in ,

சீனிப் பணியாரம் (பா.ரேஷ்மா) – Deepawali Recipe Contest Entry 5

சீனிப் பணியாரம்

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – 1 கப்
  • ஜவ்வரிசி – 1 டேபிள் ஸ்பூன்
  • துருவிய தேங்காய் – 1/4 கப்
  • சர்க்கரை – 1/2 கப்
  • ஏலக்காய் – 2
  • உப்பு – 1 சிட்டிகை
  • தண்ணீர் – தேவையான அளவு
  • எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

  • பச்சரிசி மற்றும் ஜவ்வரிசியை 2-3 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.
  • பின் நன்கு கழுவி நீரை வடித்துக் கொள்ள வேண்டும்
  • பின்பு அதை மிக்ஸியில் போட்டு 1/4 கப் நீர் சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை சேர்த்த பின் தண்ணீர் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால் அதிக நீராகி நன்றாக வராமல் போய்விடும்.
  • பின்பு அரைத்த மாவை ஒரு பௌலில் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து கிளறி விடுங்கள். மாவானது தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
  • இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு (சற்று தாராளமாக) எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள்.
  • அடுத்து ஒரு கரண்டி மாவு எடுத்து, எண்ணெயில் மெதுவாக ஊற்றுங்கள். பின் அதன் மேல் எண்ணெயை லேசாக ஊற்றி விடுங்கள்.
  • பணியாரத்தின் முனைகள் பென்னிறமாக மொறுமொறுவென்று மாறும் போது எடுங்கள். இப்படி மீதமுள்ள மாவை ஊற்றி எடுத்தால், சுவையான தீபாவளி சீனி பணியாரம் தயார்!

    சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇

    ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி

    சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇

    Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE

    என்றும் நட்புடன்,

    சஹானா கோவிந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மறக்க முடியாத தீபாவளி (கீதா சாம்பசிவம்) – Deepawali Ninaivugal Contest Entry 2

    மறக்க முடியாத தீபாவளி (சாருநிதி நந்தகுமார் – 13 வயது பள்ளி மாணவி) – Deepawali Ninaivugal Contest Entry 3