in

“சஹானா”வின் சிறப்புப் பரிசு அறிவிப்பு 2020

"சஹானா"வின் சிறப்புப் பரிசு

வணக்கம்,

இந்த வருடம் “சஹானா”வில் தங்கள் எழுத்துக்களை பதிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 

கடந்த பத்து வருடமாய் இணையத்தில் எழுதி வந்தாலும், எழுத்தை பொழுதுபோக்காய் கருதி வந்த என்னை, நிறைய மாற்றி விட்டது நம் “சஹானா”   

புது எழுத்துக்களை / எழுத்தாளர்களை அறிமுகம்  செய்யும் வாய்ப்பு “சஹானா” மூலம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி

புதிதாய் எழுதும் சிலரின் பதிவுகளை அவசியமான திருத்தங்கள் (EDIT) செய்து வெளியிட்ட போது, அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்ததும், எழுதும் விதத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை கற்றுக் கொண்டதாய் கூறியதும் மனதை நிறைத்தது. நன்றி 

அதேப் போல், முன்பே பிரபலமான நட்புகள், என்னை நம்பி தங்கள் நேரத்தையும் எழுத்தையும் “சஹானா”வுக்கு பகிர்ந்தது மனதை நெகிழ்த்தியது. அவர்களுக்கும் எனது ஸ்பெஷல் நன்றி

எல்லாவற்றிக்கும் சிகரமாய், குழந்தைகள் ஆர்வமாய் “சஹானா”வுக்கு பதிவுகள் அனுப்புவது பெரும் மகிழ்ச்சி 

ஏனெனில், எழுத்தும் வாசிப்பும் குழந்தைகளின் மனதை செம்மைப்படுத்தும், அது அவர்களை இன்னும் பெரும் உயரங்களுக்கு செல்ல வழிகாட்டும். அந்த மாற்றத்தை நிகழ்த்த, சிறு பொறியாய் “சஹானா” இருப்பதில் பெரும் நிறைவு 

இனி வரும் வருடங்களில், “சஹானா”வை இன்னும் மெருகேற்றவும், பிரிண்ட் எடிஷன், பதிப்பகம் என அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் எண்ணம் உள்ளது. Let’s see what future holds and unfolds for us 

அதேப் போல், 2020ல் இன்னும் நிறைய புது போட்டிகள் பரிசுகள் என்ற திட்டம் இருக்கிறது. அதன் துவக்கமாய் நேற்று அறிவித்தது தான், “சிறந்த பதிவுப் போட்டி 2021” (மாதந்தோறும்).

ஜனவரி மாத போட்டியின் முடிவுகள் பிப்ரவரி 15 அன்று அறிவிக்கப்படும். பிப்ரவரி இறுதிக்குள் பரிசுகள் அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு மாதமும் அதேப் போல்  தொடரும். டிசம்பர் 2020 போட்டியின் முடிவுகள், ஜனவரி 15ல் அறிவிக்கப்படும்

தனிப்பட்ட முறையிலும், 2020 எனக்கும் மிகவும் ஸ்பெஷல் தான். Amazonல் 10 புத்தகங்கள் வெளியிட்டது, “சஹானா”வின் நான்கு மாத இதழ்களை Amazon மின் நூல்களாக வெளியிட்டது, நிறைய புது எழுத்தாள நட்புகளை பெற்றது, “சஹானா”வின் எடிட்டர் பொறுப்பு என, பல பரிமாணங்களில் இந்த ஆண்டு மறக்க முடியாத ஒரு ஆண்டே 

இதெல்லாம் சாத்தியமானது என்னால் மட்டுமல்ல, உங்களாலும் தான். அதற்கு ஒரு சிறப்புப் பரிசு தர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த அறிவிப்பு 

2020ல் “சஹானா”வில் என்னைத் தவிர, போட்டிக்கு மற்றும் போட்டி அல்லாமல் என மொத்தம் 30 பேர் பங்களித்துள்ளனர். அனைவருக்கும் எனது நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் 

அதில், அதிக பதிவுகளை கொடுத்த ஒருவருக்கும், அதிகம் பார்க்கப்பட்ட (Views) பதிவை எழுதிய ஒருவருக்கும் சிறப்புப் பரிசு வழங்கப்படுகிறது 

இவர்கள் இருவருக்கும், ஜனவரி 15க்குள் பரிசு அனுப்பி வைக்கப்படும். பரிசு சென்று சேர்ந்ததும், அது என்ன என்பதை இங்கு பகிர்கிறேன். Let it be a surprise for them 😊

சரி, பரிசு பெறுபவர்கள் யாரென பார்ப்போம்

சிறப்புப் பரிசு பெறும் இருவருக்கும், உங்கள் எல்லோரின் சார்பாகவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் 

2020ல் “சஹானா”வில் பங்களித்த 30 பேரின் பெயர் மற்றும் பதிவுகளின் என்ணிக்கையை இங்கு பகிர்ந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நட்பால் இணைவோம்எழுத்தால் உயர்வோம்… !!!”    

 

Thank you all and Happy New Year

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

Link to Subscribe Sahanamag’s Youtube Channel 👇

https://www.youtube.com/channel/UCrcdNZSpc151sRxHTzDrjUw  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. மிகவும் நன்றி . சஹானா மின்இதழ் மூலம் சிறந்த அங்கீகாரம் கிடைத்தது . உங்களுக்கும் வாசகர்களுக்கும் நலமான , வளமான புதிய 2021 வருஷம் பிறப்பிற்கு இனிய வாழ்த்துகள் . நன்றி வணக்கம் .

“சஹானா”வின் 2020 போட்டிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் 2021 போட்டி அறிவிப்பு   

சஹானாவின் “புத்தக வாசிப்புப் போட்டி – ஜனவரி 2021”