இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
டெலிபோன் “பீப் பீப்” என்றது.
எல்லா சினிமா வில்லன்களைப் போல ஒரு இளம்பெண் உடம்பைத் தொட்டுக் கொண்டிருந்த கைகளை உதறிப் போனை எடுத்தார் கேப்டன் ராஜ்.
“ஹலோ கேப்டன் ராஜ் ஸ்பீக்கிங்”
“கேப்டன் சுகுமார் வந்து விட்டானா?”
“யாரு வசந்தா? நீ எங்கிருந்து பேசுகிறாய்?”
“கேப்டன் செம்பூர் போலிஸ் ஸ்டேஷனுக்கு அடுத்த கல்லியிலுள்ள மெடிக்கல் ஸ்டோரிலிருந்து பேசுகிறேன். வனிதாவை நான் ஸ்கூட்டரிலே விரட்டுக் கொண்டே வந்தேன். எப்படியோ தப்பித்துப் போய் விட்டாள்.”
“இடியட் நீங்களெல்லாம் ஒழுங்காக மாடு மேய்க்கப் போகலாம். ஒரு பொண்ணை விரட்டிப் பிடிக்கத் தெரியலை பொட்டப் பசங்க. சரி சுகுமார் போன விஷயம் என்னாச்சுது?”
“தெரியாது. அதனால தான் உங்களிடம் கேட்டேன்.”
“சோறு திங்கத் தெரியுமா? ஒரு நாளைக்கு இரண்டு பாட்டில் ஜானி வாக்கர் ஊத்திக்கிட்டா இப்படிதான் மூளை பிசகிப் போகும். நீ அங்கேயே நில்லு. நான் உடனடியாக காரில் வருகிறேன்.” என்ற கேப்டன் ராஜ் திரும்பவும் தன்னைத் தழுவிட வந்த உடையற்ற அந்தப் பெண்ணை உதறி விட்டு, உடைமாற்றிக் கொண்டு கிளம்பினார்.
கார் செம்பூரில் ராதா மெடிக்கல் சென்டரில் வசந்தை ஏற்றிக் கொண்டதும் வேகமாக குர்லாவை நோக்கி கிளம்பியது.
“சுகுமார் இப்போது வைரங்கள் அடங்கிய கேஸட்டை கோட்டை விட்டுட்டு எங்கேயிருப்பான் என்று நினைக்கிறாய்” ?
“ஜுகு பீச்சிலே ஒருத்தி கூட தொடர்பு வச்சிருக்கிறான். அங்கே இருக்கலாம்… பார்க்கலாம் கேப்டன்” என்றான் வசந்த்.
“வினிதாவை எப்படி நம்பி நீயும் சுகுமாரும் கேஸட்டை ஒப்படைத்தீர்கள்”?
“ஸாரி கேப்டன், மிக நல்லவளைப் போல நடித்தாள். ஏற்கனவே நமக்காக நான்கு வருடங்களாக உழைத்திருக்கிறாள். அதனால் தான்… மற்றபடி…”
“நீங்கள் ரெண்டு பேரும் அவ தொறந்து காட்டின உடனே நாயை மாதிரி நாக்கைத் தொங்கப் போட்டீர்களாக்கும் முட்டாள்கள்.
நம்முடைய தொழில் ரகசியமே நம்பிக்கையையே நாம் நம்பக் கூடாது என்பதுதான்.
ஏற்கனவே அவளுக்கு இந்தத் தொழில் பிடிக்கவில்லை என்று சொன்னாள் என்று சொல்லியிருக்கிறேனில்லையா. பன்னிப்பயல்களா. முப்பது கோடி மதிப்புள்ள வைரங்கள்… அவை பூனாவிலிருந்து கொண்டு வர நீயும் நானும் சுகுமாரும் உழைத்த உழைப்பு கடைசியில் கானால் நீராக….”
“ஸாரி கேப்டன். இந்த வஸந்தையும் சுகுமாரையும் தப்பாக எடை போடாதீர்கள். இந்தப் மும்பாயின் எந்த மூலை முடுக்கில் இருந்து அவளையும் கேஸட்டையும் இன்று சாயங்காலமே உங்களிடம் கொண்டு வந்து நிறுத்துகிறோம்”
“சொல்லாதுங்கடா பாவிகளா… அது யாரு பஸ் ஸ்டாண்டிலே நிற்கிறது. சுகுமாரா?” என்றவாறு காருக்கு பிரேக் போட்டான் கேப்டன் ராஜ்.
“டேய் சுகுமார் வா” என்று வஸந்த் அழைக்கும் குரல் கேட்டு காருக்கு அருகே வந்தவன் “ஸாரி கேப்டன். இப்படி நடக்கும் என்று எதிர் பார்க்க வில்லை” என்றான்.
“ஸாரி…. பெரிரிரிரிய… ஸாரி சொல்லிட்டா முப்பது கோடி வைரமும் திரும்பி வந்துடுமா? சுகு காரில் ஏறு… எப்படி வனிதாவிடமிருந்து கேஸட்டைக் கைப்பற்றலாம் என்று நான் சொல்கிறேன்” என்றார் கேப்டன்.
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings