‘மகள் வரைந்த நிலா…!’ இரண்டரை வயதே இனிய மகளுக்கு! கொட்டி விட்ட குவளை நீரைத் தொட்டுத் தொட்டு வரைகிறாள் தரையில் நிலா…! ஊர்கோல நிலவை ஒரு படி விஞ்சிவிடுகிறது… நீர்க்கோல நிலா..! தத்தி நடக்கும் மகளை முத்த முந்துகின்றன தரைநிலவும் பிறைநிலவும் தாவி எடுக்கிறேன் தரை நிலவையும், பிறை நிலவையும் வென்று சிரிக்கிறது பேசும் நிலவாய் மகள் …! அவள் வரைந்த நிலா..! அவளின் ஐந்து விரல்கள் பதிய அடி வாங்கிய நிலா வீட்டுச் சுவரின் எருவாக…! காதல்..! ஊர்கூடி இழுத்தாலும் நகராத தேர் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடி வருகிறது ஒருத்தருக்கு….! அவர் என்ன கடவுளா? அதற்கும் மேல்.. காதலர்..!
#ad
#ad