நித்தம் நித்தம் தூக்கம் இன்றி
தத்தை இவளது விழிகள் காத்திருக்கின்றன
சத்தம் இல்லா முத்தம் ஒன்று
யுத்தம் செய்குது என் இதயத்தில்
உடம்பில் உதிரம் அது கரைந்தாலும்
உன் உயுரும் நெளியுதே அடிவயிற்றில்
நல்ல பணித் தேடிச் சென்றவனே
இங்கே வெண்பனியும் என்னைச் சுடுகின்றதே
உந்தன் கால் தடம் பார்த்தே
எந்தன் நாட்கள் மெல்ல நகர்கிறதே
நின் கைகளில் கட்டுண்டு மகிழ
கைக் கட்டைவிரல் கூட ஏங்கிட
நீ பொட்டிட நடு நெற்றியும்
உந்தன் கை விரல்களைத் தேடிட
உனக்காய் சூடிய மலர்கள் கூட
உந்தன் சுவாசம் இல்லாமல் வாட
எனக்கே உறவான எந்தன் உயிரே
உனக்கே உயிரானேன் உன்னாலே உயிர்வாழ்கிறேன்
உந்தன் வரவை நோக்கி பார்த்திருந்தே
எந்தன் உயிரும் இங்கும் உருகுதடா
வலசை போன என் மன்னவனே
உந்தன் சிரசை காண தவிக்கிறேன்
வழிகளைப் பார்த்தே இருவிழிகளும் ஓய்ந்தன
என் மன்னவன் நீ வருவாயென….
#ad
Valentine Gifts 👇
#ad