Ginger (இஞ்சி) நட்ஸ் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபம். இதை நாம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே ஓவன் (Oven) இல்லாமல் எளிதாக செய்யலாம்.
இதில் நாம் மைதா சேர்க்காமல் செய்வதாலும், இஞ்சி சேர்ப்பதாலும், தீபாவளி சமயத்தில் பல பலகாரங்கள் சாப்பிடும் போது, மசாலா தேநீருடன் இந்த இஞ்சி நட்ஸ் குக்கீஸ் உண்பது ஜீரணத்துக்கு மிகவும் உதவியாய் இருக்கும்.
இந்த இஞ்சி நட்ஸ் குக்கீஸை மசாலா தேநீருடன் விருந்தினர்களுக்கு சாப்பிடக் கொடுத்துப் பாருங்கள். சபாஷ் வாங்குவது நிச்சயம்!!!
தேவையான பொருட்கள்
- 1/2 கப் வெண்ணெய்
- 1/2 கப் பொடித்த சர்க்கரை
- 1 கப் கோதுமை மாவு
- 1/2 ஸ்பூன் சுக்கு பவுடர்
- 1 சிட்டிகை உப்பு
- பாதாம், முந்திரி மற்றும் நட்ஸ் கலவை – ½ கப்
- 1 அல்லது 2 ஸ்பூன் பால்
- அடி கனமான பாத்திரம்
செய்முறை
- முதலில் 1/2 கப் வெண்ணையை அறை வெப்ப நிலையில் தயாராய்வைத்துக் கொள்ளுங்கள்
- பிறகு இந்த வெண்ணையை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு கரண்டி வைத்து நன்றாக குழைக்கவும்.
- 1/2 கப் சக்கரையை நன்றாக பொடித்து, அதை குழைத்த வெண்ணையுடன் சேர்க்கவும்
- வெண்ணை மற்றும் பொடித்த சர்க்கரை கலவையை, கரண்டி வைத்து நன்றாக குழைக்கவும்
- இந்த கலவையுடன் 1 கப் கோதுமை மாவை சிறிது சிறிதாக சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
- பின் அதில்1/2 ஸ்பூன் சுக்கு பவுடர், பாதாம், முந்திரி, உங்களுக்கு பிடித்த நட்ஸ் கலவை 1/2 கப், மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். சுக்கு பவுடர் சேர்ப்பதால், குக்கீஸ் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
- நட்ஸ் எல்லாம் சேர்த்த பின், 1 அல்லது 2 ஸ்பூன் பால் சேர்த்து பிசையவும். நிறைய பால் சேர்க்க கூடாது. 1 அல்லது 2 ஸ்பூன் பால் மட்டுமே சேர்க்க வேண்டும். பால் சேர்ப்பதால் இந்த கலவை ஒன்றாக பிசைய ஏதுவாக இருக்கும்.
- இந்த கலவையை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
- ஒரு தட்டில் வெண்ணையைத் தடவிக் கொள்ளவும்.
- பிறகு மாவை எலுமிச்சை அளவு சம உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும்.
- உருண்டையை கையில் எடுத்து உள்ளகையில் அழுத்தி, குக்கீஸ் வடிவில் தட்டி, வெண்ணையை தடவிய தட்டில் வைக்கவும்
- இது போல எல்லா உருண்டைகளையும் செய்து வெண்ணை தடவிய தட்டில் அடுக்கவும்
- ஒரு முள் கரண்டி எடுத்து குக்கீஸ் மேல் பகுதியில் அழுத்தவும். அது அழகானடிசைன் போல் இருப்பதோடு, breathing spaceம் கொடுக்கும்
- அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தில்உப்பு அல்லது சலித்த மணல் போட்டு மூடி வைத்து, 4 நிமிடங்கள் சூடு படுத்தவும்.
- பிறகு பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய ஸ்டாண்ட் வைத்து, அதன் மேல் குக்கீஸ் பரப்பிய தட்டை வைக்கவும்.
- இந்த பாத்திரத்தை மூடி மீடியம் தணலில் 25 நிமிடம் வேக விடவும்.
- 25 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து குக்கீஸ் பரப்பிய தட்டை எடுத்து, 15 நிமிடம் குளிர விடவும். 15 நிமிடத்திற்கு முன்பு குக்கீஸ் எடுக்க வேண்டாம். சூடாக இருக்கும் போது குக்கீஸ் மிருதுவாக இருக்கும் ஆதலால் உடைந்து போக வாய்ப்புண்டு. 15 நிமிடத்திற்கு பிறகு ஆறியவுடன் நன்றாக கரமொர என்று இருக்கும்.
- இப்போது நம்முடைய கரமொர என்று இருக்கும் சுவையான இஞ்சி நட்ஸ் குக்கீஸ் தயார்.
- இதை காற்று புகாத டப்பாக்களில் வைத்து நீங்கள் தினமும் உங்கள் தேநீருடன் சுவைக்கலாம்.
வணக்கம், தீபாவளி நாளான நவம்பர் 14 அன்று போட்டி முடிவுகளை அறிவிப்பதாக கூறி இருந்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட போட்டிக்கு நிறைய பதிவுகள் வந்திருப்பதால், அதில் சிறந்தவற்றை (Shortlisted) நம் இதழில் பதிவிடவும், வெற்றியாளர்களை தேர்வு செய்யவும், மேலும் சற்று அவகாசம் தேவைப்படுகிறதுமுடித்த வரை, அடுத்த வாரம் வெற்றி பெற்றவர்களின் விவரத்தை அறிவித்து விடுகிறேன். புரிதலுக்கு நன்றி. ஆர்வத்துடன் போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
சுவையான, எளிதான இஞ்சி நட்ஸ் குக்கீஸ்…செய்து பார்க்கிறேன்.
நன்றிப்பா
Thanks Adhi Venkat