2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25
சூரியனின் வெளிச்சத்தின் தங்க நிறம் பூமி எங்கும் பூசப் பட்டுக்கொண்டிருந்தது. பறவைகள் தங்கள் தங்கள் வேலைக்குப் போவதற்கு “கிச்..கிச்…” குரல் எழுப்பி தயாராகிக் கொண்டிருந்தன. இரவு மகள் பூமித்தாயிடம் விடைப்பெற்றுக் கொண்டிருந்தாள்.
அலைபேசியை எடுத்துப்பார்த்த திலக் “என்ன அரசு இவ்வளவு காலையிலே போன். எதாவது அவசரமா?” என்றான்.
“ஆம் தீபக். என்னை அப்பாவின் ஆட்கள் சூழ்ந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் ஒரு வருடத்திற்காவது நான் ஒளிந்தாக வேண்டும்.”
“ஒன்று புரியாமல்தான் கேட்கிறேன் அரசு. எதற்காக இந்த ஒளிவு மறைவு. நீயும் உன் உலகம் கட்ட ஆரம்பித்து விட்டாய். வீட்டோடு போய்விடுவது நல்லது தானே.” என அவன் பேசி முடிப்பதற்குள் இன்னும் ஓராண்டாவது ஓரளவு சம்பாத்தியம் செய்து இன்னும் சில வியாபாரங்களை நிலைப்படுத்தி விட்டு அம்மா அப்பாவிடம் திரும்பலாம் என்றிருக்கிறேன்.” என்றான்.
“சரி. இப்போ எதற்காக அழைத்தாய்? இங்கே இன்று என் அலுவலகத்திற்கு என் அம்மா வரக்கூடும் என்று அனுமானிக்கிறேன். அதனாலே சிங்கப்பூருக்கு ஒரு டிக்கெட்டும் ஒரு பயணிகள் விசாவும் எடுத்துவிடு. நான் நேராக ஏர்ப்போர்ட் வருகிறேன்.”
“சிங்கப்பூரில் எங்கே தங்கப் போகிறாய்?”
“சொல்லப் போனால் இது ஒரு வியாபாரப் பயணம்தான். உன்னிடம் ஏற்கெனவே சொல்லியிருந்த படி நான் குஜராத்தில் ஒரு எண்ணெய் கம்பெனியில் ஒப்பந்தம் செய்திருந்ததை விரிவாக்க சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தோம்.”
“ஏய் அரசு எங்கே போகிறாய் என்றுதான் புரியவில்லை. இந்த எண்ணெய்க் கிணறு விவகாரத்தில் எல்லாம் எப்போது நுழைந்தாய். விட்டால் நிலாவில் போய் ரியல் எஸ்டேட் வியாபாரம் நடத்தப்போய் விடுவாய் போலிருக்கிறதே.”
“முடிந்தால் அதையும் ஒருகை பார்த்து விட வேண்டியதுதான். சரியாகச் சொன்னால் அடுத்த வாரம் தான் சிங்கப்பூர் பயணமே முடிவு செய்திருந்தேன். இப்போது அம்மாவின் தொந்தரவு…. வீட்டிற்குப் போய் விடலாம்தான். அப்பா இது உங்கள் இரத்தம். என்னாலும் இந்த அளவிற்கு கொடி கட்ட முடியும் என்று அவருக்கு முன்னால் போய் நிற்க வேண்டும். ஏய்.. என்னப்பா. பேச்சை காணோம்.”
“உண்மையிலேயே நீ ஒரு அதி வேக பிஸினஸ் மேகந்தான். மறுக்க வில்லை. எங்கேயாவது சறுக்கி விடுவாயோ? என உன் வேகம் தான் பயம் காட்டுகிறது.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. அம்மா அப்பாவிடம் திரும்பி விட்டால் இந்த வேகம் கண்டிப்பாக வடிந்து விடும்.”
அதுவும் சரிதான். நான் விமானப் பயணச் சீட்டும் விசாவும் கிடைத்தவுடன் அழைக்கிறேன்.” என்றான் தீபக்.
“சரி.” என்று போனை வைத்து விட்டு சன்னல் வழியாக எட்டிப்பார்த்தான் அரசு. ரோட்டில் பைக்கை நிறுத்தி அதில் சாய்ந்து நின்று சிகரெட் குடித்துக் கொண்டிருந்தார் அப்பாவின் நண்பர் பாபு.
சட்டையை வேகமாக எடுத்து மாட்டிக்கொண்டு பின்னால் வெளியே வந்து, ஒரு டாக்சியில் ஏறிக் கொண்டு “காந்தவிலி போப்பா” என்றான்.
திரும்பவும் அலை பேசியில் அழைப்பு வர “யாரு?” என்றான் அரசு.
“சார் நாங்கள் ‘தின விடியல்’ தினசரி பத்திரிகையிலிருந்து பேசுகிறேன்.”
“சரி. சொல்லுங்க. விளம்பர சம்பந்தமா நீங்கள் பேச வேண்டுமெனில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்” என்று அவசரமாகச் சொன்னபோது “சார் நாங்கள் அதற்காக கூப்பிட வில்லை. எல்லா ஆண்டும் ‘ஒரு தமிழ் இளம் வியாபாரக் காந்தம்’ என்று ஒரு தமிழ் வியாபாரியை (பிஸினஸ் மேனை)த் தேர்ந்து அவருக்கு விருது கொடுப்பது வழக்கம்” என முடிக்கு முன் …
“இந்த ஆண்டு… நான் கொஞ்சம் அவரசமாய் போய்க்கொண்டிருப்பதால் அடுத்த அண்டு பார்த்துக் கொள்ளலாமே. நீங்கள் வேறு யாரையாவது முயற்சி செய்யுங்களேன்…” என்றான்.
“சார், இந்த வருடம் உங்களைத் தேர்வு செய்து விட்டோம். நீங்கள் சம்மதம் சொல்லி விட்டால்….”
“சரி. எங்கே? எப்போது? என்ன நிகழ்வு?”
‘’சார் வருகிற இருப்பத்தொன்றாம் தேதி ஞாயிறு மாலை…. ‘’ என்றது எதிர்முனை.
‘’ஒரு நிமிடம்’’ என்று சொல்லி விட்டு கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் அன்று வேறு ஏதாவது பணி இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து விட்டு ‘’சரி சொல்லுங்கள்’’ என்றான்.
‘’மகா கவி காளிதாஸ் அரங்கத்தில் ஒரு மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறோம். மஹாராஷ்ட்ரா மாநில முதல்வர் வந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.”
“சரி, எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? “ என்றார்.
“எந்த விளம்பரம் போட்டாலும் என் பெயர் போடாமல் கொஞ்சம் சஸ்பென்ஸாக இருந்தால் நலமாக இருக்கும்.”
“ உங்கள் விளம்பரத்திற்கான எல்லா செலவையும் நானே ஏற்றுக் கொல்கிறேன்.” என்றான் அரசு.
“ஒவ்வொருதரும் தன் பெயர் போட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் இந்நாளில் பெயர் போட வேண்டாம் என்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது. திரும்பவும் தொடர்பு கொள்கிறோம்.” என்றது எதிர்முனை.
“சரி, முடிவு பண்ணி விட்டு அழையுங்கள்” என்று அலை பேசியை மூடி விட்டு ‘என்ன செய்யலாம். அப்பா ஏன் என்னை இவ்வாறு துரத்துகிறார்?” என்று அரசு யோசித்துக் கொண்டிருந்த போது “சார் எங்கே இறங்க வேண்டும். காந்திவிலி வந்தாச்சு”” என்றான் ஓட்டுநர்.
“அந்த புனித பாத்திமா ஆலயத்திற்கு பக்கத்தில் இறங்கிக் கொள்கிறேன்” என்றான் பையிலிருந்து பணம் எடுத்தவாறு.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings