in ,

நவராத்திரி நாயகி (நவராத்திரி முதல் நாளுக்கான பாமாலை, விளக்கத்துடன்) – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)

நவராத்திரி நாயகி

தேவியின் சிந்தனை

ஶ்ரீதேவிதுப்யம் நமேந்நமஹ:

மஹாபராசக்தியான ஶ்ரீதேவி எங்கு இருப்பாள் என்று கேட்டால், காளிதாஸன் ஒரு பெரிய லிஸ்டே தருகிறார

கடைசி வரியைப் படிக்கும் போது தான் நமக்கு புலன் ஆகிறது, அவள் இல்லாத இடமே இல்லை என்பது

வட மொழியைப் பொறுத்தவரை, காளிதாஸன் சில இடங்களில் ஆதி சங்கரரையும் மிஞ்சிவிடுகிறார்.

மஹகவி காளிதாஸனின் ஸ்யாமளா தண்டகத்தின் நிறைவு துதியிலிருந்து,  சில வரிகளைக் பார்ப்போம்

ஸர்வா தீர்த்தாத்மிகே,

ஸர்வ மந்த்ராத்மிகே,

ஸர்வ தந்த்ராத்மிகே,

ஸர்வ யந்த்ராத்மிகே,

ஸர்வ பீடாத்மிகே,

ஸர்வ தத்வாத்மிகே,

ஸர்வ சக்த்யாத்மிகே,

ஸர்வ வித்யாத்மிகே,

ஸர்வ யோகாத்மிகே,

ஸர்வ நாதாத்மிகே,

ஸர்வ சப்த்தாத்மிகே,

ஸர்வ வர்ணாத்மிகே,

ஸர்வ விஸ்வாத்மிகே,

ஸர்வ தீக்ஷாத்மிகே,

ஸர்வ ஸர்வாத்மிகே,

ஸர்வகே

ஹே ஜகந் மாத்ருகே,

பாஹிமாம் பாஹிமாம் பாஹிமாம்,

தேவீ துப்யம் நமோ

தேவி துப்யம் நமோ

தேவிதுப்யம் நம:

எல்லா நீர்நிலைகளிலும் நிறைந்து இருப்பவளே,

எல்லா மந்திரங்களிலும் உறைந்து இருப்பவளே,

எல்லாவற்றிலும் தந்திரரூபமாக இருப்பவளே,

எல்லாவற்றிலும் யந்திர ரூபமாக இருப்பவளே,

எல்லா பீடங்களிலும் பூர்ணமாக இருப்பவளே,

எல்லாவற்றிலும் உட்பொருளாக இருப்பவளே,

எல்லா சக்திகளையையும் உள்ளடக்கியவளே ,

எல்லா கலைகளையும் உணர்ந்தவளே,

எல்லா யோகங்களையும் கற்றவளே,

எல்லா நாதங்களிலும் இருப்பவளே,

எல்லா சப்தங்களிலும் ஒலிப்பவளே,

எல்லா பிரிவுகளுமாக இருப்பவளே,

எல்லா உலகத்திலும் இருப்பவளே,

எல்லா உபதேசங்களிலும் பூரணமாய் இருப்பவளே,

எல்லாவாற்றிலும் எல்லாமாய் இருப்பவளே,

அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவளே, அகிலமெல்லாவற்றுக்கும் தாயே,

என்னைக் காப்பாற்று !

என்னைக் காப்பாற்று !

என்னைக் காப்பாற்று

தேவி நீயே துணை!

தேவி நீயே துணை!

தேவி நீயே துணை

நவராத்திரி முதல் நாளின் நாமம்

இன்றைய நாமம் – லலிதா ஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் அடி

“ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ |

சிதக்னி குண்ட ஸ்ம்பூதா தேவகார்ய சமுத்யதா ||”

அம்மா! மகாராணி! உயர்ந்த ஸிம்ஹாசனத்தில் அமர்ந்திருப்பவளே !

சித்தமான அக்னிகுண்டத்திலிருந்து தோன்றியவளே!

தேவர்களின் கார்யசித்திக்காக எழுந்து அருளியவளே. உனக்கு நமஸ்காரம்.

இதில் ஒரு விசேஷம் பார்த்தீர்களா ! உலகத்தின் ஐந்தறிவு அல்லது ஆறறிவு பெற்ற எந்த உயிராக இருந்தாலும், எந்த மொழியில் பேசினாலும், அதனுடைய முதல் வார்த்தை “அம்மா” தான்

ஆங்கிலத்தில் வரும் மதர் என்ற வார்த்தையே, வடமொழியில் உள்ள மாதா என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுவர்.

லலிதா ஸ்கஸ்கரநாமத்தில்  வரும் முதல் வார்த்தையே மாதா தான்.

நம் எல்லோருக்கும் ஆதி மாதா அவள், நாம் எல்லோரும் அவள் குழந்தைகள்.

அம்மாவுக்கும் குழந்தைக்கும், எப்போதும் ஒரு பிரிக்க முடியாத பிணப்பு உண்டு.பிறந்த சிறு குழந்தை 6 மாதம் வரையில் தனக்கு எல்லாமே அம்மா தான் என்று நினைத்துக் கொள்ளும்

மற்ற உறவுகள் தந்தை உள்பட பின்னால்தான். இன்னும் சொல்லப் போனால், அம்மாவின் குரலை கர்ப்ப காலத்திலேயே கேட்க ஆரம்பித்து விடுமாம்.

அதனால்தான் ஸ்ரீமாதா என்ற முதல் வார்த்தையோடு ஆரம்பிக்கிறது

ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ 

எனக்கு தாயாராக இருந்தாலும் அவள் மஹாராணி, அது மட்டுமல்ல அவள் இருப்பதோ சிம்ஹாசனத்தில்.

இந்த எளியவனுக்கு தாயாராக இருப்பதால், அவளை எளியவளாக எண்ணி விடாதீர்கள். அவள் அகில உலகுக்கும் மஹாராணி

முத்துஸ்வாமி தீக்க்ஷதர்பேகட கீர்த்தனை

முத்துஸ்வாமி தீக்க்ஷதரின், ஸ்ரீ மாதா ஷிவவாமாங்கே” என்ற பேகட கீர்த்தனையில் இவ்வாறு பாடுகிறார்

ஸ்ரீ மாதா சிவவாம மாங்கே, ஸ்ரீ சக்ரரூப தாடங்கே மாமவ1

ஸ்ரீ மஹாராஜ்ஞீ வதநஸ்ஸசாங்கே சித்ப்ரதி பிம்பே மாமவ என்று லலிதா ஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் அடியை வைத்தே, திருச்சி அகிலாண்டேஸ்வரியைப் பாடினார்.

“சிதக்கினி குண்ட ஸ்ம்பூதா” 

சித் என்பது, உள் மனதுக்குள் இருப்பது. யோகிகளின் கடைசி நிலை சித், அந்த நிலை வந்து விட்டால், நாம் வேறு கடவுள் வேறு என்ற நிலை போய்விடும்

கடவுளை நம் சித்தத்திலேயே பார்க்கலாம்.

“சித்தத்துனுள்ளே சிவலிங்கம் காட்டி” என்ற நிலை.

மனசு, புத்தி, அஹங்காரம், அந்தகரணம், அடுத்த நிலை சித்தம், இவையெல்லாம் சித்தத்தில் ஒடுங்கும்.

இதைத் தான் பாரதி, “அந்த கரணமெல்லாம் சிந்தையிலே ஒடுங்கி” என்கிறார்

அப்பேற்பட்ட சித்தமாகிய அக்னி குண்டத்திலிருந்து தோன்றியவள் தான் ஸ்ரீ மாதா.

தேவ கார்ய சமுத்பவா 

தேவர்களின் கார்யமான அசுரர்களை வதம் செய்யவேண்டும் என்பதற்காக, சித் அக்னி குண்டத்திலிருந்து வேகமாக மிகுந்த ஆற்றலுடன் தோன்றியவள்

#ads

‘நவராத்திரி கையேடு’ போல் அமைந்த, ‘சஹானா’வின் 2020 நவராத்திரி சிறப்பிதழை வாங்க. கீழே கொடுத்துள்ள படத்தை கிளிக் செய்யவும்👇

இந்த புத்தகத்தில் உள்ள நவராத்திரி சிறப்பு பதிவுகள் பின் வருமாறு

  • நவராத்திரி வழிபாடு உருவான கதை
  • கொலுப்படி அமைத்தல் மற்றும் அலங்காரங்கள்
  • நவராத்திரி பூஜைக்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள்
  • நவராத்திரி ஒன்பது நாட்கள் மற்றும் விஜயதசமி அன்று பூஜை செய்யும் முறைகள் (தனித்தனியே விளக்கமாக)
  • நவராத்திரி ஒன்பது நாளுக்கான நிவேதன செய்முறைகள் (26 Recipes)
  • நவராத்திரிக்கான பாமாலை
  • நவராத்திரி நாட்களுக்கான தேவியின் நாமங்கள் (விளக்கத்துடன்)
  • லலிதா சஹஸ்ர நாம விளக்கங்கள் 
  • அம்பாளின் கேசாதி பாத வர்ணனைக்கான விளக்கங்கள் 
  • அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள்

கொலு பொம்மைகள் / ஸ்டாண்ட் வாங்க Amazon இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

நவராத்திரி தொடர்பான அனைத்து பதிவுகளும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. @திராச, நல்லா இருக்கு. இது என்ன போட்டினு நினைச்சேன். ஆனால் இதுவும் தேவைதான். முதல் வரவா சஹானாவுக்கு? நல்வரவு. தொடருங்க! தொடருவீங்க இல்லையா?

நவராத்திரி முதல் நாள் (நவராத்திரி பதிவு 4) – எழுதியவர்: கீதா சாம்பசிவம்

நவராத்திரி இரண்டாம் நாள் (பூஜை முறை – பாமாலை – பூமாலை – நிவேதனம்) – (நவராத்திரி பதிவு 5) – எழுதியவர் : கீதா சாம்பசிவம்