சமையல் தீபாவளி

பனங்கருப்பட்டித்தூள் ரவா கேசரி (ஜெயந்தி ரமணி) – Deepawali Recipe Contest Entry 6

தீபாவளிக்கு ஏதாவது வித்தியாசமா செய்யணும்னு நினைச்சேன். மருமகள் வாங்கி வந்த பனங்கருப்பட்டித்தூள் கண்ணில் படவே, அதை வைத்து ரவா கேசரி செய்தேன். மகன், மருமகள், பேத்திகளுக்கு ரொம்பவே பிடித்தது. உங்களுடன் பகிர்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

தேவையான பொருட்கள்

  • ரவை – 1 கப்
  • பனங்கருப்பட்டித்தூள் – 1 ¾ கப் (இனிப்பு தூக்கலாக வேண்டும் என்றால் 2 கப் போட்டுக் கொள்ளலாம்)
  • நெய் – ½ கப் போதும் (ஆனா நான் கொஞ்சம் தாராளமாக 1 கப் போட்டேன்)
  • முந்திரி – நம்ப இஷ்டம்
  • தண்ணீர் – 2 ½ கப்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் பனங்கருப்பட்டித்தூளைப் போட்டு, ஒரு கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து, கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் நெய் விட்டு, முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மீதமுள்ள நெய்யை விட்டு, ரவையை சேர்த்து குறைந்த தீயில் ஒரு ஐந்து நிமிடங்கள் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு வடிகட்டிய கருப்பட்டி நீருடன், 2½ கப் வெதுவெதுப்பான வெந்நீர் சேர்த்து, பின் வறுத்த ரவையும் சேர்த்துக் கிளறவும்.
  • நன்கு திரண்டு வாணலியில் ஒட்டாமல் வரும் போது, நெய் தடவிய பாத்திரத்தில் போட்டு உங்கள் இஷ்டப்படி அலங்கரியுங்கள்
  • நான் ஏலக்காய் தூள் சேர்க்கவில்லை. விரும்பினால் சேர்த்துக் கொள்ளுங்கள்

    சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇

    ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி

    சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇

    Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE

    என்றும் நட்புடன்,

    சஹானா கோவிந்த்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!