடினமான அல்லது சிக்கலான சூத்திரங்களை சிறு சிறு பகுதிகளாக அல்லது துண்டுகளாக  பிரித்தெடுத்து பிறகு ஒவ்வொன்றையும் தனித் தனியாக மனப்பாடம் செய்யவும். இதனால் நீளமான மற்றும் கடினமான சூத்திரங்களை நினைவு கூர்வதை எளிதாக்கலாம்.

4.நினைவூட்டலையோ அல்லது சுருக்கெழுத்தையோ உருவாக்குங்கள் (create Mnemonics or  Acronyms): சூத்திரங்களை உங்களுக்கு சட்டென நினைவிற்கு வரும் வகையான சொற்றொடர்களாகவோ அல்லது drawing மூலமாகவோ மாற்றி குறித்து வைத்து மனப்பாடம் செய்யலாம் இல்லை என்றால் ஃபார்முலாவின் முதல் எழுத்தை குறிக்கும் வகையில் வேடிக்கையாக எதாவது ஒன்றை நினைவில் வைத்துக் கொண்டு மனப்பாடம் செய்தால் சட்டென நினைவிற்கு வரும்.

5.திரும்ப திரும்ப எழுதுங்கள்: ஒரு சூத்திரத்தை திரும்ப திரும்ப எழுதி பார்க்கும் போது அது நினைவாற்றலை அதிகரிக்கிறது. எழுதும் போதே புரிந்து கொண்டு எழுதினால் இன்னும் நன்றாக நினைவிலிருக்கும்.

6.  பல்வேறு சூழலில் சூத்திரங்களை பயன்படுத்தவும் (use formulas in context): சூத்திரத்தை பயன்படுத்தி பலவிதமான problems-ஐ solve செய்ய முயற்சிக்கவும். அவ்வாறு செய்வதால் சூத்திரத்தையும், solving முறையையும் நினைவில் வைத்து கொள்ள எளிதாக இருக்கும்.

7. வழக்கமான பயிற்சி மற்றும் முறையான இடைக்கால பயிற்சி (regular revision and spaces repitition) : அன்றாடம் கற்பிக்கும் சூத்திரங்களை தினமும் ஒரு முறை revise செய்ய வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது பழைய மற்றும் புதிய ஃபார்முலாக்களை revise செய்ய வேண்டும்.

மாணவர்களே, இந்த 7 technique-ஐ பயன்படுத்தி, ஃபார்முலாவை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்…

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாலிசி மாமாவிற்கே பாலிசியா (சிறுகதை) – அகிலா சிவராமன்

    கருமை நிறத்தின் இரத்தமும் சிகப்பே!!! (சிறுகதை) – அகிலா சிவராமன்