எழுத்தாளர் வைஷ்ணவி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அந்த கிரகப்பிரவேச வீட்டிற்குள் நுழைந்தான் அவன். தரையில் பதிக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களும் கிண்ணென்ற தேக்கு மரக் கதவுகளும் உரிமையாளரின் நிதிநிலைமையை பறைசாற்றின.
ஆளாளுக்கு மொபைலில் மூழ்கி இருந்தனர். வரவேற்க யாருமில்லை. மனித மனங்கள் எவ்வளவு குறுகிவிட்டன? வசதி பெருக பெருக சில அடிப்படை பண்புகள் காணாமல் போய்விடும் போல என நினைத்தான்.
சாப்பிட்ட பின் மொய் எழுதிய அவன், ஒரு ஓரமாக நாற்காலியில் அமர்ந்து கைபேசியில் ஏதோ அகழ்ந்து கொண்டிருந்தான். இப்போது அவன் மனசாட்சி அவனை, கேலி செய்ய தயாரானது.
எழுத்தாளர் வைஷ்ணவி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings