in

சஹானாவின் “புத்தக வாசிப்புப் போட்டி – ஜனவரி 2021” 

வணக்கம்,

“A reader lives a thousand lives before he dies . . . The man who never reads lives only one” 

மேற்கூறிய  வாசகத்தை கூறியவர், எழுத்துலகில் பல விருதுகளைப் பெற்ற, அமெரிக்காவின் தலை சிறந்த நாவலாசிரியரான “ஜார்ஜ் மார்ட்டின்”

நாம் ஒவ்வொரு புத்தகத்தை வாசிக்கும் போதும், கதையோடும், கதை மாந்தர்களோடும் ஒன்றி விடுவோம். அது நமக்கு “டைம் ட்ராவல்” என ஆங்கிலத்தில் சொல்வது போல், அந்த சூழலுக்கே சென்று வந்த உணர்வை தரும். அதை தான் ஆயிரம் வாழ்க்கை வாழ்ந்த அனுபவம் என்கிறார் எழுத்தாளர் “ஜார்ஜ் மார்ட்டின்” 

அத்தகைய வாசிப்பை ஊக்குவிப்பதும், புத்தகங்களை அதை விரும்பும் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதுமே, இந்த போட்டியின் முக்கிய நோக்கம் 

சஹானாவின் “புத்தக வாசிப்புப் போட்டி – ஜனவரி 2021” பற்றிய அறிவிப்புடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி 

வாசிப்புப் போட்டி

1.     சஹானாவின் புத்தக வாசிப்புப் போட்டி”, இனி மாதந்தோறும் தொடர்ந்து நடைபெறும்

2. எழுத்தாளர்கள் தங்கள் Amazon ebookஐ இனி வரும் மாத போட்டியில் சேர்க்க விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். நன்றி

3.  போட்டியில் புத்தகத்தை சேர்ப்பவர்கள், அந்த மாதம் போட்டியில் உள்ள ஏதேனும் மூன்று புத்தகங்களுக்கு விமர்சனம் வழங்க தயாராய் இருத்தல் வேண்டும். பரஸ்பர வாசிப்பு, சக எழுத்தாளர்களின் எழுத்தை அறிய ஒரு வாய்ப்பாய் அமைவதோடு, எழுத்துலக நட்பு வட்டத்தை விரிவாக்கி, இன்னும் நிறைய பேருக்கு உங்கள் எழுத்தை கொண்டு சேர்க்கும். அதற்காகத் தான், இந்த “மூன்று புத்தக வாசிப்பு கட்டாயம்” என்ற விதி சேர்க்கப்பட்டது. புரிதலுக்கு நன்றி

சஹானாவின் வாசிப்புப் போட்டிஜனவரி 2021″ விவரங்கள் 

1.  Amazon Kindle மூலம் பிரசுரிக்கப்பட்ட, பத்து புத்தகங்கள் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது

2. நாவல், சிறுகதைத் தொகுப்பு, பயண நூல், சமையல், கவிதைத் தொகுப்பு என பல்சுவை கலவையாய்  இந்த மாத வாசிப்பு போட்டிக்கான புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது

3. விமர்சனம் பதிய வேண்டிய புத்தகங்களின் விவரங்கள் மற்றும் Amazon link, இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது 

4.  இந்த 10 புத்தகங்களையும், Kindle Unlimited Subscription உள்ளவர்கள் இலவசமாய் வாசிக்கலாம்

5. போட்டியில் உள்ள சில புத்தகங்களை, அந்த எழுத்தாளர்கள் மாதத்தில் சில நாட்கள் “இலவசமாய்” வழங்க வாய்ப்புள்ளது. அந்த விவரங்கள் Facebookல் அவ்வப்போது பகிரப்படும் 

6.  இந்த வாசிப்பு போட்டியில் வழங்கப்படும் பரிசுகள்

  • முதலில் அதிக விமர்சனம் தருபவருக்கு
  • அதிக புத்தகங்களை வாசித்து விமர்சனம் தரும் தருபவருக்கு
  • சிறந்த விமர்சனம் தருபவருக்கு
  • அதிக விமர்சனம் பெரும் புத்தகத்தின் ஆசிரியருக்கு  

7. உங்கள் விமர்சனத்தை “இணைய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம்” என்ற Facebook Groupல் பதிய வேண்டும். Facebook Group Link இதோ – https://www.facebook.com/groups/onlinetamilwritersandreadersgroup/

8.  சிறந்த விமர்சனங்களின் தொகுப்பு, “சஹானா” இணைய இதழில் பிரசுரிக்கப்படும்

9.  உங்கள் விமர்சனத்தை பதிய கடைசி நாள் : ஜனவரி 31, 2021 

வாசிப்புப் போட்டியில் உள்ள Amazon புத்தக link மற்றும் புத்தக ஆசிரியர் உரை

All books FREE with Kindle Unlimited Subscription

வணக்கம்,

இது ‘Pen to Publish 4’ போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள எனது குறுநாவல். படித்து உங்கள் கருத்துக்களையும் நட்சத்திரங்களையும் அள்ளி வழங்குங்கள். இளைய தலைமுறையினரைப் புதைகுழியில் தள்ளும் போதை மருந்து விற்பனை செய்யும் கும்பலை ஒழிக்க நர்கோடிக் அதிகாரிகளின் வேட்டை பற்றிய கதை. தமிழ்நாட்டில் நடப்பதாக எழுதியிருக்கிறேன். கதையின் இறுதியில் ஒரு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறேன். விமர்சனம் தருபவர்கள்,  தயவு செய்து அந்த சஸ்பென்சை உடைக்காமல் விமர்சனம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்

நன்றியுடன்,

புவனா சந்திரசேகரன்

அன்பின் நண்பர்களுக்கு,

இந்த மின்னூல் மூலம், அந்தமான் தீவுகளுக்குச் சுற்றுலா செல்ல விரும்பும் நண்பர்களுக்கு பல விஷயங்களைச் சொல்ல முயன்று இருக்கிறேன். இங்கே செல்ல எந்த மாதங்கள் நல்லது, பயணம் எப்படிச் செய்ய வேண்டும், செலவு எவ்வளவு ஆகும், பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன? வசதிகள் எப்படி என பலவற்றையும் இந்த மின்னூலில் தந்திருக்கிறேன். கூடவே பயண ஏற்பாடுகள் எப்படிச் செய்ய வேண்டும், அங்கே இருக்கும் வசதிகள், தங்குமிடங்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்களின் தகவல்கள் என ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் சேர்த்திருக்கிறேன். சில வரலாற்றுக் குறிப்புகளும் உண்டு. போலவே அங்கே சென்றால் செய்யக்கூடாதது என்ன என்பதையும் சொல்லி இருக்கிறேன். இந்த மின்னூல் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். மின்னூலை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்வதோடு, நண்பர்களுக்கும் சொல்லுங்கள். இந்த நூல் மூலம் நீங்களும் அந்தமான் தீவுகளுக்குப் பயணிக்கலாம் – மனதாலாவது

நட்புடன்,
வெங்கட் நாகராஜ் , புது தில்லி – venkatnagaraj@gmail.com

வணக்கம் வாசக நட்புகளே,

மனதில் நிலைத்து நிற்கும் கதைகளின் அணிவகுப்பே, இந்த “அனல் மேலே பனித்துளி” எனும் சிறுகதைத் தொகுப்பு

நட்பு, காதல், தந்தை பாசம், புரிதல், பிரிவாற்றாமை, ஊடல், மழலைக்கான ஏக்கம், கூடா நட்பு, நகைச்சுவை என “நவரசமாய்” ஒன்பது உணர்வுகளை பதிவு செய்திருக்கிறேன் இந்த கதைகளில். அதன் காரணமாய், ஒரு முழு வாசிப்பு அனுபவத்தை உங்களால் உணர இயலும். வாசித்து உங்கள் கருத்தை பகிருங்கள். நன்றி

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த் – editor@sahanamag.com

வணக்கம்,

தனக்கான துணை யார்?

நீ மட்டும் போதும் என யார் யாரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்

நட்புடன்,

அகிலா வைகுந்தம்

வணக்கம்,

மூன்று பெண்கள் மூன்று திசைகளில் இருந்து ஒரே இடத்தில் கூடுகின்றனர். மூவருக்கும் இடையே உறவும் இல்லை, தொடர்பும் இல்லை. இவர்களுக்கு இடையே நடக்கும் உணர்ச்சி போராட்டமும், சமூக அவலமும், இவர்களை உறவு என்னும் பாலத்தில் பிணைக்கும் தூண்களாக மாறுகின்றது. அத்தகைய உறவின் பின் இருக்கும் நியாயத்தையும், அதன் அவசியத்தையும் விளக்குவதே இந்த நாவல் தரும் பாடம்

நட்புடன்,

பாரதிப்பிரியன்

வணக்கம்,

19 சிறுகதைகள் கொண்ட சிறுகதைத்தொகுப்பு, உண்மை சம்பவங்களிலிருந்தும், உண்மை சம்பவங்களின் போது நடந்த கிளைக்கதைகள், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சூழல்களில் நடந்த கதைகளாக மனிதர்களின் குணம் சார்ந்த, உணர்வுகள் சார்ந்த கதைகள், நட்பு, அன்பு, காதல், நம்பிக்கை, ஏற்றத்தாழ்வு, துரோகம், உதவி, ஏக்கம்,எதிர்பார்ப்பு, நகர்ப்புற, கிராமப்புற கதைகள் என பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை முறையைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.

