தேவையான பொருட்கள்
- பச்சரிசி – 1 கப்
- ஜவ்வரிசி – 1 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் – 1/4 கப்
- சர்க்கரை – 1/2 கப்
- ஏலக்காய் – 2
- உப்பு – 1 சிட்டிகை
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
- பச்சரிசி மற்றும் ஜவ்வரிசியை 2-3 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.
- பின் நன்கு கழுவி நீரை வடித்துக் கொள்ள வேண்டும்
- பின்பு அதை மிக்ஸியில் போட்டு 1/4 கப் நீர் சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை சேர்த்த பின் தண்ணீர் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால் அதிக நீராகி நன்றாக வராமல் போய்விடும்.
- பின்பு அரைத்த மாவை ஒரு பௌலில் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து கிளறி விடுங்கள். மாவானது தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
- இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு (சற்று தாராளமாக) எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள்.
- அடுத்து ஒரு கரண்டி மாவு எடுத்து, எண்ணெயில் மெதுவாக ஊற்றுங்கள். பின் அதன் மேல் எண்ணெயை லேசாக ஊற்றி விடுங்கள்.
- பணியாரத்தின் முனைகள் பென்னிறமாக மொறுமொறுவென்று மாறும் போது எடுங்கள். இப்படி மீதமுள்ள மாவை ஊற்றி எடுத்தால், சுவையான தீபாவளி சீனி பணியாரம் தயார்!
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
GIPHY App Key not set. Please check settings