சமையல் தீபாவளி

சுக்டி! (குஜராத் / ராஜஸ்தான் இனிப்பு) ஆதி வெங்கட் – Diwali Recipe Contest Entry 8

குஜராத் பயணத்தில் தான் சாப்பிட்ட சுக்டி என்ற இனிப்பைப் பற்றி என் கணவர் பகிர்ந்து கொண்டதிலிருந்தே செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. சுவையோ அபாரம், செய்ய மிகவும் எளிமையாகவும் இருந்தது.

இந்த இனிப்பு ராஜஸ்தான், குஜராத் என இரு மாநிலங்களிலும் பிரபலமானது.

நான் இந்த இனிப்பை செய்ய நினைத்த அன்று, மிகவும் பரபரப்பான சூழ்நிலை. அலைச்சல், தொடர்ந்த அலைபேசி அழைப்புகள் என்று இருந்த போதிலும் என்னால் செய்ய முடிந்தது என்பதனால், எளிமையானது என்று சொல்கிறேன்.

தவிர்க்க முடியாத அலைபேசி அழைப்பிலும் பேசிக் கொண்டே செய்த இனிப்பு இதோ… பாகு வைக்க வேண்டிய அவசியமே இல்லை

தேவையானப் பொருட்கள்:-

  • கோதுமை மாவு – 1 கப்
  • நெய் – அரை கப்
  • வெல்லம் – கால் கப்
  • ஏலக்காய்த்தூள் – ½ தேக்கரண்டி
  • முந்திரி, பாதாம், பிஸ்தா – அலங்கரிக்க

செய்முறை:-

  • அடுப்பில் வாணலியை வைத்து, கொடுத்துள்ள அரை கப் நெய்யை விட்டு நன்கு சூடுபடுத்தவும்
  • அதில் கோதுமை மாவை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்
  • சிவந்ததும் அதில் கொடுத்துள்ள கால் கப் வெல்லத்தை சேர்த்து, அடுப்பை நிறுத்தி விட்டு வெல்லம் உருகும் வரை கலக்கவும்
  • இதில் ஏலக்காய் பொடி சேர்த்து, இந்த கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றை தூவி, சற்று கரண்டியால் அழுத்தி விட்டு ஐந்தே நிமிடத்தில் வில்லைகள் போட்டு விடலாம்

சுடச் சுட சுக்டி தயார். என்ன உங்கள் வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே!

சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇

ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி

சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇

Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: