in

கற்பக மலர்கள் (சிறுகதைப் தொகுப்பு) – எழுத்தாளர் சியாமளா வெங்கட்ராமன் – ஸ்ரீ ரேணுகா பதிப்பக வெளியீடு

கற்பக மலர்கள்

வணக்கம்,

ஜூன் 25, 2022 அன்று, நம் ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் வெளியீடாக “கற்பக மலர்கள்” என்ற அழகான இந்தச் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.

‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’  என்றார் பாரதி. 

அந்த வகையில் பார்த்தால், கணக்கிலடங்கா புண்ணியம் சேர்த்தவர் இந்த நூலின் ஆசிரியர் திருமதி. சியாமளா வெங்கட்ராமன் அவர்கள். ஆம், பல்லாயிரம் மாணவர்களை வழிநடத்தி அவர்களின் எதிர்காலத்திற்கு வித்திட்ட பெருமைக்கு உரியவர் இவர். 

Age is just a number என ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு, அதற்கு சிறந்த உதாரணமும் சியாமளா அம்மா தான். நல்லாசிரியர் விருது பெற்றவர், சென்னையில் ஒரு லேடீஸ் கிளப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பவர், தற்போது பணி ஓய்வு பெற்ற பின் எழுத்துத் துறையில் கால் பதித்து, இளையவர்களுக்கு இணையாய் சாதித்து வருகிறார். 

இந்த நூலில் இடம் பெற்றுள்ள சில கதைகள், ‘சஹானா இணைய இதழில்’ (www.sahanamag.com) வெளியாகி நிறைய பேரால் விரும்பி வாசிக்கப்பட்டது என்பதை இந்த தருணத்தில் பகிர்வதில் மகிழ்ச்சி. இன்னும் நிறைய நூல்கள் படைக்க வாழ்த்தி வணங்குகிறேன்.

அக்னி பிரவேசம், வைராக்கியம், பெற்ற மனம், லட்சுமணன் கோடு, கண்டிஷன், ஊனம், மண்வாசம், இப்படியும் மனிதர்கள், உபகாரம், யாதுமாகி நிற்பவள் பெண், அழகி, நதியா ஒரு கேள்விக்குறி, வெளுத்ததெல்லாம் பால் , கண்ணான கண்ணே ஆகிய 14 சிறுகதைகள் கொண்ட இந்த புத்தகத்தை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 77082 93241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகம் உங்களை வந்து சேரும். If you have any questions, we can be reached at 77082 93241. Thank you.

என்றும் நட்புடன், நிறுவனர் – ஸ்ரீ ரேணுகா பதிப்பகம் 

தொடர்பு எண்: 77082 93241

மின்னஞ்சல்: srirenugapathippagam@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆண்டு விழா நிகழ்வு – ஆகஸ்ட் 2, 2022

    காக்க! காக்க! ❤ (பகுதி 5) – ✍ விபா விஷா, அமெரிக்கா