in ,

அம்புஜத்தின் ஜம்பம் (சிறுகதை) – ✍ ஆர். ஸ்ரீப்ரியா, சென்னை

அம்புஜத்தின் ஜம்பம்
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 2)

ட்ஜ் கோபாலகிருஷ்ணன் என்றால் சென்னையில் மிகவும் பிரபலம். அடையாறில் உள்ள பெரிய பங்களாவில் கோபாலு என்ற கோபாலகிருஷ்ணன் தன் மனைவி அம்புஜம், தன் மகன் அனந்து, அவன் மனைவி ஸ்ரீநிதி மற்றும் இரண்டு பேரன்களுடன் வசித்து வந்தார்

கோபாலகிருஷ்ணனின் இளைய மகள் சுஜாதா, தன் கணவர் மற்றும் மகளுடன் அமெரிக்காவில் வசித்து வந்தாள்

பெரிய பார்டர் வைத்த பட்டுப்புடவை சரசரக்க காரில் இருந்து இறங்கி வந்தாள் அம்புஜம். அன்றைய நாளிதழில் வந்திருந்த செய்திகளை வாசித்தபடி, வரவேற்பறையில் அமர்ந்திருந்தார் கோபாலகிருஷ்ணன்

உள்ளே நுழைந்தவுடன், “பட்டு மாமி, ஜில்லுனு ஒரு சாத்துக்குடி ஜூஸ் கொண்டு வாங்கோ” என அதிகார தோரணையில் அழைத்தாள் அம்புஜம்

அடுத்த சில நொடிகளில், சமையல் வேலை செய்யும் பட்டு மாமி சாத்துக்குடி ஜூஸ் கொண்டு வந்தாள். அதை ஒருவாய் ருசித்து விட்டு, அங்கிருந்த கண்ணாடி மேசையில் வைத்தாள்

“ஏன்னா, இன்னைக்கு லேடீஸ் கிளப்பில் எனக்கு எத்தனை வேலை தெரியுமோ? எல்லோரும் நான் கட்டி இருந்த இந்த மாம்பழ கலர் புடவை பார்டர் வித்தியாசமா இருக்கறத பத்தியே பேசிண்டு இருந்தா” என்றாள்

‘ஆமாம், வித்தியாசமா தான் இருக்கும், அது அறுபதாயிரம் ரூபாயை முழுங்கி இருப்பது எனக்குத் தானே தெரியும்’ என மனதில் நினைத்த கோபாலகிருஷ்ணன், “ஆமாம் அம்புஜம், ரொம்ப நன்னாருக்கு, அந்த புடவைக்கே நீ கட்டிண்ட பிறகு தான் மதிப்பு கூடிருக்கு” என அம்புஜம் குளிரும்படி ஐஸ் வைத்தார்

“ஏன்னா, நீங்க இந்த வைர வளையலை கவனிக்கலையே. போன வாரம் நானே டிசைன் போட்டு ஆர்டர் கொடுத்து, நேத்து தான் வந்தது” என்று காண்பித்தாள்

“ரொம்ப அருமையா இருக்கு அம்புஜம்” என்ற கோபாலகிருஷ்ணன் ‘இது வேறயா? என்னோட பேங்க் பாலன்ஸ்ல மேலும் ஒரு பெரிய தொகைக்கு வேட்டு வெச்சுருக்கா போலயே’ என எண்ணினார்

“டிரைவர் இங்க வா” என ஹாலில் இருந்து அம்புஜம் ஒரு குரல் கொடுக்க, டிரைவர் கோபால் ஓடி வந்து “சொல்லுங்கம்மா” என்றான்

“டாமிக்கு ரெண்டு நாளா தொண்டை சரியில்லை. டாக்டரை வீட்டுக்கு வந்து டாமியை பாக்க சொல்லு” என்றாள்

“இதோ இப்பவே போறேன்மா” என்றான் டிரைவர்

‘எனக்கு மூணு நாளா தலைவலி, ஏன்னு கேக்க ஆளில்ல ஹ்ம்ம், டாமிக்கு நல்ல அதிர்ஷ்டம்’ என நினைத்துக் கொண்ட கோபாலகிருஷ்ணன், “டாக்டரிடம் நாமே டாமியை கூட்டிண்டு போலாமே, அதை விட்டுட்டு அவரை அனாவசியமா வீட்டுக்கு வர சொல்லனுமா” என்றார் அம்புஜத்திடம்

“ஏன்னா… நமக்குன்னு ஒரு பிரெஸ்டிஜ் இருக்கு, நாம அப்படித் தான் நடந்துக்கணும்” என்றாள் அவள்

“உங்களுக்கு விஷயம் தெரியுமா… எங்க லேடீஸ் கிளப்ல என்னை பாராட்டி ஒரு விழா ஏற்பாடு செய்யப் போறாங்க” என பெருமையாய் கோபாலகிருஷ்ணனிடம் சொன்னாள் அம்புஜம்

“அப்படியா அம்புஜம்… வாழ்த்துக்கள். அது இன்னும் செய்தித்தாளில் வரலையே” என நமுட்டு சிரிப்போடு கேட்டார்

“உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான். எனக்கு நிறைய வேலை இருக்கு, விழாவுக்கு போட துணிமணிகள், நெக்ல்ஸ் எல்லாம் வாங்கணும். உங்க கூட பேச நேரமில்ல” என அவர் பதிலுக்கு காத்திராமல் வெளியேறினாள்

‘ஆமாம்… என் பணப்பை காலி ஆக வேண்டிய நேரம் வந்து விட்டது’ என மனதில் எண்ணிக் கொண்டு, செய்தித்தாளை படிக்கும் வேலையைத் தொடர்ந்தார்

கோபாலகிருஷ்ணனின் சித்தப்பா பையன் விச்சு என்ற விஸ்வநாதன், தன் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தான். போன மாதம் விச்சு தன் குடும்பத்துடன் சென்னை வந்து, கோபாலகிருஷ்ணனின் குடும்பத்தாரை தன் மகன் ஸ்ரீகாந்த் திருமணத்திற்கு அழைத்துச் சென்றான்

ஸ்ரீகாந்த் கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வார காலமே இருந்த நிலையில், அதோடு அடுத்த இரு நாளில் கோபாலகிருஷ்ணனின் மகள் சுஜாதா குடும்பத்துடன் சென்னை வருவதால், வீடு அமர்க்களப்பட்டது

“அம்மா, நான் வந்ததும் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு, அப்புறம் ஷாப்பிங் போகணும்” என்றாள் சுஜாதா போனில்

“சரிடி… நானும் நிறைய ஷாப்பிங் பண்ணனும், ஸ்ரீகாந்த் கல்யாணத்துக்கு கோயம்பத்தூர் போகணுமே. நீ வந்ததும் ஷாப்பிங் பண்ணிட்டு பேக்கிங் பண்ணி கிளம்ப சரியா இருக்கும்” என்றாள் அம்புஜம்

றுநாள் அம்புஜத்தின் தம்பி வெங்கட்ராமன், தன் மனைவி மீனா மற்றும் மகள் ரேவதியுடன்,  அக்காவை காண பெங்களூரில் இருந்து வந்தான்.

அவர்களை வரவேற்ற கோபாலகிருஷ்ணன் “வாப்பா வெங்கட், உன் அக்கா வீட்டில் இல்லை, கொஞ்சம் நேரத்தில் வந்து விடுவாள். எல்லாருக்கும் காபி கொண்டு வாம்மா ஸ்ரீநிதி” என மருமகளை பணித்தார்

“எல்லாரும் வாங்கோ, இதோ காப்பி கொண்டு வரேன்” என அடுப்படிக்கு சென்றாள் ஸ்ரீநிதி

“நானும் வந்து உதவி செய்யறேன் ஸ்ரீநிதி” என மீனாவும் அடுப்படிக்கு சென்றாள்

“அக்கா எப்படி இருக்கா?” என வெங்கட்ராமன் கோபாலகிருஷ்ணனிடம் கேட்க

“அவளுக்கு என்ன… ரொம்ப நல்லா இருக்கா. இப்போ கூட லேடீஸ் கிளப் விழா சம்பந்தமா தான் போயிருக்கா” என்றார்

“இன்னும் அவ லேடீஸ் கிளப் வேலை எல்லாம் விடலையா?” என வெங்கட்ராமன் கேட்க

“அது அவ ரத்தத்தோடு கலந்தது, சொல்லப் போனா இன்னும் ஜாஸ்தி தான் ஆகிருக்கு” என்றார் கோபாலகிருஷ்ணன் மெல்லிய புன்னகையுடன்

“அப்ப உங்க பணப்பைக்கு நிறைய வேலைனு சொல்லுங்கோ” என கேலி செய்தான் வெங்கட்ராமன்

அதே நேரம் அம்புஜம் வீட்டிற்குள் நுழைய, “வாடா எப்படி இருக்க? என்ன பத்தி தான் பேசிண்டுருந்த போல” என்றாள் தம்பியிடம் 

“உங்க அக்காவுக்கு பாம்பு செவி” என கிசுகிசுத்தார் கோபாலகிருஷ்ணன் 

“ஆமாம் அக்கா, உனக்கு லேடீஸ் கிளப்பில் பாராட்டு விழானு சொன்னார், அதான் பெருமை பட்டுட்டுருந்தேன்” என சமாளித்தான் வெங்கட்ராமன் 

“ஆமாம்டா, இந்த லேடீஸ் கிளப்பில் ஒவ்வொரு வருஷமும் என்னை பாராட்டி விழா நடத்தறா, வேண்டாம்னா கேட்க மாட்டேங்கறா. நீங்க செய்யும் உதவிக்கும், வேலைக்கும் இந்த பாராட்டெல்லாம் ரொம்ப சாதாரணம் மேடம் அப்படிங்கறா” என பெருமைபட்டுக் கொண்டாள் அம்புஜம் 

‘வெங்கட்ராமா… நீ பலே கில்லாடிடா, நல்லா சமாளிக்கற’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டார் கோபாலகிருஷ்ணன் 

மீனாவும் ஸ்ரீநிதியும் எல்லோருக்கும் காப்பி கொடுக்க, “எப்படிம்மா இருக்க, குழந்தை எப்படிருக்கா?” என தம்பி மனைவியிடம்  குசலம் விசாரித்தாள் அம்புஜம் 

“எல்லாரும் நல்லா இருக்கோம் அக்கா. ரேவதியும் வந்துருக்கா, குழந்தைகளோட  விளையாடிண்டு இருக்கா” என்றாள்

“அப்புறம் வெங்கட்ராமா, ஸ்ரீகாந்த்துக்கு கல்யாணம், தெரியுமா?” என அம்புஜம் கேட்க 

“தெரியும் அக்கா, எங்களுக்கும் பத்திரிக்கை வந்தது” என்றான் வெங்கட்ராமன் 

“சரிடா, நாங்க கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடியே போறோம். நீயும் மீனாவையும்  குழந்தை ரேவதியையும் அழைச்சுட்டு வாயேன், நம்ம எல்லோரும் சேர்ந்து போலாம்” என அம்புஜம் கூற 

“இல்லைக்கா, எனக்கு ஆடிட்டிங் டைம், ஆபீஸ்ல லீவு போட முடியாது. நாங்க கல்யாணத்துக்கு காலைல வந்துடுவோம்” என்றான்.

“சரிடா உன்னிஷ்டம். அப்புறம் அடுத்த வாரம் சுஜாதா வரா, நாங்கல்லாம் கல்யாணத்துக்கு டிரஸ் நகைகள் ஷாப்பிங் பண்ண போறோம், மீனாவையும் ரேவதியையும் அதுக்காச்சும் அனுப்பு. கல்யாணத்துக்கு நம்ம வீட்டு பொண்ணுங்க எல்லாம் நல்ல அகல சரிகை வெச்ச புது பட்டுப் புடவை போட்டுட்டு போனா தான் மதிப்பா இருக்கும்” எனவும் 

“சரிக்கா பாக்கலாம்” என்றவன், ‘ஆகா நம்ம பணப்பைக்கும் வேட்டு வரும் போலருக்கே’ என மனதிற்குள் நினைத்து கொண்டான். அவன் மனதை படித்தவராய் சிரித்தார் கோபாலகிருஷ்ணன்

சுஜாதா குடும்பத்துடன் சென்னை வந்திறங்கி, தன் பெற்றோர் வீட்டில் நன்கு ஓய்வெடுத்தாள்.

மறுநாள், வீட்டில் உள்ள பெண்டிர் கூட்டம், ஷாப்பிங் செய்யக் கிளம்பினர். ஆடவர்களுக்கு, குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஷாப்பிங் செய்ய காரில் கிளம்பிய பெண்கள் குழு, முதலில் தி.நகர் சென்று பெண்களுக்கான புடவைகளை வாங்கலாம் என முடிவெடுத்தனர்

“அம்மா, எனக்கு சிம்பிளா சில புடவைகள் போதும், இன்னும் நான் காட்டாத புடைவைகளே நிறைய இருக்கு” என சுஜாதா கூற 

“என்னடி சொல்ற… நல்ல அகலமான பார்டர் வெச்சு லேட்டஸ்ட் காஞ்சிபுரம் புடவை தான் நம்ம எல்லோருக்கும் வாங்கப் போறோம். கல்யாணத்துக்கு கட்டிண்டு போனா எல்லோரும் எங்க வாங்கினேள் கேட்டு, மூக்கு மேல விரலை வைக்கணும்” என்றாள் அம்புஜம் 

பிரமாண்டமான புடவை கடலில் நுழைந்த அம்புஜமும் அவர் குழுவினரும், நேராக பட்டுப்புடவை பகுதிக்கு சென்றனர் 

அங்கு பணிபுரிந்த பெண்ணிடம், “இருப்பதிலேயே விலை மதிப்புள்ள புடவைகளை மட்டும் காட்டு” என்ற அம்புஜம், தன் வைர நெக்லஸை சரி செய்து கொண்டாள்

அம்புஜத்தின் ஜம்பத்தை பார்த்த கடை மேலாளர்,  “அவங்க எல்லோருக்கும் கூல்ட்ரிங்க்ஸ் குடு” என கடையில் பணிபுரியும் சிம்பந்தியிடம்  கூறினார்.

ஒருவழியாக, நல்ல விலை மதிப்புள்ளதாக ஆறு பட்டுப் புடவைகள் வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்தனர்

“அம்மா… குழந்தைகளுக்கு டிரஸ் எடுத்துட்டு வீட்டுக்கு போலாம்” என சுஜாதா கூற 

“என்னடி அதுக்குள்ள வீட்டை பத்தி பேசற? இப்போ தான வந்தருக்கோம். குழந்தைகளுக்கு டிரஸ் எடுத்துண்டு, ஒரு நல்ல பைவ் ஸ்டார் ஹோட்டல் போய் லஞ்ச் சாப்ட்டுட்டு,  அப்புறம் நகைக் கடைக்கு போய் புது டிசைன்ல நெக்லஸ், வளையல், தோடு எல்லாம் வாங்கணும்” என்றாள் அம்புஜம் 

“எதுக்கும்மா நகையெல்லாம்? நம்மகிட்ட தான் நிறைய இருக்கே, அதையே கல்யாணத்துக்கு போட்டுண்டு போலாமே” என மகள் கேட்க 

“அதெல்லாம் ஏற்கனவே போட்டுண்டாச்சு, இப்ப கல்யாணத்துக்கு போகும் போது புது டிசைன்ல நன்னா பளிச்சுனு போட்டுண்டு போனாத் தான் நமக்கு மதிப்பு” என்றாள் அம்புஜம் அலட்டலாய் 

“என்னவோ உன் இஷ்டப்படி பண்ணிக்கோ” என சலித்துக் கொண்டாள் சுஜாதா.

குழந்தைகளுக்கு வேண்டிய துணிகள் வாங்கிய பின், “அம்மா, லஞ்சுக்கு இங்கயே ஒரு நல்ல சைவ ஹோட்டல் இருக்கு. இங்கயே சாப்ட்டுடலாமே, எதுக்கு ஸ்டார் ஹோட்டலெல்லாம்” என சுஜாதா கேட்க 

“நான் எப்பவும் வெளில வந்தா ஸ்டார் ஹோட்டல்ல தான் சாப்பிடுவேன்னு உனக்கு தான் தெரியுமே சுஜாதா. அங்க தான் நிறைய வெரைட்டிஸ் இருக்கும்.  எனக்கும்  ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிட்டா தான் உடம்புக்கு ஒத்துக்கும்” என்றாள் பெருமையாய் 

