in

காத்திருந்த நெஞ்சம் (சிறுகதை) – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)

காத்திருந்த நெஞ்சம்... (சிறுகதை)
ன்று ராகவ்’ன் பத்தாவது பிறந்த நாள். அவன் அப்பா ராஜேஷ், ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் எம் டி. அம்மா சாருலதா, ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தின் சீனியர் வைஸ்பிரசிடென்ட்.  பணத்திற்கும் வசதிக்கும் குறைவே இல்லை

 

ராகவ் எதையும் வேண்டும் என்று கேட்கவே வேண்டாம், மனதில் நினைத்தாலே போதும், உடனே அது அவன் கையில் இருக்கும்.

ராகவ்’ன் அப்பாவும் அம்மாவும், அன்று விடுமுறை எடுத்து இருந்தனர். வீட்டை படாடோபமாக அலங்கரிக்க, ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்திருந்தார்கள்

மாலை நான்கு மணிக்கு பர்த்டே பார்ட்டி ஆரம்பிப்பதாக ஏற்பாடு. ராஜேஷும் சாருலதாவும் தங்களின் பிரபல நணபர்களை அழைத்திருந்தார்கள்

நகரத்தின் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து, சிறப்பு உணவு வகைகளை, அந்த ஹோட்டலின் பணியாளர்களே விருந்தினர்களுக்கு பரிமாறும்படி. ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

ராகவ்’ன் நெருங்கிய நண்பர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவனுக்கு விலையுயர்ந்த கோட் சூட் தயாராய் இருந்தது

மூன்றறை மணிக்கே, பெற்றோர் இருவரும் அழகாய் உடையணிந்து தயாராகி விட்டனர். ராகுலையும் அழகுற அலங்கரித்து, பிறந்த நாள் வைபவம் நடக்கும் இடத்திற்கு மூவரும் வந்து சேர்ந்தனர்

விருந்தினர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். வந்த விருந்தினர்கள் பலரும், தங்கள் தகுதிக்கு மீறி, ராஜேஷையும் சாருலதாவையும் மகிழ்விக்க, விலையுயர்ந்த பரிசுப் பொருள்களைக் கொண்டு வந்து அடுக்கினர்

எல்லாவற்றையும் மெல்லிய முறுவலுடனும், நன்றி நவிலலுடனும் பெற்றுக் கொண்டான் ராகவ்

கேக் வெட்டும் நேரம் நெருங்க, “ராகவ் இங்க வா, எல்லாரும் வந்தாச்சு கேக் வெட்டலாம்” என பிள்ளையை அழைத்தாள் சாருலதா

கேக்கின் அருகே வந்து நின்ற ராகவ், குழுமியிருந்த எல்லாரையும் பார்த்து புன்னகைத்தான். பின் மீண்டும் மீண்டும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான், யார் வரவையோ எதிர்பார்ப்பவன் போல்

“டைம் ஆயிடுத்து ராகவ், கேக் கட் பண்ணு” என சாருலதா அவசரப்படுத்தினாள், அவளுக்கு எல்லாமும் மணியடித்தது போல் நேரத்திற்கு நடக்க வேண்டும்

“கொஞ்சம் இரும்மா” என்ற ராகவ், மீண்டும் வாசலையே பார்த்தான் அப்போது ஒரு ஆட்டோ வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து வயதான ஒரு அம்மாள், சாயம் போன புடவையில் இறங்கினாள். அந்த முதிய பெண்மணியைக் கண்டதும், சாருலதாவின் முகம் இறுகியது

“யார் கூப்பிட்டது இவளை? உங்க வேலையா?“ என்றாள் ராஜேஷிடம், மெல்லிய குரலில்.  புரியாது விழித்தான் ராஜேஷ்

முதியவரைக் கண்டதும், “பாட்டி“ என முகம் முழுக்க புன்னகையுடன் கத்திக் கொண்டே ஓடிய ராகவ், “வா பாட்டி, உனக்கோசரம் தான் காத்துக்கிட்டு இருந்தேன்” என்றபடி அவரை கட்டிக் கொண்டான்

பாட்டியை கைகளை தன் கையோட பிணைத்து அணைத்தபடியே, கேக் இருந்த மேஜையின் அருகே அழைத்து வந்தான் ராகவ்

எல்லோரும் “ஹாப்பி பர்த்டே” என பாட ஆரம்பிக்க, மகிழ்வுடன் கேக்கை வெட்டினான் ராகவ்

வெட்டிய கேக்கின் முதல் துண்டை, தனக்கு தான் பிள்ளை தருவான் என்ற எதிர்பார்ப்புடன் ராகவ்’ ன் பெற்றோர் இருவரும் ஆவலுடன் பார்க்க, அவனோ தன் பாட்டிக்கு ஊட்டினான்

பாட்டியும் தன் கையில் மறைத்து வைத்திருந்த சிறிய லட்டை ராகவ் கையில் வைத்து, “ராகவ் கண்ணா, உனக்கு லட்டு பிடிக்குமேனு கொண்டு வந்தேன்” என்றார் பாசத்துடன் லட்டை கையில் வாங்கிய ராகவ், எல்லா பரிசு பொருட்களையும் ஒருமுறை பார்த்து விட்டு, “பாட்டி, இது எல்லாத்தையும் விட, எனக்கு ரெம்பப் பிடிச்ச பரிசு, நீயும் நீ கொண்டு வந்த லட்டும் தான்” என்றபடியே, ஆசையுடன் லட்டை உண்டான் ராகவ்

இத்தனை மகிழ்வுடன் வரவேற்ற அந்த பாட்டி வேறு யாருமல்ல, ராஜேஷின் தாயார் பார்வதி தான்

சாருவின் தொந்தரவு தாங்காமல், அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து இருந்தான் ராஜேஷ். ராகவ் தான், தன் பெற்றோருக்கு தெரியாமல், பாட்டிக்கு தொலைபேசியில் அழைத்து, தன் பிறந்தநாளுக்கு வந்தே ஆக வேண்டுமென கோரிக்கை வைத்தான்

பணம் பாதளம் வரை பாய்ந்தாலும், பாட்டியையும் பேரனையும், அவர்களின் பாசவலையையும் எந்த சக்தியாலும் பிரிக்க இயலவில்லை

கதையின் ஆசிரியர் பற்றி:-

முதலில், சஹானா இணைய இதழுக்கு இந்த கதையை பகிர்ந்தமைக்கு, TRC அங்கிள் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

அவருக்கு அறிமுகம் கொடுக்கும் தகுதி, எனக்கு இருக்கிறதா என தெரியவில்லை. அதோடு, அவருக்கு அறிமுகமும் தேவையில்லை. TRC என்ற சுருக்கப் பெயரால், பலராலும் அறியப்படுபவர். மஹாபெரியவா அவர்களின் பக்தர், அவரைப் பற்றி பேசுவதையும் எழுதுவதையும் அனுதினமும் விரும்பி செய்பவர்

தன் பெயர் புகழ் பதவி எதையும் தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல், Down to Earth என ஆங்கிலத்தில் சொல்வது போல், எல்லோரிடமும் ஒரே போல் இயல்பாய் பழகும் TRC அவரின் தன்மை, தனித்துவமானது. I think that’s reason, he reached heights in career as well Life

கடந்த டிசம்பரில், சென்னைக்கு சென்ற போது, இவரின் துணைவியார் உமா மாமியின் விருந்தோம்பலையும் அனுபவித்தோம். நன்றி அவருக்கும்

TRC அவர்கள் பற்றி, சில வரிகள் இங்கு உங்களுக்காக:-

A multi-faceted person, with knowledge of Music, Arts, Literary skills, Sanskrit, Slokas, Cooking and what not. A music critic and on the trust of a few Sabhas

He is associated with some of the educational institutions for Girl Children, as a Trust Member of their Board. A speaker in many forums, a CA with great reputation with banks. Most of today’s bankers and even Directors have worked with him or for him

Was a director of Karnataka Bank and its audit committee chairman

Click here to Subscribe to Sahana Magazine’s Stories / Articles (For FREE)

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. இந்தக் கதை ஏற்கெனவே படிச்சிருக்கேனே! அது சரி, நீங்க சென்னை போனப்போ உங்களுக்கு விருந்தோம்பினாரா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்களுக்கு எதுவுமே தரலை! என்ன பாரபக்ஷம் பாருங்க ஏடிஎம்! (ஹிஹிஹிஹி, இங்கே வம்பு வளர்க்கலாம் இல்ல?)

வாழைக்காய் கோஃப்தா – A Delicious Bihar Special Recipe by ஆதி வெங்கட்

மோனம் (சிறுகதை) – எழுதியவர் : வித்யா அருண், சிங்கப்பூர்