2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20
அரசு அங்கு வந்த போது அந்த நிகழ்ச்சி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
அரசு உள்ளே வருகிறான் என்று தெரிந்தத்தும் வேக வேகமாக ஓடிவந்து அவனை எதிர் பாராததுபோல (நடித்து) கீழே விழுந்தாள் பூனம்.
பூனத்தைத் தூக்கி மெதுவாக நாற்காலியில் அமர்த்தி பாட்டிலில் இருந்த குளிர் நீரை எடுத்து அவள் முகத்தில் அடித்து விட்டு அவள் வாயில் குடிக்கவும் கொடுத்தான்.
அவள் மயக்கம் தெளிந்து எழுவதுபோல பாவ்லா செய்து கொண்டே கண்களை மெதுவாகத் திறந்து “ஹும்.. “ ஏய் அரசு எனக்கு என்னாயிற்று”? என்றாள்.
கொஞ்சம் கோபத்தோடு “உனக்கு ஒன்றும் ஆகவில்லை. பூனம் இப்படிச் செய்வதில் உனக்கு வருத்தமில்லை…? வெட்கமில்லை? யேய்ய்.. ஏதோ சாதாரண ஆண்மகனை வீழ்த்துவது போல என்னிடம் ஏன் நடந்து கொள்கிறாய்?”
“பூனம் நீ என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று முதலில் கேட்டபோது விளையாடுகிறாய் என்றுதான் நினைத்தேன்.”
“பூனம் இந்த விளையாட்டு எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குத் தேவையுமில்லை. நான் என் வீட்டை விட்டு வெளியே வந்தது இப்படி ஏதாவது ஒரு பெண்ணின் வலையில் விழுவதற்கல்ல. நீலா என்று ஒரு பெண்ணை விழுந்து விழுந்து காதலித்தேன் தெரியுமா? இன்னும் கூட அந்த வடு மாறவில்லை. என்ன சொன்னாள் தெரியுமா? பணமில்லை என்றால் காதலில்லை என்றாள். சே! என் பணத்தை காதலித்திருக்கிறாள் என்று தெரிந்து வெறுத்துபோய் விட்டேன்.”
“இவன் வெற்றுப் பயல் என்று எண்ணி விட்டாள் பார்! ஒரு நாள் அவள் முன்னால் நின்று எப்படி என் தந்தையின் கையை கூட எதிர்பார்க்காமல் இப்படி வளர்ந்திருக்கிறேன் என்று சொல்ல அவள் பார்த்து வெட்கப்பட வேண்டும்.”
‘’பூனம் உன்னுடைய வயது, திருமணம் முடிந்த உடனே கணவனை இழந்து நிற்கும் பாங்கு … ஒரு இளம் ஆண்மகன் மேல் , அதுவும் ரொம்ப ஜாலியாக எதற்கும் மசியாத முரட்டு பிடிவாதம் கொண்ட ஆணை பார்த்தும் இந்த மாதிரி பிரச்சினைகளை எதிர் கொள்ளத்தான் சொல்லும். அதற்காக இப்படியா? தயவு செய்து என்னை எதிர் பார்க்காதே.”
“எனக்கு என் தந்தையின் வியாபார சாம்ராஜ்யத்தை விட நான் பெரிய ஒரு பிசினஸ் மேக்னட்டாக மாற வேண்டும். அதற்கு இந்த மாதிரி சின்னச் சின்னப் பிரச்சினைகள் எல்லாம் வரும் போது கண்டிப்பாக எனக்கு ஏறும் படிகள் இறங்கு முகமாக இடையூறுதான் ஏற்படுத்தும்.”
“என்ன பூனம் எதுவும் பேசாமலிருந்தால் என்ன அர்த்தம். உன் அண்ணன் திலக் உனக்கு நல்ல வரன் பார்த்துக் கொண்டிருக்கிறான். புதியதாக வரும் உன் கணவனுக்கு இப்படி ஒரு சில கெட்ட செய்திகள் கூட போய்ச் சேர வேண்டாமே.” என்ற அரசுவின் கயைப் பிடித்துக் கலகலவென்று சிரித்தாள் பூனம்.
‘இவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா’ என்று அரசு யோசித்தபோது “போங்க அரசு. எனக்கு இந்த கல்யாணம் கத்தரிக்காய் எல்லாம் வெறுப்புத் தட்டி விட்டது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? எனக்கு சனி நடக்குதாம். எத்தனைத் திருமணம் முடித்தாலும் கணவன் ஒரு மாதத்திற்குள் பரலோகம் போய் விடுவானாம்.”
“பாவம் இன்னும் திருமணம் செய்து வருகின்ற பாக்கியவானை ஏன் கொல்ல வேண்டும் போப்பா, உங்கள் கல்யாணமும்… கருமாதியும்…” திரும்பவும் சிரித்தாள் பூனம்.
“என்ன பூனம் இவ்வளவு பெரிய பைத்தியக் காரியாக இருக்கிறாய். நாம் 21ம் நூற்றாண்டிலும் 22ம் நூற்றாண்டையும் தாண்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த காலகட்டத்தில் சுக்கிர தசை செவ்வாய் தோஷம் எல்லாம் சொல்லிக்கொண்டு… சாத்திரமாவது சாக்கடையாவது.. முதலில் இந்த ஜோசியம் பார்க்கும் விஷயங்களை முதலில் தூக்கி எறி. நல்ல ஒரு ஆண்மகனை திருமணம் செய்துகொள்.”
“உங்களுக்கு தெரியாது அரசு. என் வாழ்க்கையில் ஜோசியர் சொன்ன மாதிரி பல விஷயங்கள் நடந்து விட்டது. அந்த அமெரிக்க மாப்பிள்ளை வேண்டாம் நீ விதவையாகி விடுவாய் என்று எவ்வளவோ சொன்ன பிறகும் கேட்காமல் என் அண்ணா திலக் தான் திருமண ஏற்பாடுகள் எல்லாம் செய்தான். கடைசியில் என்னாயிற்று பார்த்தாயா? நீ நம்பாமல் போகலாம் ஆனால் எனக்கு இதுதான் வாழ்க்கை. இன்னொரு ஆண்மகனை வீணாக கொல்ல விரும்பவில்லை.”
“ஸாரி, நான் நடந்து கொண்ட முறை சரியில்லாமல் போயிருந்தால் மன்னித்துக்கொள். இனிமேல் உன் வழிக்கே வர மாட்டேன்.” கண்ணீர் மல்க ஓடினாள்.
ஓடிப்போன பூனத்தையே பார்த்து கொண்டிருந்த அரசு தலையை உலுப்பி கொண்ட போது மொபைல் போன் கூவியது.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings