சிதம்பர ஈசனே
சிற்றம்பல வாசனேஅன்பினால் வசப்படுத்தும்
அம்மையப்பனேஅரிதாரமாய் சாம்பல் பூசிய
அம்பலவாணனேஆரவார திருநடம் புரியும்
ஆதிரை அழகனேசுயமாய் உதித்திட்ட
சுயம்பு லிங்கனேமும்மூர்த்தியாய் அமைந்த
முக்கண் அரசனேஐம்பூதங்களையும் உள்ளடக்கிய
ஆதி மூலனேஐயங்கள் போக்கிடும்
கைலாய நாதனேஅகந்தையை அழித்திடும்
கங்கை நாயகனேவேதத்தின் சாரமாய் திகழும்
வேத வித்தகனேபால்பாகுபாடு பாராத
சமத்துவம் உணர்த்திட
சிவமும் சக்தியுமாய் ஆன
அர்த்த நாரீஸ்வரனேபரம்பொருளாய் விளங்கிடும்
பரமேஸ்வரனேமகிழ்ச்சியை அருளும்
மகேஸ்வரனே
நலங்கள் பயத்திடும்
நந்தி வாகனனேபுவனமெலாம் காத்திடும் புனிதனே
புலித்தோல் நின் புத்தாடை
புனைவோம் நின் பாமாலை!நின்னருளே ஆனந்தம்!
சிவசிவ எனும் நாமம்!நல்லருள் தந்திடும்
நமச் சிவாயமே!சிந்தையைச் சீராக்கிடும்
சித்தன் சிவமயமே!விந்தையை நிகழ்த்திடும்
வித்தக நாயகனே!போற்றி போற்றி சிவனடி போற்றி!!!
போற்றி போற்றி இறைவா போற்றி!!!
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
GIPHY App Key not set. Please check settings