in ,

விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 12) – முகில் தினகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11

“அப்படியெல்லாம் விட்டுட முடியாது கோமதி!… மொதல்ல சைட் அடிப்பானுக… நாம அமைதியா இருந்தா மெல்ல வந்து பேசுவானுக… அதுக்கப்புறம் ஒரு நாள் மொபைல் நெம்பர் கேட்பானுக… நாம யதார்த்தமா குடுத்திட்டா… தெனமும் காலைல  ‘குட்மார்னிங்’, மதியம்  ‘குட் ஆப்டர்நூன்’, சாயந்திரம்  ‘குட் ஈவினிங்’, அப்புறம் ராத்திரில ‘குட் நைட்’ன்னு போட்டு நம்மைச் சாகடிப்பானுக!…”

 “ம்… அப்புறம்?”

“கடைசில ஒரு நாள் ‘ஐ லவ் யூ’ம்பானுக!… ‘ஸண்டே ஃப்ரீயா?’ம்பானுக… ‘அவுட்டிங் போலாமா?’ன்னு கேட்பானுக!… இவனுக வேலையே இதுதான்” என்று வித்யா சொல்ல

“பயங்கர அனுபவசாலியா இருப்ப போலிருக்கு” கோமதி சிரித்துக் கொண்டே சொல்ல

“உண்மை… இந்த மாதிரி பசங்க நிறைய பேர் என் லைஃப்ல குறுக்கே வந்திருக்கானுக!… ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு வகைல பாடம் கற்பிச்சிருக்கேன்!… அதான் இவனுக்கு எந்த வகைல பாடம் கற்றுக் குடுக்கலாம்!னு யோசிச்சிட்டிருக்கேன்”

அதற்குள் இறங்குமிடம் வந்து விட, கோமதி அந்தப் பேச்சிற்கு  “முற்றும்” போட்டு விட்டு இறங்கினாள். ஆனால் வித்யா மட்டும், அந்தப் பேச்சிற்கு “தொடரும்” போட்டு வைத்தாள்.

****

அன்று மாலை கல்லூரிக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது சற்றுத் தள்ளி நண்பர்களோடு நின்று கொண்டிருந்த விஜயசந்திரனை ஓரக் கண்ணால் பார்த்த வித்யா, “படிகளில் தொங்கிட்டு வர்றதுல இந்தப் பசங்களுக்கு என்னதான் ஆர்வமோ தெரியலை” என்றாள்.

“அதைப் பெரிய ஹீரோயிஸமா நெனச்சுப் பண்றானுக”

ஒரு பேருந்து வந்து நின்றதும், “கோமதி நான் இந்த பஸ்ல போறேன்” என்றாள் வித்யா.

“ஏய்… இது நம்ம ஏரியாவுக்கு போற பஸ் இல்லைடி”

“பரவாயில்லை… நான் போறேன்” கோமதியின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் ஓடிச் சென்று அந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டாள் வித்யா.

பஸ் புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும், அடுத்து வந்த நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டு, தன் மொபைலை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, சற்றுத் தள்ளியிருந்த ஒரு மரத்தடிக்குச் சென்று மறைவாக நின்று கொண்டாள்.

அதே நேரம், கல்லூரி வாசலில் தங்கள் வழக்கமான பேருந்து வந்ததும், மாணவர்கள் கூட்டமாய் ஓடிப் போய் ஏறிக்கொள்ள, வழக்கம் போல் விஜயசந்திரனும், பஸ்ஸினுள் கூட்டம் குறைவாயிருந்த போதும், படியில் தொங்கிக் கொண்டு பயணித்தான்.

பெண்கள் இருக்கையில் தனியே அமர்ந்து பயணித்தாள் கோமதி.

வித்யா நின்று கொண்டிருந்த இடத்தைக் கடந்து அந்தப் பஸ் செல்லும் போது, அதைத் தன் மொபைலில் வீடியோ எடுத்தாள். பேருந்து எண்ணும், விஜயசந்திரன் முகமும் தெளிவாகத் தெரியும் வகையில் படம் பிடித்தவள், அதைத் தன் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் குழுவிலுள்ள அனைவருக்கும் அனுப்பினாள்.  கூடவே அதை எல்லோருக்கும் பகிருமாறு ஒரு வேண்டுதலையும் வைத்தாள்.

சரியாக ஒரு மணி நேரத்தில் அந்தப் பதிவு தமிழ்நாடு முழுவதும் பரவியது.

மறுநாள் கல்லூரிக்குள் வந்த போலீஸ் வேன், நேரே பிரின்ஸிபால் அறைக்கு வெளியே நின்றது. அதிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் பிரின்ஸிபாலைச் சந்திக்கச் சென்றனர்.

சில நிமிடங்களில் வகுப்பிற்கு வெளியே வந்து நின்ற அட்டெண்டர் “எக்ஸ்க்யூஸ் மீ… விஜயசந்திரன்ங்கற ஸ்டூடண்டை பிரின்ஸிபால் வரச் சொன்னார்” என்று சொல்ல,

வித்யா கோமதியிடம் கிசுகிசுப்பாய்ச் சொன்னாள். ”வீடியோ வேலை செய்யுது போலிருக்கு”

விஜயசந்திரனோ தனக்குப் பின்னால் பின்னப்பட்டிருக்கும் சதிவலையைப் பெற்றி எதுவும் தெரியாதவனாய் பிரின்ஸிபால் ரூமிற்குச் சென்றான். அவன் உள்ளே வந்ததும் அங்கு இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் இருப்பதைக் கண்டு லேசாய் அதிர்ந்தான்.

இன்ஸ்பெக்டரின் மொபைலிலிருந்த அந்த வீடியோவை விஜயசந்திரனிடம் நீட்டி, “இதிலிருப்பது நீதானே?” பிரின்ஸிபால் கேட்டார்.

”ஆ..மா…ம்” தயங்கித் தயங்கிச் சொன்னான்.

“ஏம்பா… பஸ்ஸுக்குள்ளார பாதி சீட் காலியாயிருக்கு… அப்புறமெதுக்கு இந்தத் தொங்கல்?”

 “இல்லை சார்… அது வந்து… சும்மா… ஜாலிக்காக….” திணறினான் விஜயசந்திரன்.

 “ஜாலிக்காகவா?… இப்ப இந்த வீடியோ பயங்கரமா வைரலாகி… அந்த பஸ் டிரான்ஸ்போர்ட் கம்பெனி மேலே கேஸ் ஃபைலாயிருக்கு!…. அந்த பஸ்ஸை ஓட்டிய டிரைவரையும், கண்டக்டரையும் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க!… அடுத்ததா போலீஸ் உன்னை அரெஸ்ட் பண்ண வந்திருக்காங்க!…” பிரின்ஸிபால் சத்தமாய்ச் சொல்ல,

“சார்… இதுல என்னுடைய தப்பு… எதுவுமில்லையே…” விஜயசந்திரனும் தைரியமாய்ப் பேசினான்.

“ராஸ்கள் வாயை மூடுடா” என்று அதட்டிய இன்ஸ்பெக்டர், “நீ படில தொங்கிட்டுப் போனது கூடத் தப்பில்லை… அதை சமூக வலைதளங்கள்ல போட்டு ஏகப்பட்ட லைக் வாங்கினது கூடத் தப்பில்லை!… ஆனா அதே மாதிரி பல இளைஞர்களையும் பண்ண வெச்சு… இன்னிக்கு நூத்தம்பது பேர் அதே மாதிரி பஸ் படிக்கட்டுல தொங்கி வீடியோ எடுத்துப் போட்டுட்டிருக்கானுக… இதுக்கு என்ன சொல்றே?” என்றார் கத்தல் குரலில்.

“சார்… அது வந்து….” இழுத்தான் விஜயசந்திரன்.

“உன் ஒருத்தனுக்கு தண்டனை குடுத்தா மத்தவனுங்க அடங்கிடுவானுக!” என்ற இன்ஸ்பெக்டர் பிரின்ஸிபால் பக்கம் திரும்பி, “மன்னிக்கணும் சார்… இவனை அரெஸ்ட் பண்ணி எங்க கூட கூட்டிட்டுப் போறோம்… அதுக்கு நீங்க ஒத்துழைக்கணும்” என்றார்.

“சார்… இது ஸ்டூடண்ட்ஸ் பிரச்சினை… நீங்க இவனை உங்க கூடக் கூட்டிட்டுப் போனா.. தேவையில்லாத பிரச்சினைகள் வரும்… அதனால… என்னை நம்பி இவனை விட்டுட்டுப் போங்க… நானே இவனை இன்னும் அரை மணி நேரத்துல ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கிறேன்” என்றார் பிரின்ஸிபால்.

 “ஓ.கே.சார்…” சொல்லியவாறே அந்த இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் வெளியேற,

கல்லூரியின் பி.ஆர்.ஓ.நடராஜை அழைத்து விபரத்தைச் சொல்லி, “இந்த விஷயம் ஸ்டூடண்ட்ஸ்க்கு லீக் ஆக வேண்டாம்!.,.. சைலண்டா இவனை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போயிடுங்க!… பிரச்சினையை நாசூக்கா டீல் பண்ணி… இவனைத் திருத்துங்க” என்றார்.

அன்று மதியம் லன்ச் டைமில் வித்யா கேட்டாள். “கோமதி.. ஒண்ணு கவனிச்சியா?… போலீஸ் ஜீப் வந்திச்சு… இன்ஸ்பெக்டரும், ஒரு போலீஸ்காரரும் பிரின்ஸிபால் ரூமுக்குப் போனாங்க… என்னமோ பேசினாங்க… விஜயசந்திரனும் உள்ளே போனான்!… அப்புறம் அந்த போலீஸ் ஜீப் போனதும்… கொஞ்சம் நேரத்துல விஜயசந்திரனைக் கூட்டிட்டு பி.ஆர்.ஓ. வெளிய போனார்… இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?”

“தெலியலையே….” வாயில் சாப்பாட்டைத் திணித்துக் கொண்டே பதில் சொன்னாள் கோமதி.

“என்னோட வீடியோ செமையா வேலை செய்யுதுன்னு அர்த்தம்!…”

இரண்டு தினங்களுக்குப் பிறகு, அதே டவுன் பஸ்ஸில், அதே விஜயசந்திரன் இருக்கையில் அமர்ந்து பயணிக்க, அதை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்த வித்யா, “அதிசயத்தைப் பார்த்தியா?” என்றாள் சன்னக் குரலில் கோமதியிடம்.

“வித்யா… நீ செஞ்சதிலேயே நல்ல விஷயம் இது ஒண்ணுதான்!… அவனுக்குப் பாடம் புகட்டறேன்னு சொல்லி நீ செஞ்ச வேலை அவனை உண்மையிலேயே திருத்திடுச்சு… படிக்கட்டுப் பயணத்தை நிறுத்திட்டானே அதைச் சொல்றேன்” என்றாள் கோமதி.

இரவு 7:30. தொலைக்காட்சி சேனலில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், “ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி” என்று பாடிக் கொண்டிருந்தார்கள்.

காலிங் பெல் கதறியது. டி.வி. வால்யூமைக் குறைத்து விட்டு, எழுந்து சென்று கதவை நீக்கினாள் வித்யா.  அந்த விஜயசந்திரன் தாடி முகத்தோடு நின்றிருந்தான்.

“வா விஜய்… நீ கண்டிப்பா வருவேன் எனக்கு தெரியும்?… எப்பவும் வேதனைபடும் ஒரு மனசு தன்னோட வேதனைகளை கொட்ட யாராவது கிடைக்க மாட்டாங்களானு ஏங்கிக் கிடக்கும்!… அப்படியிருக்கும் போது நானே வலிய வந்து உன்னோட சோகங்களை நான் பங்கு போட்டுக் கொள்ள தயார்!ன்னு சொல்லும் போது நீ வராம எங்கே போயிடுவே?”.

“இவள் சொல்வதுதான் உண்மையோ?” யோசித்தபடியே உள்ளே வந்தான்.

“உட்காரு விஜய்!” சோபாவில் உட்கார்ந்தான்… இல்லை அமிழ்ந்தான்.

“அப்புறம்?…டீயா… காபியா? வித்யா கேட்க

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் வித்யா” மறுத்தான்.

“அந்த வேலையை ஆகாது!… முதல்ல டீ அல்லது காபி சாப்பிட்டுட்டுத்தான்… மத்த பேச்செல்லாம்!” என்றவாறு சமையலறைக்குச் சென்று, தானே காப்பி தயாரித்துக் கொண்டு வந்தாள் வித்யா.

 “பயப்படாமக் குடி… நான் நல்லாவே காப்பி போடுவேன்” சொல்லி விட்டுச் சிரித்தாள்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நான் குளிக்க போறேன் (நாவல் – அத்தியாயம் 1) – கெளதம். R

    காலத்தின் கொடுமை (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்