வாழ்க்கையெனும்
இறையின் கோடிங்கில் (record)
பிரமன் ஏடு (Script)
நமக்கெல்லாம்
அடிப்படையில் (BASIC)
நினைவூட்டுவது
அவன் கணக்கில் (Table)
இருள் நீக்கி
வெளிச்சம் பிறக்கும் (insert)
ஒவ்வொரு காலையும்
புத்தாண்டே!
தேயும் துன்பங்களைக் (-) குறைத்து
வளரும் இன்பங்களைக் (+) கூட்டி
பொறாமையைத் (*) தவிர்த்து
பேதங்களை (/) ஒழித்து
சமத்துவத்தை (=) பழகினால்
முற்பிறவி மூட்டைகளாய்ச்
சேர்த்துதவைத்த
கெட்டவைகள் (Get)
நல்லதுவாக (NULL) மாறி
மகிழ்ச்சி (incremental) பெருகும்!
அஃதில்லையேல் (else)
மெய் (True)
அழிந்து (del)
மேற்ச்செல்கையில் (Cloud)
ஊழ்வினையும் (loop) விரட்டுமே
ஒன்றுமில்லாது (1)
ஆன்மா பூஜ்ஜியமே (0)
பிறக்கும் புத்தாண்டில்
கோபம் தாண்டு
பொறாமை தாண்டு
தடைகள் தாண்டு
ஆசைகள் தாண்டு
வெறுப்பைத் தாண்டு
பயத்தைத் தாண்டு
பொய்களைத் தாண்டு..
திருப்பூர் திருவுடையோன் வாழ்த்த,
உங்கள் வாழ்வில்
ஒவ்வொரு நாளும்
பிறக்கட்டும்
பெரு மகிழ்ச்சிப்
புத்”தாண்டு” !
-திருவுடையோன் குமரன்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings