நகைச்சுவை

தங்கமணி சபதம்… 😂😃🤣 (நகைச்சுவை)

ன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், குடும்ப சகிதமாய் உணவருந்தி கொண்டிருந்தனர் ரங்கமணி அண்ட் பாமிலி 

ரங்கமணி தான் ஆரம்பித்தார், “தங்கம், இந்த அரைச்சு விட்ட குழம்பு நீ முன்னயெல்லாம் ரெம்ப நல்லா செய்வ. இப்ப அந்த டேஸ்ட் இல்ல தெரியுமா?”  என்றார் ரங்கமணி, பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல் 😆  

“நான் எப்பவும் போலத் தான் செய்யறேன். உங்களுக்கு தான் எக்ஸ்பெக்டேசன் கூடிப் போச்சு”

“இல்ல, நீ என்ன சொன்னாலும் மொதலாட்டம் இல்ல” என்றார் மீண்டும்

“இதுக்கு பேரு Law of Diminishing Marginal Utilityனு சொல்லுவாங்க”

“என்ன தங்கம், ஏதோ டாக்டர் வாய்ல நுழையாத நோய் பேர் சொல்லி பயப்படுத்தற மாதிரி சொல்ற” என மிரண்டார் ரங்கமணி

“அதில்ல, as increasing amounts of a good or of a service are consumed, past some point of consumption the utility (usefulness) of successive increases drops இதான் அதுக்கு விளக்கம். உங்களுக்கு புரியறாப்ல சொல்லணும்னா, ஒண்ணு சும்மா சுலபமா கிடைக்குதுனு ஓவரா அதையே சாப்ட்டா, கொஞ்ச நாளுல அந்த டேஸ்டை நாக்கு உணராம போயி அது மொதல் இருந்த மாதிரி இல்லைனு தோணுமாம். புரிஞ்சதா?”

“என்னமோ ஒளர்ற” என சிரித்தார் ரங்கமணி  

“யாரு ஒளர்றா? உங்களுக்கு தெரியலைனா தெரியலைனு ஒத்துக்கோங்க” என்றாள் தங்ஸ்  

“யாரு? யாரப் பாத்து? நாங்கெல்லாம் சயின்ஸ் மேஜர் தெரியும்ல. இந்த கம்மி மார்க் வாங்கின குரூப் தான் எகனாமிக்ஸ் காமர்ஸ் படிக்கற குரூப்…” என வெகுண்டெழுந்தார் ரங்கமணி

“எப்பவும் சயின்ஸ் விட ஆர்ட்ஸ் தான் ஒசத்தி, அதைப் புரிஞ்சுக்கோங்க மொதல்ல” என் டென்ஷன் ஆனாள் தங்கமணி

“இல்ல சயின்ஸ் தான்”

“இல்ல ஆர்ட்ஸ் தான்”

“ஈஸ்ட் ஆர் வெஸ்ட் சயின்ஸ் இஸ் பெஸ்ட்”

“நார்த் ஆர் சவுத் ஆர்ட்ஸ் இஸ் வொர்த்”

“சயின்ஸ் இல்லையேல் ஆர்ட்ஸ் இல்லை”

“ஆர்ட்ஸ் இல்லையேல் சயின்ஸ் குப்பை”

பக்கத்தில் அவர்கள் மகள் அனு வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மை கிடாரை வாங்கினார் ரங்கமணி

அதை கழுத்தில் மாட்டிக் கொண்டு இரண்டு கைகளையும் விரித்து, ‘சரஸ்வதி சபதம்’ நாரதர் ஸ்டைலில் நின்றார்

போதாதற்கு, கையில் சப்லாங்கட்டை இருப்பது போல் போஸ் கொடுத்து நின்றவர், தங்கமணியைப் பார்த்து பாட ஆரம்பித்தார்  

“ஆர்ட்ஸா சயின்ஸா சொல்லடி, சயின்ஸ் இல்லாமல் ஆர்ட்ஸ் இல்லை புரிஞ்சுக்கணும். ஆர்ட்ஸா சயின்ஸா சொல்லடி?” என ரங்ஸ் பாட, நம்ம தங்கமணி மட்டும் சும்மாவா இருப்பாங்க

அவங்க குடுத்த கவுண்ட்டர் இதோ, “ஆர்ட்ஸா சயின்ஸா சொல்லுறேன், ஆர்ட்ஸ் இல்லாமல் சயின்ஸ் வெறும் நியூசன்ஸ் தான். ஆர்ட்ஸா சயின்ஸா சொல்லுறேன்”

“அப்படியா? அப்போ உன் ஆர்ட்ஸின் பெருமைகளை ஒன்று இரண்டு என வரிசைப்படுத்தி பாடு கேட்போம்” என சவால் விட்டார் ரங்கமணி 

“ம்க்கும்… வேற வேலை இல்ல உங்களுக்கு” என தங்கமணி எழுந்து உள்ளே போக முயல 

“அப்போ நீ தோத்துட்டேனு ஒத்துக்கோ, சயின்ஸ் தான் பெஸ்ட் ஒகேவா” என்றார் ரங்கமணி, அவர் நாக்குல தான் சனி பகவான் தாம் தரிகிட தீம் தரிகிடனு  சலங்கை கட்டி ஆடுறாரே

“நிச்சயமா இல்ல, எப்பவும் என்னைக்கும் ஆர்ட்ஸ் இல்லாம சயின்ஸ் ஒண்ணும் பண்ண முடியாது”

“கிட்சன்ல வெச்சுருக்கியே கிரைண்டர் மிக்சி இதோ இந்த சீலிங் பேன், இதெல்லாம் இல்லாம ஒரு நாள் இருக்க முடியுமா உன்னால? சயின்ஸ் இல்லாம இதெல்லாம் எப்படி வரும்?” என ரங்கமணி  கேட்க

“இதெல்லாம் இல்லாமையும் அந்த காலத்துல வாழ்ந்துட்டு தான் இருந்தாங்க. ஆனா ஆர்ட்ஸ் அதாவது கலை / கணக்கு /கற்பனைனு சொல்லப்படற ஆர்ட்ஸ் இல்லாம, காட்டுவாசிங்களா இருந்த ஆதி மனுஷன் கூட வாழலை”

“ஏன்? நீ போய் பாத்துட்டு வந்தியோ?” என சிரித்துக் கொண்டே ரங்ஸ் கேட்க

“இல்ல, உங்க பாட்டி அன்னிக்கி சொன்னாங்க, உங்க பரம்பரையப் பத்தி” என பதிலடி கொடுத்தாள் தங்கமணி

“நீ பேச்சை மாத்தாத, சயின்ஸ் தான் பெஸ்ட் ஒத்துக்கோ”

“இல்லேனு நான் நிரூபிச்சுட்டா?”

“நான் மீசை எடுத்துக்கறேன்”

“அந்த மூஞ்சிய நான் இல்ல தினமும் பாக்கணும். உங்களுக்கு பனிஷ்மென்ட் மாதிரி வேற எதாச்சும் சொல்லுங்க”

“அதுக்கெல்லாம் அவசியமே இருக்காது, எப்படியும் சயின்ஸுக்கு தான் வெற்றி”

“அதெல்லாம் அப்புறம் பாப்போம், மொதல்ல சொல்லுங்க என்ன பெட்டுனு”

“ம்… ஒரு மாசம் நான் எந்த நடிகை பேட்டியும் பாக்கலை. போதுமா?”

“ஒகே டீல். இன்னும் 24 மணி நேரத்துல ஆர்ட்ஸ் இல்லாம முடியாதுனு உங்க வாயாலையே ஒத்துக்க வெக்கறேன்”என்ற சபதத்துடன் தங்கமணி நகர

“இரு இரு, பெட்டுன்னா ரெண்டு பக்கமுமில்ல இருக்கணும். நீ தோத்துட்டா என்னனு சொல்லு?” என காரியத்தில் கண்ணாய் நின்றார் ரங்ஸ்

“நான் தோத்துட்டா இனிமே நீங்க சொல்ற எதுக்கும் மறுத்து பேசல, போதுமா”

“ஆஹா, லைப் டைம் ஆபர்” என மகிழ்ச்சியில், ஓரடி உயரம் கூடி விட்டது போல் உணர்ந்தார் ரங்கமணி

Amazon.in Deals👇

Amazon.com Deals👇
றுநாள் காலை லேட்டாக எழுந்த ரங்கமணி, சமையல் அறையில் இருந்த தங்கமணியிடம் சென்று, “என்ன தங்கம் நீ? ஏன் நேரத்துல எழுப்பல, மணி எட்டாக போகுது. எப்ப கெளம்பி எப்ப நான் ஆபீஸ் போறது” என டென்ஷன் ஆனார்  

“ஏன் அலாரம் வெச்சுருந்தீங்க தானே?” என தங்கமணி பூடகமாய் கேட்க 

“என்னைக்கி நான் அலார சத்தத்துல எழுந்துருக்கேன், நீ தான எழுப்புவ” என்றார் மனிதர் வெள்ளந்தியாய்

“அதாவது அலாரம் அடிச்சாலும் பிரியோஜனமில்ல, நான் வந்து தான் எழுப்பணும் இல்லையா?” என வினயமாய் வினவினார் தங்ஸ்

“பின்ன? அந்த அலார சத்தமெல்லாம் கேட்டு எவன் முழிக்கறது”

“ரெம்ப தேங்க்ஸ்’ங்க” என சிரித்தார் தங்கமணி

“எதுக்கு?” என ரங்கமணி முழிக்க 

“சயின்ஸ் எல்லாம் சும்மா, ஆர்ட்ஸ் தான் முக்கியம்னு நீங்களே ஒத்துகிட்டதுக்கு”

“என்ன என்ன? நான் எப்ப ஒத்துக்கிட்டேன்?” என ரங்கமணி பதட்டமாக 

“இப்பத் தான்” என சிரித்தாள் தங்கமணி  

“இப்பவா? நான் ஒண்ணும் சொல்லலியே” என புரியாமல் விழித்தார் ரங்கமணி

“ஓ… இந்த ஆண்களுக்கு எல்லாமே உப்பு புளி போட்டு விளக்கணுமல்ல, மறந்துட்டேன். சரி நானே சொல்றேன். அதாவது உங்க சயின்ஸ் கண்டுபிடிச்ச அலாரம் பிரயோஜனமில்ல, ஆர்ட்ஸ் அதாவது Human Resource, அதாவது நான், நான் வந்து தான் எழுப்பணும்னு நீங்க தானே இப்ப சொன்னீங்க” என தங்கமணி சிரித்துக் கொண்டே கூற

ரங்கமணிக்கு அப்போது தான் விஷயம் எங்கே போகிறது என்பது புரிந்தது. ஒரு கணம் அசடு வழிந்தாலும், ‘மீசையில் மண் ஒட்டாது’ என்ற கதையாய் சுதாரித்துக் கொண்டார் 

“ச்சே ச்சே… அப்படி ஒண்ணுமில்ல. அலாரம் அடிச்சப்ப ஞாபகம் ஆச்சு, எப்பவும் போல நீ வந்து எழுப்பற வரை படுக்கலாம்னு கொஞ்சம் கண்ணசந்தேன்” என சமாளித்தார்

“ஹா ஹா, இந்த சமாளிப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம். ஒத்துக்கோங்க, இல்லேனா Human Resource, அதாவது என்னை அவமதிச்சீங்கனு நான் சமைக்காம ஸ்ட்ரைக் பண்ணுவேன். உங்க சயின்ஸ் கண்டுபிடிச்ச மிக்சி கிரைண்டர் எல்லாத்தையும் ஒடச்சு சாப்பிடுங்க” என மிரட்டினார் தங்ஸ்

“அடிப்பாவி, இப்படி எல்லாம் ப்ளாக்மெயில் பண்ணுறியே. திஸ் இஸ் டூ மச்” என புலம்பினார் ரங்ஸ்

“இதுல ப்ளாக்மெயில் எங்க வந்தது, உண்மையத் தானே சொல்றேன். ஆர்ட்ஸ் இல்லாம சயின்ஸ் இல்ல, கரெக்ட் தானே” என நமட்டு சிரிப்பு சிரித்தாள்  தங்கமணி

“முடியாது, ஒத்துக்க மாட்டேன்” என முரண்டு பிடித்தார் ரங்கமணி

“அப்ப நாளைக்கும் நான் எழுப்ப மாட்டேன். டெய்லி லேட் லேட்டா ஆபீஸ் போங்க. அதோட விளைவு மெமோ வரும், ப்ரமோஷன் லேட் ஆகும், உங்களுக்கு டென்ஷன் ஆகும், குடும்பத்துல சண்டை வரும், கொழந்த படிப்பு கெடும், மேற்படிப்புக்கு நெறைய டொனேசன் கட்ட வேண்டி வரும், அவ எதிர்காலத்துக்கு இருக்கற சேமிப்பு கொறையும், அப்புறம்….” என்று தொடர்ந்து கொண்டே போன தங்கமணியை 

“ஸ்டாப் ஸ்டாப்” என நிறுத்திய ரங்கமணி, “அடிப்பாவி, ஒரு சின்ன அலாரம்ல ஆரம்பிக்கற பிரச்சனைய கொஞ்சம் விட்டா ஐ.நா சபைல கொண்டு போய் தான் நிறுத்துவ போல இருக்கே. இப்படி ஒரு கற்பனை திறன் இந்த ஜென்மத்துல எங்களுக்கு வராதுடா சாமி. இல்ல தெரியாமத்தான் கேக்கறேன், இதுக்கெல்லாம் உங்கம்மா வீட்டுலையே ஸ்பெஷல் ட்ரைனிங் எதுனா குடுத்துடுவாங்களோ?”

“ஆண்கள சமாளிக்க பெண்களுக்கு கடவுளே குடுத்த வரம் இது. அதெல்லாம் விடுங்க, ஆர்ட்ஸ் இல்லையேல் சயின்ஸ் இல்லைங்கரத ஒத்துக்கறீங்களா இல்லையா?” என தங்கமணி பாயிண்ட்டை பிடிக்க 

“ஆள விடு தாயே, ஒத்துக்கறேன். மீ எஸ்கேப்” என ஓடினார் ரங்கமணி

ஓடினவர் நேரா நம்மகிட்ட என்னமோ சொல்லணும்னு வந்துருக்கார். ஏதோ கருத்து சொல்லணுமாம், கேட்டுக்கோங்க 

“ஹலோ, மைக் டெஸ்டிங்… ம்… ம்க்கும். என் இனிய தமிழ் தெலுகு கன்னட மலையாள இன்னும் பல பாஷை மக்களே… என்னோட வாழ்க்கை அனுபவத்துல சொல்றேன். கல்யாணம் பண்றப்ப செய்வாய் தோஷ ஜாதகம் செய்வாய் தோஷ ஜாதகத்தோட, இல்லாத ஜாதகம் இல்லாததோட, இப்படி எந்த பொருத்தம் பாக்கரீங்களோ இல்லையோ. ஆர்ட்ஸ் படிச்ச பொண்ணை சயின்ஸ் படிச்ச பையனுக்கோ, சயின்ஸ் படிச்ச பொண்ணை ஆர்ட்ஸ் படிச்ச பையனுக்கோ மேட்ச் பண்ணாதீங்க. அப்புறம் என் கதி தான் சொல்லிட்டேன். ஐயோ… தங்கமணி வர்ற சத்தம் கேக்குது. மீ எஸ்கேப்” என ஓடியவர் “போச்சே, அநியாயமா ஒரு மாசத்துக்கு நடிகை பேட்டி போச்சே” னு பொலம்பிகிட்டே போறார் 😃🤣😂

Amazon.in Deals👇

Amazon.com Deals👇
Similar Posts

2 thoughts on “தங்கமணி சபதம்… 😂😃🤣 (நகைச்சுவை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: