in ,

பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 6) – வைஷ்ணவி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3    பகுதி 4    பகுதி 5

இரு தினங்களாக ஏதோ உற்சாக குறைவாகவே இருக்கிறது காயத்ரிக்கு, ஆனால் என்னவென்று சொல்ல தெரியவில்லை. சரி சுதாவை பார்த்து விட்டு வரலாம் என பாட்டியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.

சுதா அவளின் தோழி. பக்கத்து வீடுசிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்தனர். மிக சிறிய வயதிலேயே சுதாவை அவளது அத்தை மகன் மாதவனுக்கு மணம் புரிந்து வைத்தனர். மாதவனும் இவர்களை விட ஓரிரு வயது மூத்தவன் தான். இரண்டாவது பிரசவத்திற்காக சுதா அம்மா வீடு வந்துள்ளாள். அதற்காக அவள் புகுந்த வீடு வெளியூர் எல்லாம் இல்லை. அடுத்த தெருவில் தான் உள்ளது. அவள் கணவன் மாதவன் அவ்வூர் தாலுகா ஆபிசில் கிளர்க்காக உள்ளார்.

இவளைக் கண்டதும் சுதா “வாடி காயத்ரி! இப்போதான் வழி தெரிஞ்சதாடி உனக்கு!” என கோபித்தவாறு கேட்டாள்.

“சரி சரி கோவிக்காதே, டைப்  கிளாஸ், ஷார்ட் ஹேன்ட் க்ளாஸ்னு மாத்தி மாத்தி அலைச்சல். அதான் உடனே வர முடிலடி”

“நீ அடுத்த தெருல தான் இருக்கிற அப்றம் என்ன பார்க்க வரலனு சொல்ற” என்று சுள்ளென்று சொல்லி விட்டு நாக்கை கடித்தாள் காயத்ரி.

“ஏய்! என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி வெடுக்குனு பேசறே?” என்றாள் சுதா.

“அதெல்லாம் ஒன்னும் இல்லைடி”

” இல்லை. ஏதோ இருக்கு.சொல்லு உன் மூஞ்சியும் சரி இல்லை.”

“ஒன்னுமில்லை சுதா. ஒரு காபி கொடேன்” என்றாள்.

காபி கலக்க சுதா உள் சென்றாள்.

சுவரில் மாட்டியிருந்த வெண்ணெய் உண்ணும் கண்ணனின் படத்தையே  பார்த்தாள்.

நவநீதம் என்றால், வெண்ணெய். வெண்ணெய் உண்ணும் கண்ணனது பெயர் தான் நவநீத கிருஷ்ணன். தினமும் கேட்கும் அவனது குரலை இரு தினங்களாக கேட்காமல் ஏனோ வெறுமையாக இருந்தது. வாய் என்னவோ அவனை கிண்டல் செய்தாலும் உள்மனது அவனை ரசிக்கத்தான் செய்கிறது. நாம் துடுக்காக பேசினாலும் அவனும் அதை ரசிப்பதை உணர முடிகிறது.

“அவன் ஏதோ பெரிய சூப்பர்வைசர்டி. அவன் பேச்சுக்கு மொத்த யூனிட்டும் கட்டுப்பட்டு வேலை பார்க்கிறது. அவன பார்த்தாலே கூட  வேலை பார்க்கிறவாளுக்கு அவ்ளோ மரியாதையும் பயமும். போய் இரண்டு மாசத்துலயே நல்ல பேர் எடுக்கறது ஒன்னும் அவ்வளவு சுலபம் இல்லை” என அவனது உடல்நிலையை விசாரிக்க நேரில் சென்று வந்த அப்பா, அம்மாவிடம் பின்வருமாறு கூறிக் கொண்டிருந்ததைப் பற்றியே இன்னும் யோசித்துக் கொண்டிருந்தாள்.

“காயத்ரி! காயத்ரி!” என அழைத்த வண்ணம் சுதா காபி டம்ளருடன் நின்று கொண்டிருந்தாள்.

யோசனையை கலைக்க முடியாமலே காபி டம்ளரை கைகளில் வாங்கினாள் காயத்ரி.

“என்னடி? நானும் வந்ததிலிருந்தே பார்த்துட்டு இருக்கேன், என்னவோ யோசனையாவே இருக்க?”

“ஒன்னுமில்லைடி”

“அப்போ ஏதோ இருக்கு”

தன்னுடைய குழப்பத்திற்கு விடை கிடைத்தால் போதும் என்று நினைத்தவாறே நவநீதனிடம் பேசியது முதல் இந்த நொடி சிந்தித்த வரையில் எல்லாமும் சொன்னாள்.

சுதா ஒரே வார்த்தையில் “மனச அலைபாய விடாதடி” என்றாள்.

“ம்ம்” என்றாவரே, “சுதா நான் ஒரு போன் பண்ணிக்கட்டுமா?” என்றாள்.

“ம் பண்ணிக்கோ. இதென்ன கேள்வி?”

படபடவென்று அவனது பத்து இலக்க எண்களை அழுத்தினாள்.

சுதா ஆச்சரியமாக பார்த்தாள்.

நான்கே ரிங்கில் அழைப்பு எடுக்கப்பட்டது.

“ஹலோ! திஸ் ஈஸ் நவநீதன் ஹியர்”

அதே கம்பீரமான குரல்.

“ஹலோ! எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லாருக்கேன். நீங்க  யாருங்க?”

“கண்டுபிடிங்க பார்க்கலாம்”

“ஹலோ! போன் பண்ணினா, இன்னார் பேசறேன், இன்னார்ட்ட பேசணும்னு சொல்லனும். அத விட்டுட்டு யாருனு கண்டுபிடிக்க சொன்னா என்ன அர்த்தம் மின்னல்?” என்றான்.

ஒரு கணம் ஸ்தம்பித்தாள் காயத்ரி.

“மின்னலா?”

“ஆமாம் மின்னல்தான். போன்ல பட படனு இடி மின்னல் மழையா பொழியற உங்களை இடினு கூப்பிட மனசு வரலை. அதான் மின்னல்னு கூப்பிட்டேன். நீங்களும் மின்னல் மாதிரி தானே வேகமா பேசறீங்க காயத்ரி” என்றான்.

மனதிற்குள் அட! கண்டுபிடித்து விட்டானே, கொஞ்ச நேரம் கலாய்க்கலாம் என நினைத்தேனே!

” எப்படி கண்டுபிடிச்சிங்க?”

” இந்த நம்பர் ஒரு நாலைஞ்சு பேருக்கு தான் தெரியும். அதுவுமில்லாம தினமும் காலைல எந்திரிச்சவுடன் உங்கப்பாக்கு பண்ற போனை நீங்க தான் எடுக்கறீங்க. ராத்திரி காலும் நீங்க தான் எடுக்கறீங்க. ஒரு நாளினுடைய துவக்கமும் முடிவும் உங்க குரலோடதான் எனக்கு. பின்ன எப்படி மறக்க முடியும்?”

“உடம்பு சரியில்லைனு அப்பா சொன்னார். இப்ப எப்படி இருக்கு?”

“உங்ககிட்ட பேசினதும் பரவால்லங்க “

“எங்க ஊருக்கு வந்து நல்லா பேசக் கத்துக்கீட்டீங்க”

“பின்ன உங்கள எல்லாம் சமாளிக்கனுமே”

“என்னை ஏன் நீங்க சமாளிக்கனும்?”

“அது சரி. இதென்ன புது நம்பர்?”

“பிரெண்டு வீட்டுக்கு வந்தேன். அவ நம்பர் தான் இது “

“சேவ் பண்ணி வெச்சுக்கவா மின்னல்?”

“ம். நான் போன் வெச்சுடறேன்”.

மின்னலா? அவன் மின்னல் என அழைத்தது மனசுக்குள் மின்னல் வெட்டியது போன்று இருந்தது. உங்க குரலை எப்படி மறக்க முடியும் என்றானே? அதற்கென்ன அர்த்தம் என பலவாறு யோசித்தாள்.

சுதா, “ஏய்! இங்க என்னடி நடக்குது?”

“தெரிலடி, நவநீதன்ட்ட தான் பேசிட்டு இருந்தேன்”.

“ம். பார்த்தாலே தெரியுது. நீ அவனை லவ் பண்றியாடி?”

“தெரில சுதா, ஆனா அவன்ட்ட பேசாம இரண்டு நாளா சுமையா இருந்துச்சுடி. இப்ப அவன்ட்ட பேசுனதும் நல்லா இருக்குடி”.

“அப்போ அதுக்கு பேர் அதான்”

“பார்க்கலாம் சுதா நான் கிளம்பறேன்” என்றவாறு காயத்ரி செருப்பை மாட்டிக் கொண்டே அவள் இல்லம் நோக்கி நடந்தாள்.

 அவன் பேசியது ஏதோ புரிந்தது போல இருந்தது. ஏதோ புரியாதது போலவும் இருந்தது.

 புரியா மொழியோ புரிந்து போகும்

புரிந்த மொழியோ மறந்து போகும்

சரியாத உடை சரி செய்வதாக

சரியாய் இருந்தும் சரி செய்யும்

இதற்கு பெயர்தான் காதலா

இதற்கு பெயர்தான் காதலா

அவளின் தற்போதைய மன நிலைக்கு ஏற்றவாறே டீக்கடையில் ஒலித்த பாடலை ரசித்துக் கொண்டே நடந்தாள்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 21) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    முகநூல் நட்பு (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்