 இப்படிக்கு

சிவஷங்கர் ஜெகதீசன் – +91-9500010353

வணக்கம்,

ஊரடங்கு காலத்தில் பிள்ளைகள் வீட்டிலேயே இருப்பதால் மாலை நேரம் அவர்களுக்கு எதையாவது கொறிக்க மாட்டோமா என்று தோன்றும் இல்லையா? சட்டென்று வீட்டிலேயே செய்து தந்தால் நன்றாக இருக்குமென்று என் மகளுக்குச் செய்து தந்த ஸ்நாக்ஸ் வகைகள் தான் இவை. வீட்டிலேயே செய்து சாப்பிடுவதால் சுகாதாரமாகவும், வயிற்றுக்குக் கெடுதல் செய்யாததாகவும், அதே சமயம் சிக்கனமாகவும் இருக்கும்

பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பண்டங்களை வைத்தே செய்த, 25 வகை ஸ்னாக்ஸ்/உணவு முறைகளை இந்த மின்னூல் வழி உங்களிடம் பகிர்ந்து இருக்கிறேன். நீங்களும் இவற்றை முயற்சி செய்து. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

நட்புடன்,

ஆதி வெங்கட், திருவரங்கம்.

வணக்கம்,

தளிர் மனம் யாரைத் தேடுதோ, என்னுடைய இரண்டாவது நாவல்

இரட்டை குழந்தைகளுடன் அஞ்ஞாதவாசமிருக்கும் டாக்டர். திவ்யவர்ஷினி. தனக்கு பிள்ளைகள் இருப்பதையே அறியாத பிஸ்னஸ் மேன் ஆதித்யராஜன், இவர்களுகிடையில் நடந்தது என்ன, நடப்பது என்ன என நடந்தவையும், நடப்புமாக பயணிக்கும் கதை. வாசித்து விமர்சனம் தாரீர்

தீபா செண்பகம்

வணக்கம்,

என் மனதுக்குள் தோன்றுகிற எண்ணங்களை வண்ணங்களாய் மாற்றி என் மொழியில் அழகு படுத்தியிருக்கிறேன். உலகின் அழகும் மொழியின் அழகும் இணைகின்ற புள்ளி கவிதை. அத்தகைய கவிதைகளை எழுதும் ஆர்வம் கொண்டு, நான் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பே இது.

நான் எழுதிய இந்தக் கவிதைகளின் நோக்கம், அழகியலை எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும்  வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே. என்னுடைய இந்த முதல் கவிதைத் தொகுப்புக்கு நீங்கள் தரும் ஆதரவு, நிச்சயம் எனது அடுத்தடுத்த தொகுப்புகள் விரைவில் கொண்டு வரப்படுவதற்கு  ஊக்கமாக இருக்கும்.வாசித்து உங்கள் கருத்தை பகிருங்கள். ஜனவரி 1 மற்றும் 14 தேதிகளில், இந்த புத்தகத்தை நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து வாசிக்கலாம்

நட்புடன்,

பா.சுதாகர்

வணக்கம்,

வாழ்க்கை ஒரே சீராய் ஓடிக் கொண்டிருப்பது போலத் தான் இருக்கும். ஆனால் ஒரு சில நினைவுகள் கூழாங்கற்களாய் மனதுள் உட்கார்ந்து விடும். வெளியே சொல்ல முடியுமா?? சொல்லி விட்டால், பின் விளைவுகள் எப்படி இருக்கும்?? மனதுக்குள் ஒளித்து வைக்க முடியாமல் போனால், என்னாகும்?? வாழ்க்கையே தடம் புரளுமோ?? தவித்தபடியே தான் அனைவரும்,

ஒளித்து வைத்தவற்றை அவிழ்ப்போமா?? வாருங்கள்.. கதைக்குள்ளே

நட்புடன்,

இன்னிலா போஸ்

 

வாசிப்பு வசப்பட வானமும் வசமாகும்… வாசித்து வானத்தை வசமாக்குங்கள். உங்கள் விமர்சனங்களையும் பகிருங்கள், பரிசை வெல்லுங்கள். நன்றி 

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

Link to Subscribe to Sahanamag’s Youtube Channel – https://youtu.be/jtCYVOVmW-M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    “சஹானா”வின் சிறப்புப் பரிசு அறிவிப்பு 2020

    சங்கமித்ரா (குறுநாவல் – பகுதி 4) – By Fidal Castro – ஜனவரி 2021 போட்டிப் பதிவு