in

மதங்களை கடந்த மனிதம் (சிறுகதை) – ✍ கீதா இளங்கோ

மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“மரியா லஞ்ச் ரெடியா? சீக்கிரம் வா எனக்கு டைம் ஆகுது” என்று அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பினான் ராகவன்.

“இதோ வந்துட்டேன்” என்று லஞ்ச்  பேகை கையில் கொடுத்தாள் மரியா. அதை வாங்கி புறப்படுகையில் அவனுக்கு ஒரு போன் கால்.

‘இப்போது யார் போன் பண்ணுவது?’ என்று நினைத்து கொண்டே போனை கையில் எடுத்தான்.  எதிர்முனையில் அவன் நண்பன் கதிர்.

“ராகவா ஒரு சந்தோஷமான விஷயம், நான் அப்பா ஆகிட்டேன்.  எனக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கு. எனக்கு இரண்டு நாள் லீவு சொல்லி விடு ராகவா, மேனேஜர் போன் பிஸியா இருக்கு” என்று விஷயத்தை சொன்ன நண்பனுக்கு, “வாழ்த்துக்கள்” சொன்ன ராகவன் மௌனமாக சோபாவில் அமர்ந்தான்.

அவன் முகத்தை பார்த்தவுடன் தெரிந்துவிட்டது மரியாவிற்கு. “என்னங்க” என்ற மரியாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் அவன்.

“என் நண்பனுக்கு குழந்தை பிறந்து இருக்கு”. இதை கேட்டதும்.  அவன் அடுத்து என்ன சொல்ல போகிறான் என்று மரியாவிற்கும் ஓரளவு விஷயம் தெரிந்து.

கவலையோடு “அதனால் என்னங்க?” என்றாள்.

“ஒன்னும் இல்ல, அலுவலகத்தில் எல்லோரும் இந்த விஷயத்தை கிண்டலா என்னிடம் விசாரிப்பாங்க. அதுதான் ஆபீஸ்க்கு போகலாமா வேண்டாமா என்று யோசிக்கிறேன்” என்றான்.

ராகவனும்,  மாரியவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.  இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவரகள். ராகவன் இந்து மதத்தையும், மரியா கிறிஸ்துவ மதத்தையும் சேர்ந்தவர்கள்.

காதல் திருமணத்தையே விரும்பாத பெற்றோர்கள். மதம் மாறி கல்யாணம் என்றால் சொல்லவே வேண்டாம். இரு வீட்டார் எதிர்ப்புக்களையும் கடந்து சர்ச்சில் மோதிரம் மாற்றி கோயிலில் மாலை மாற்றி கல்யாணம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில் இன்னும் குழந்தை இல்லை.

குழந்தை பிறந்தால் சரியாகிடும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு குறைய தொடங்கியது. அடுத்தவரின் கேள்விகளுக்கும், கேலிக்கும் ஆளானர்கள்.

குழந்தையின்மை என்ற பிரச்சனை நம் சமூகத்தில் இப்போது மிக முக்கியமாக காணப்படுகிறது. ராகவனுக்கு நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.

“என்னங்க, நாம வேணா எதாவது டாக்டர்கிட்ட போகலாங்க” என்ற மரியாவை பார்த்து

“உனக்கு எத்தனை முறை சொல்றது, எந்த டாக்டர்கிட்டவும் போக வேண்டாம். நா சொல்றதை கேளு மரியா. நா நிறைய முறை சொல்லிட்டேன், நீ ஏன் என்னை புரிந்து கொள்ள மாட்டேங்கறே” என்று  வேகமாக பேசிய ராகவனை பார்த்து அழத்தொடங்கினாள் மரியா.

“நான் சொல்றது உனக்கு புரியுதா? இல்லையா? டாக்டர்கிட்ட போன உனக்கும், எனக்கும் எல்லா விதமான டெஸ்ட் எடுப்பாங்க. நம் இருவரில் யாரிடமாவது எதாவது குறை இருக்குனு சொல்லிட்டா அப்புறம் நம்ம இருவரின் மனநிலைமையை யோசித்து பார். உன்னிடம் குறை என்று சொன்னால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் உனக்கு அதுவே ஒரு தாழ்வு மனப்பான்மையை ஊருவாக்கிவிடும். எனக்கு என்று தெரிந்தால் என்னால் ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது. நாளடைவில் நம் இருவருக்கும்  இடையே இருக்கும் நெருக்கம் குறைந்து விடுமோ என்ற பயம் எனக்கு வருகிறது மரியா. அதனால் தான் சொல்கிறேன் டாக்டர் எல்லாம் வேண்டாம்” என்று சொல்லிமுடித்த  ராகவனின் மார்பில் முகம் புதைத்து அழத்தொடங்கினாள் மரியா.  

ராகவனும் அவளை அனைத்தவாறு சமாதானப்படுத்தினான். “எனக்கு குழந்தை வேனுங்க” என்று குழந்தை மாதிரி அழத்தொடங்கினாள் மரியா. 

“கொஞ்ச நாளாகவே எனக்கு ஒரு யோசனை இருக்கு. உனக்கு விருப்பம் இருந்தால் அது சரியா? தவறா? என்று சொல்” என்றான் ராகவன். 

“யோசித்து முடிவு சொல், உனக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே என்னால் அதை செய்ய முடியும்” என்று சொன்ன ராகவனை

“அது என்னங்க” என்று மிகவும் ஆவலாக  கேட்ட்டாள் மரியா.

“நாம் ஏன் ஒரு குழுந்தையை தத்து எடுக்க கூடாது” என்று சொன்ன அடுத்த நிமிடம் சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள் அவள்.  

“நானும் இந்த விஷயத்தை பத்தி யோசிச்சிருக்கேன். ஆனால்  அதை உங்ககிட்ட அதை எப்படி சொல்றதுனு பயந்து சொல்லாம விட்டுட்டேன். எனக்கு இதில் முழு சம்மதம். வாங்க இப்பவே போகலாம்” என்று சந்தோஷத்தில் புறப்பட ஆரம்பித்தாள். 

மரியா என்ன சொல்வாளோ என்று பயந்து கொண்டிருந்த ராகவனுக்கு அவளுக்கு இதில் முழு சம்மதம் என்று தெரிந்தவுடன்  குழந்தையை தத்து எடுக்க அதற்கான முயற்சியில் இறங்கினான்.

அவனின் நண்பர்களிடம் ஆலோசனை கேட்டான். எல்லோரும் “இது நல்ல விஷயம் ராகவா செய், நாங்கள் உனக்கு உதவுகிறோம்” என்று முன்வந்தனார்.

ஒரு சில நாட்களில் அதற்கான பயனும் கிடைத்தது. ஒரு அறக்கட்டளை மூலமாக ஒரு ஹோமில் குழந்தைகள் சட்டப்படி தத்து கொடுப்பதாக கேள்விப்பட்டு ராகவனும், மரியாவும் உடனே அந்த அறக்கட்டளையை தொடர்பு கொண்டு பேசினார்கள்.

“குழந்தை இருக்கு ஆனால் ஆனால் அதற்கென்ற சில வரைமுறைங்களும் இருக்கு. நீங்கள் அதை கடைபிடிக்க வேண்டும்” என்று கூறினார் அந்த ஹோமின் தலைமை பொறுப்பாளர். 

“நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம்” என்றான் ராகவன்.

“சரி வாங்க” என்று அனுமதி கொடுத்தார்கள் அந்த பொறுப்பாளர்.

இதை மரியாவிடம் சொல்ல அவள் கண்களில் இருந்து  ஆனந்த கண்ணீராக விழுந்தது.

“அழாதே மரியா ஒரு குட்டிப்புறா நம் வீட்டில் நம்முடைய குழந்தையாக வளர போகிறது. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு” என்று மரியாவின் கண்களை துடைத்து அனைத்தான் ராகவன். அந்த தம்பதிகள் சந்தோஷ கனவில் மிதக்க ஆரம்பித்தனர்.

ஒவ்வொருவரின் திருமண வாழ்க்கையிலும் குழந்தை என்பது  கடவுள் கொடுக்கும் ஒரு வரமாக பார்க்கப்படுகிறது. அது இல்லை என்றபோது அந்த தம்பதிகள் நிறைய சங்கடங்களுக்கும், மனவருத்தத்திற்க்கும் ஆளாகின்றனர்.

இந்த சமுதாயம் அவர்களை புறக்கணித்து,  அந்த பெண்ணை தான் முதலில் குற்றம் சுமத்தும். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி கேலியான விமர்சனத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

இதோ… இப்போது மரியாவும், ராகவனும் அந்த  ஹோமின் கட்டடத்தின் வாசலில் ஜபம் செய்து மரியாவும், கணபதி மந்திரம் சொல்லி ராகவனும் வாசலை தாண்டி உள்ளே நுழைந்தார்கள்.

அங்கு சின்ன, சின்ன தொட்டில்களில் ரோஜா மொட்டுக்கள் போல அந்த குழந்தைகள். பார்த்தவுடன் கண் கலங்கினாள் மரியா, கடவுளின் விளையாட்டை எண்ணி.

மரியாவிற்கு குழுந்தைகளை பார்த்தவுடன் ஓர் இனம் புரியாத ஒரு பரவசமும், ஸ்பரிசமும் அந்த குழந்தைகளிடம் கண்டாள்.

“வாங்க குழந்தைகளை பாருங்கள்” என்று வரிசையில் இருந்த குழந்தைகளை காண்பித்து குழந்தைகளை பற்றிய விவரங்களை சொல்லி கொண்டு வந்தார் அந்த இல்லத்தின் தலைமை பொறுப்பாளர்.

“நீங்கள் எந்த குழந்தையை எடுக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள் மாரியாவையும், ராகவனையும் பார்த்து

ராகவனும் மரியாவும் ஆண்குழந்தைதான் வேண்டும் என்றோ பெண்குழந்தைதான் வேண்டும் என்றோ எந்த முடிவும் அவர்கள் எடுக்கவில்லை.

“குழந்தை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும்” என்று நாங்கள் நினைக்கிறோம் என்றார்கள் இருவரும்.   மரியாவிற்கு ஒவ்வொரு குழந்தையாக பார்க்கும்போது எல்லா குழந்தைகளையும் மார்போடு எடுத்து அணைத்து கொள்ள வேண்டும் போல் இருந்தது.

பூக்களை அடுக்கி வைத்தது போல் வரிசையாக தொட்டிலில் அந்த ரோஜா மொட்டுக்களை பார்த்துக்கொண்டே வந்த ராகவனுக்கும் மரியாவிற்கும் ஒரு குழந்தையின் மேல் மட்டும் பார்வை சென்றது.   ஏனெனில் அந்த ஒரு குழந்தை மட்டும் தனியாக தொட்டிலில் இருந்தது.

“அந்த குழந்தை ஏன் தனியாக இருக்கிறது அந்த குழந்தையை பார்க்கலாமா?” என்று கேட்டாள் மரியா.

“பார்க்கலாம் வாங்க. ஆனால் இந்த குழந்தை இன்று காலையில் தான் வந்தது. தர்க்காவில் வாசலில் இருந்தது என்று சொல்லி கொடுத்துவிட்டு போனார்கள்” என்று சொன்னார்கள் அந்த தலைமை பொறுப்பாளர். 

அது மிக அழகான பெண்  குழந்தை அந்த குழந்தையின் கால் விரல்கள் சற்று வளைந்து இருந்தது. அது கன்னத்திலும்,  கண்களில் இருந்த மையும் சிவந்த கலரும். அந்த குழந்தையை பார்க்கும்போது அது அல்லாஹ்வை சார்ந்த குழந்தை என்று மரியாவுக்கு நன்றாக தெரிந்தது.  அந்த குழந்தையை கையில் எடுத்தாள் மரியா.  ராகவனும் பார்த்தான்.

இருவருக்கும் அந்த குழந்தை பிடித்துவிட “நாங்கள் இந்த குழந்தையை எடுத்து கொள்கிறோம்” என்றார்கள் தலைவியிடம்.

“இந்த குழந்தை சற்று குறைபாடு உள்ள குழந்தை” என்று சொன்னாள் இல்லத்தின் தலைவி.

“பரவாயில்லை மேடம் எல்லோராலும் கைவடைப்பட்ட குழந்தை இது இதை நாங்களும் புறக்கணிக்க விருப்பவில்லை. இது கடவுளின் குழந்தையாக பார்க்கிறோம். இந்த குழந்தையையே எடுத்து கொள்கிறோம். இதற்கு என்ன விதிமுறைகள் இருக்கோ அதை முடித்து கொடுங்கள்” என்று கேட்டான் ராகவன்.

அவர்களும் அதற்கு சம்மதித்து விதிமுறைகள் முடிக்கப்பட்டு குழந்தையை  தூக்கி மரியாவின் கைகளில் கொடுத்தார்கள். அந்த குழந்தையுடன்  வெளியில் வந்த ராகவன்,  மரியவையும் குழந்தையும் அனைத்து கண்கள் கலங்கியப்படி “இந்த ஒரு நிகழ்வு நடக்கத்தான் கடவுள் நமக்கு இத்தனை வருடம் குழந்தையை குடுக்கவில்லை என்று நினைக்கிறேன் மரியா” என்றான் ராகவன்.   

இதை நிஜம் என்று சொல்வது போல்  அந்த சர்ச்சின் வாசலில் இருந்த ஆலயமணி மன்னியோசையும் ஒலித்தது. அந்த குட்டி தேவதை மீண்டும் கருவறைக்குள் நுழைந்த உனர்வோடு தன்னுடைய விரல்களால் இருவரின் விரல்களையும் பற்றி கொண்டது.

அங்கே ஓம் என்ற மந்திரத்துடன், சிலுவையும், தர்க்கவும் இணைந்தது. மிகவும் சந்தோஷமாக அந்த தம்பதியர் புது உறவோடு நிறைய கனவுகளுடன் வீட்டை நோக்கி புறப்பட்டனர். இப்போது அவர்களின் பூஜையறையில்  பிள்ளையாரும், சிலுவையும், இருந்த இடத்தில் பிறை நிலவும் சேர்ந்தது.

“மதம் ஒரு தடையில்லை மனித நேயத்திற்கு”

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அடையாளம் (சிறுகதை) – ✍ லோகநாதன் மகாலிங்கம்

    மணிப்பர்ஸ் மாமி (சிறுகதை) – ✍ மரு உடலியங்கியல் பாலா, சென்னை