‘அம்மாவை மாற்ற முடியாது’ என ,மனதிற்குள் நினைத்த சுஜாதா, ஸ்டார் ஹோட்டல் சென்று உணவுண்டு, பின் நகைக்கடைக்கு சென்றனர் 

அம்புஜம் நகை கடையையே ஒரு புரட்டு புரட்டினாள். வைர நகைகள் விற்கும் இடம், தங்க நகைகள் விற்கும் இடம் என, அந்த கடையில் எல்லா இடத்திலேயும் புது மாடலில் எல்லோருக்கும் வளையல், தோடு, செயின், நெக்லஸ் என வாங்கிக் குவித்தாள்

‘எல்லாம் வாங்கியாச்சு வீட்டுக்கு போலாம்’ என அம்புஜம் நினைத்த நொடியில்

அவளின் அருகில் வந்த கடை மேனேஜர், “அம்மா, நீங்க பிளாட்டினம் நகை செக்சன் பாக்க மறந்துட்டீங்க, இப்ப பிளாட்டினம் நகைகள் தான் ட்ரெண்ட். அதுல நிறைய புது மாடல் டிசைன்கள் எல்லாம் வந்துருக்கு” என, வாடிக்கையாளரை புரிந்த வியாபாரியாய் தன் அஸ்தரத்தை அம்புஜத்தின் மீது ஏவினார் அவர் 

‘ஆஹா, அடுத்த பெரிய தொகைக்கு கடைக்காரன் அடி போடறானே’ என புரிந்து கொண்ட சுஜாதா, “டைமாச்சும்மா, வீட்டுக்கு போலாம், அதான் நிறைய நகைகள் வாங்கியாச்சே”  என்றாள்

“இல்ல சுஜாதா, நான் கூட மறந்துட்டேன் பாரு. நல்லவேளை மேனேஜர் பிளாட்டினம் பத்தி சொன்னார். போன மாசம் லேடீஸ் கிளப்ல நடந்த விழால கலெக்டர் மனைவி பிளாட்டினம் நெக்லஸ் தான் போட்டுண்டு வந்தா. அதை எல்லோரும் வெச்ச கண் வாங்காம பார்த்துண்டே இருந்தா, ரொம்ப நன்னா இருக்குனு பாராட்டினா” என கூறிக் கொண்டே, பிளாட்டினம் நகைகள் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தாள் அம்புஜம்

ஒருவழியாய், இரண்டு பிளாட்டினம் நெக்லஸ் வாங்கிய பின் கடையை விட்டு வெளியேறினர்

காலையில் சென்ற பெண்கள் குழாம், இரவு பத்து மணிக்கு கலகலவென பேசிக் கொண்டே வீடு திரும்பினர்

அடுத்த தினம் காலை எழுந்ததும், கோவைக்கு செல்ல வேண்டியதை பெட்டியில அடுக்கத் தொடங்கினர்

“இட்லிக்கு மாவு அரைச்சு தொட்டுக்க  மிளகாய் பொடி, புளிக்காய்ச்சல் எல்லாம் செஞ்சுடுங்கோ மாமி” என பட்டுமாமிக்கு கட்டளையிட்டாள் அம்புஜம்

பயணத்திற்கு இட்லி, மிளகாய் பொடி, புளிக்காய்ச்சல் அதற்கு தொட்டு கொள்ள வடாம், தயிர் சாதம் மற்றும் மாவடு என திட்டமிட்டனர் 

“காலைல நேரத்துலயே கிளம்பணும், அதனால எல்லாரும் சீக்கிரம் தூங்க போங்கோ” என விரட்டினார் கோபாலகிருஷ்ணன் 

றுநாள் காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து கிளம்பி, ஆறு மணிக்கு  ஹாலில் ஆஜர் ஆனார்கள் அனைவரும், அம்புஜம் தவிர்த்து. அவள் மட்டும் மேல் மாடியில் உள்ள தன் அறையில் இருந்து வரவே இல்லை.

“அம்புஜம் என்ன பண்ற? எல்லாரும் வந்தாச்சு. நீ மட்டும் தான் லேட். சீக்கரம் வா“ என்றார் கோபாலகிருஷ்ணன் 

“ஊர்ல நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கு, சபைல அது இல்லாம நம் கெளரவம் என்னாறது, அதான் பார்த்துண்டுருக்கேன்“ என்றாள் அறைக்குள் இருந்த படியே 

மேலும் அரைமணி நேரமாகியும் அம்புஜம் கிளம்பி வந்தபாடில்லை. எல்லோரும் பொறுமையிழந்த நேரத்தில், நல்ல அகலமான பார்டர் வைத்த  பட்டு புடவையில், வைர முக்குத்தி மற்றும் வைர கம்மல் ஜொலிக்க, நகைகள் அணிந்து, தான் தேடிக் கொண்டிருந்த பல் செட்டை அணிந்து கொண்டு, ஜம்மென்று இறங்கி வந்து “நான் ரெடி, கிளம்பலாம்” என்றாள் அம்புஜம் 

“எத்தனை லேட் பண்ணிட்ட அம்புஜம். உன் பல் செட்டை நைட்டே எடுத்து வெச்சிருந்தா இவ்வளவு லேட் ஆகிருக்காதுல்ல”  எனவும் 

“அதான் இப்ப வந்துட்டனே, கிளம்பலாம்” என தன் பல் செட்டில் உள்ள முத்துப்பல் தெரிய சிரித்து, ஜம்மென்று காரில் ஏறி தன் பேத்தி பேரன்களுடன் கோவை செல்லக் கிளம்பினாள். 

அம்புஜத்தின் ஜம்பம், கோவையை நோக்கி பயணம் செய்யத் துவங்கியது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad – கொலு பொம்மைகள் / ஸ்டாண்ட் /பரிசு பொருட்கள் வாங்க Amazon இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

 

நவராத்திரி தொடர்பான அனைத்து பதிவுகளும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

#ad – தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

10 Comments

  1. Superb story that protrays the rich tamil brahmin culture. The characters and the language style of the story reminds the the real incidents and hence connects us to the incidents of our life.
    Writer , Sri Priya has rightly gave warning to real Ambujams to be very mindful about their attitude as they may lose their self respect if they lose their dentures..
    Also it claims that attitude of some people will never change…

    Thank you , Priya for giving wonderful experiences.

  2. Superb story that protrays the rich tamil brahmin culture. The characters and the language style of the story reflects the real incidents and hence it reminds and connects us to the situations of our real life .. shopping hungama , attending marriage function , mind voices …

    Writer Sri Priya has rightly given warnings to all real-life Ambujams to be very mindful with their attitude, as they may lose their sekf-respect if they miss their Dentures.

    The story also showcases how some people hold on to their attitudes , even they have some shortcomings.

    Thank you Priya for the wonderful story full of messages and experiences.

  3. அருமையாக, நகைச்சுவை இழையோட, யதர்த்தமான நடையில் சிறப்பாக எழுதி
    இருக்கார். நிறைய கதைகள் எழுதி மேல், மேலும் நிறைய பரிசுகள் பெற வேண்டும் என்று மனசார வாழ்த்துகிறேன் அவரை.
    இறைவனின் பரிபூரண ஆசி எப்போதும் இவருக்கு உண்டு.
    திலீப்குமார்
    சாயிராம்

  4. This is one of the cutest story which I liked very much, am a big of her sirukathaigal.. While reading itself I can realize a drama running inside my thoughts and can feel each of the characters. Feeling like old classic movies like Eithir Neechal sowkar janaki character in ambujam..

  5. அம்மாடியோ… இந்த மாமிக்கு அம்புஜம் ன்னு பேர் வெச்சதுக்கு பதிலா ஜம்புஜம் ன்னு வெச்சு இருக்கலாமே… சூப்பர் கதை… செம காமெடி போங்கோ…. பேஷ் பேஷ்….

  6. மிகவும் அருமையான நகைச்சுவை உணர்வுள்ள கதை…. சிரிப்போ சிரிப்பு…. அம்புஜம் என்று பெயர் வைத்ததற்கு பதிலாக ஜம்புஜம் என்று வைத்திருக்கலாம்….

ஏழு சகோதரர்கள் (சிறுகதை) – ✍ முத்துச்செல்வன், ஆலமரத்துப்பட்டி, முசிறி, திருச்சி

உறுத்தல்… (சிறுகதை) – ✍ சந்துரு மாணிக்கவாசகம், மாங்காடு, சென்னை