2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14
கதவைத் திறந்து, எல்லா லைட்டையும் போட்டவன், “மகா.. மகா” என்று மெல்ல குரல் கொடுத்தான்.
‘ஒருவேளை மாடியில் தூங்குகிறாளா?’ என்று மாடிக்குச் சென்று படுக்கை அறையை திறந்து லைட்டைப் போட்டான். ‘ராகினி சித்தி வீட்டில் அவள் கிளம்பி விட்டதாகச் சொன்னார்களே.. அப்படி என்றால் மகா எங்கே?’ என்று யோசிக்கும் போது
“யாருங்க அவ? இந்த வீட்டுக்கு வந்தவ..உண்மைய சொல்லுங்க.. பொய் சொல்லி ஏமாத்த நெனச்சா நான் பொல்லாதவ ஆயிடுவேன்.”
“ஓ..மகா… நீ இங்கே இருக்கியா? நான் உன்னை காணும்னு தேடினேன். அலுப்பில தூங்கிட்டியா? உடம்பு எப்படி இருக்கு? சித்தி வீட்டில் ரெஸ்ட் எடுத்தியா? ஆமாம் ஏதாவது சாப்டியா? நீ வருவேன்னு தெரியாம தங்கத்தை நான் வர வேண்டாம் நாளைக்கு வான்னு சொல்லிட்டேன் …”
“இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரல… வேறு எதையோ பேசி என்னை டைவர்ட் செய்யாதீங்க. என் கண்ணைப் பாத்து சொல்லுங்க, இங்கே வந்தவ யாரு? இவளைப் பார்க்கத்தான் நீங்க அடிக்கடி பெங்களூர் போறீங்களா? எனக்கு உண்மையான பதில் வேணுங்க.. சும்மா பொய்யா பேசி மழுப்பப் பாக்காதீங்க. கொஞ்ச நாளாவே நீங்க சரியில்ல. எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிறீங்கன்னு தோணுது. அனேகமாக ஒவ்வொரு வார கடைசியிலயும் பெங்களூர் போயிடுறீங்க …கேட்டா பெங்களூரில் வேலை.. கிளையண்ட்…அது இதுன்னு ஏதாவது சொல்லி சமாளிக்கிறீங்க. என்னை என்ன முட்டாள்னு நினைச்சீங்களா… இல்ல புரிஞ்சுக்க தெரியாதவள்னு நினைச்சீங்களா …உங்க மேல வச்ச கண்மூடித்தனமான பாசத்துக்கும், நம்பிக்கைக்கும் நீங்க மிகப்பெரிய துரோகம் பண்ணிடீங்க..இதுக்கு மேல சப்பக்கட்டு கட்டாதீங்க…”
மகாவுக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு.. உள்ளுக்குள் பதற… ‘பூனை மாதிரி அமைதியா அதிராம பேசுறவ இன்னைக்கு புலி மாதிரி சீறுறாளே.. இவளுக்கு இவ்வளவு தைரியமா?’ என்று ஒரு நிமிஷம் அவ்வளவு கஷ்டத்துக்கும் நடுவே வியப்பும் தோன்றியது.
“நீ என்ன மகா பேசுற ..உனக்கு எதுக்கெடுத்தாலும் சந்தேகம் தான். நான் தான் சொன்னேனே பெங்களூரில் முக்கியமான கிளையண்ட்…அவங்கள திருப்திப் படுத்தினால் தான் பெங்களூரில் நம்முடைய பிசினஸ் நல்லா ஓடும் . நிறைய லோடு மார்பிள்ஸ் ஆர்டர் கொடுத்திருக்காங்க. ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சிருக்காங்க. பெரிய ஆர்டரா கிடைச்சிருக்கு …நிறைய லாபம் வரும் .நம்ம கெஸ்ட் ஹவுஸில் தான் தங்கி இருக்காங்க. அம்மாவும், பொண்ணுமா வந்திருக்காங்க. அந்த அம்மாவுக்கு 55 ..60 வயசு இருக்கும். அவங்கதான் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி எம்.டி..அவங்க பொண்ணு இப்ப தான் அவங்ககிட்ட பிசினஸ் கத்துக்கறா… அதனால அவளும் வந்திருந்தா.”
“அப்ப இது” என்று குப்பை தொட்டியில் கிடந்த மல்லிகைப்பூவை காட்டினாள் மகா.
‘அட ராம் முட்டாள்…இந்த மல்லிகைப் பூவை வெளியே தூக்கி போட வேண்டாமா? இப்படியா குப்பை தொட்டில போட்டு மாட்டிக்கவே’ என்று மனதுக்குள் தலையிலடித்துக் கொண்டான்.
“அவங்க வீடு பழமையும், புதுமையும், வசதியாகவும் இருக்குன்னு ரொம்ப பாராட்டினாங்க .அதனால அவங்களுக்கு வீட்டை சுத்திக் காண்பிச்சேன். அப்ப கீழே விழுந்தது அதை எடுத்து குப்பைத் தொட்டியில் அவங்களே தான் போட்டாங்க ..”
ஒன்றும் பேசாமல் மகா படியிறங்கினாள்.
ராம்க்கு மண்டை குடைந்தது. ‘இவள் என்னை நம்புகிறாளா?. அல்லது நான் சொன்ன எதையுமே நம்பவில்லையா? ஒன்றும் சொல்லாம போறா… சண்டை போட்டாக் கூட அவ என்ன மனநிலையில் இருக்கிறான்னு புரிஞ்சிடும். ஒன்னும் பேசாம போறாளே ..ஒருவேளை நான் சொன்னதை இந்த மக்கு மகா நம்பி இருப்பாளா? …’
‘அப்படியே விஷயம் தெரிஞ்சாலும் இவளால என்ன செஞ்சிட முடியும்.ஒன்னும் கிழிக்க முடியாது.. என்னை மீறி இவளால ஒன்னும் செய்ய முடியாது. கம்பெனி பொறுப்புகள் பூராவும் என் கைல வைச்சிருக்கேன். இவளுக்கு நான் ஏன் பயப்படனும். ஒழுங்கா இருந்தா இந்த வீட்டில அந்தஸ்தோடு இருக்கப் போகிறா… இல்லாட்டி வாழாவெட்டியா சொத்துக்களையும் என்கிட்ட பறிகொடுத்துட்டு வாழப் போகிறா. அவ தலைவிதி எதுவோ அப்படியே நடக்கட்டும்.’
கீழே இறங்கிய மகா சோபாவில் சோர்வாக அமர்ந்தாள். ராம்குமார் முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. மதியத்தில் இருந்து ஒன்றும் சாப்பிடாதது வயிற்றை பிரட்டிக் கொண்டு வந்தது. பிரிட்ஜிலிருந்து பாலை எடுத்தவள், சூடு பண்ணி சர்க்கரை போட்டு குடித்தாள்.
குழப்பமும், கவலையும், மட்டுமல்லாமல் ஒருவித ஆத்திரமும் மனதை ஆக்கிரமித்து கொண்டிருந்தது. ‘இந்த குழப்பமான நேரத்தில் எதையும் முடிவெடுக்க வேண்டாம். அவர் அடுத்து என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்போம்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். இவ்வளவு குழப்பமான நேரத்திலும் தான் இவ்வளவு அதிர்ச்சியையும் தாங்கிக்கொண்டு நிதானமாக இருப்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அப்பாவின் நினைவு வர, கண்களில் கண்ணீர் கசிந்தது. ‘அப்பா நீங்கள் மட்டும் இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா. ராம்குமாருக்கு தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் தைரியம் அதிகமாகி விட்டது. தவறுக்கு மேல் தவறு செய்கிறார் …அவர் சொல்வது உண்மையா பொய்யா என்று கூட என்னால் யோசிக்க முடியவில்லை. எவ்வளவு இக்கட்டான நிலையில நான் இருக்கேன். நீங்க ஏன்ப்பா என்ன விட்டுட்டுப் போனீங்க ..பணம், சொத்து இதுதானே ராம்குமாரை இந்த அளவு மாற்றி இருக்கிறது’ என்று மனம் முழுக்க ஒரு வெறுப்பும் கோபமும் பரவியது. திரும்ப மாடிக்குப் போக பிடிக்காமல் சோபாவிலேயே படுத்து கொண்டாள்
கீழே எட்டிப் பார்த்த ராம் மகா சோபாவில் படுத்திருப்பது தெரிந்ததும் ஒரு நிமிடம் மனம் இளகியது .அடுத்த நிமிடம் இவள் என் வாழ்க்கையிலிருந்து ஒழிந்தால் தான் எனக்கு நிம்மதி.. நான் நிம்மதியாக வந்தனாவுடன் வாழ முடியும். அவன் மனதில் இருந்த காமமும், வன்மமும் அவனை நியாயம் எது என்று யோசித்துப் பார்க்க விடாமல் அவன் புத்தியை மறைத்தது .
இவளுக்கு தெரிந்தால் தான் என்ன என்று நினைத்தான். இனி இவளுக்கு பயந்து கொண்டு வாழ வேண்டாம்.. தைரியமாக பெங்களூருக்குப் போகலாம் அல்லது வந்தனாவை ஈ.சிஆர் . பங்களாவில் குடி வைத்துவிட்டு இவளிடம் சொல்லிவிட்டே அங்கே போவேன் என்று திமிராக நினைத்தான். ராம் கணக்கு சரியா..விதி போடும் கணக்கின் விடை என்ன ..காலம் தான் பதில் சொல்லும்…
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings