எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அகிலா, என்ன நடந்து போச்சுனு அழறே?”
“இன்னும் என்ன நடக்கணும் வேதா? என் வாழ்க்கையே கேள்விக்குறியா இருக்கு. உனக்கென்ன, நீ ஆசைப்பட்ட மாதிரி நல்ல காலேஜ்ல சேர்ந்துட்டே. இனி நாலு வருஷம் உன் கல்லூரி வாழ்க்கை வானவில் மாதிரி அழகான வண்ணங்களோட நிறைய நினைவுகளைத் தரும். ஆனா எனக்கு எதிர்பார்த்த மார்க் வரல. ஆசைப்பட்ட காலேஜ்ல படிக்க முடியல.”
“அகிலா, எல்லாமே நம்ம மனசுலதான் இருக்கு. பார்க்க அழகா இருக்கற வானவில் சட்டுனு காணாம போயிருது. அதோட அழகை ரசிக்கற நீ, அதே வானவில் நிலைச்சு நிற்காதுங்கற நிதர்சனத்தை நினைச்சு கவலைப்படல. வாழ்க்கையையும் அதேமாதிரி யோசி அகிலா. நீ வாங்கியிருக்கற மார்க்கும், நீ படிக்கப் போற காலேஜும் உன் வாழ்க்கையை வண்ணமயமாக்கும்னு நம்பு. நம்ம எண்ணங்கள்தான் வாழ்க்கையை அழகாக்கும்.”
தோழி வேதாவின் ஆறுதல் வார்த்தைகள் அகிலாவின் கண்ணீரைத் துடைத்தன.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings