ஒரு வாய் சோறுங்க
மாங்காய கூறு கட்டி
மலைபோல நம்பிக்கையோட
வித்துடும்னு காத்திருக்கேன்
அரிசி கஞ்சிய குடிக்கும்
நெனைப்பிலயே நானிருக்க
போற வார மக்க மகவெல்லாம்
பேரம் பேசி பேசியே
உச்சிப் பொழுதும் கடந்திருச்சு
தாகத்துக்கு நீச்ச தண்ணிய
குடிச்சது போக மிஞ்சினத
கரைச்சு பசிக்கு குடிச்சுப்புட்டு
கொளுத்துற வெய்யிலுக்கு
யணலுல சாஞ்சு காத்திருக்கேன்
வீட்டுக்கு போகையில
கொஞ்சமேனும் தலைப்பாரம்
கொறையட்டுமே
எம்மனசும் தான்
நிறையட்டுமே
நாலு பழத்த வாங்கி
எம்மனச குளிர வெச்சா
காலத்துக்கும் வாழ்த்துமய்யா எம்மனசு
காலத்துக்கும் வாழ்த்துமய்யா எம்மனசு
வாங்கய்யா மக்கமாரே- என்
சுமைய கொஞ்சம் குறையுங்கய்யா
#ad
GIPHY App Key not set. Please check settings