in ,

2023-24 வருடப் போட்டியில் எழுத்தாளர்கள் பெற்ற புள்ளிகள் (Points Accumulated as on Dec 31, 2023)

வணக்கம்,

இந்தப் பதிவில், 2023-24 வருடப் போட்டியில் எழுத்தாளர்கள் பெற்ற புள்ளிகள் (Points as on Dec 31, 2023) உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிறுகதை / குறுநாவல் / நாவல் என மூன்று பிரிவாய் பிரித்து புள்ளிகள் பட்டியல் வழங்கியுள்ளோம். 

நிறைய சிறந்த படைப்புகளை எழுதிய எழுத்தாளர்கள் அதிக புள்ளிகள் பெற்றிருப்பதை நீங்கள் காணலாம். முன்னணியில் உள்ள எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மற்றவர்களுக்கு, முன்னணி இடத்திற்கு வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

இந்த வருட போட்டிக்கு, படைப்புகளை சேர்க்க கடைசி நாள் ஜூன் 30, 2024. இன்னும் நிறைய அவகாசம் இருக்கிறது. நீங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு USER ID கேட்டு செய்தி அனுப்பவும். 

போட்டி அறிவிப்பு / விதிமுறைகள் / பரிசு விவரங்கள் இந்த இணைப்பில் காணலாம் –  https://sahanamag.com/2023-24-tamilshortstorynovelcontest-prizemoney10000/

போட்டி முடிவுகள்  – “சஹானா” இணைய இதழ் துவங்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 2, 2024 அன்று அறிவிக்கப்படும். 

வெற்றி பெறும் எழுத்தாளர்களுக்கு, 

  • பணப்பரிசு
  • கேடயம் அல்லது சான்றிதழ் 
  • எங்கள் பதிப்பகத்தின் செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

ஆகியவை வழங்கப்படும்.

  • வடிவமைப்பு
  • பிழைகள்
  • கதைக்கரு
  • கதை சொன்ன விதம் 

ஆகிய நான்கின் அடிப்படையில் இப்போதைக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. 

எத்தனை பேர் வாசித்தார்கள் (Points for Views) என்பதற்கான புள்ளிகள் இன்னும் சேர்க்கப்படவில்லை. அது ஜூலை 31, 2024 அன்று கணக்கெடுக்கப்பட்டு, அதற்கான புள்ளிகள் சேர்க்கப்படும். அதுவரை உங்கள் கதைகளை, உங்கள் உறவு / நட்பு வட்டத்தில் நிறைய பேர் வாசிக்கப் பகிரலாம்.

இன்னும் ஒரு வாரத்திற்குள், 

  • புள்ளிப்பட்டியல் (Points Chart)
  • பின்னூட்டம் (Feedback)
  • போனஸ் பாயிண்ட்ஸ் பெற்றவர்களுக்கான மின்-சான்றிதழ் (eCertificate)
  • உங்கள் படைப்புகள் கோர்க்கப்பட்டுள்ள இணைப்பு (Exclusive Link of your Stories in Sahanamag – for easy sharing)

ஆகிய அனைத்தும் எழுத்தாளர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

 

என்றும் நட்புடன், 
ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    2023 வருடத்தின் மாதப் போட்டி முடிவுகள் – வெற்றியாளர் அறிவிப்பு

    பந்திக்குப் பிந்து (சிறுகதை) – முகில் தினகரன், கோவை