2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4
அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8
அத்தியாயம் 9 அத்தியாயம் 10 அத்தியாயம் 11 அத்தியாயம் 12
அத்தியாயம் 13 அத்தியாயம் 14 அத்தியாயம் 15 அத்தியாயம் 16
“நீ வைரமாக இருந்தாலும் தகுதியற்றவர் கையில் கிடைத்து விட்டால் நீ கூழாங்கல்தான். அதே நேரம் நீ கூழாங்கல்லாக இருந்தாலும் தகுதி உள்ளவர் கையில் கிடைத்தால் நீ வைரமாக மாற்றப்படுவாய். உன் மதிப்பு உன்னை மட்டும் சார்ந்தது அல்ல, நீ சேரும் இடத்தையும் சார்ந்ததே” என்பார்கள். மாற்றுத் திறனாளிகள் என்னும் கூழாங்கற்கள் தகுதியுடையவரான ஆறுமுகத்தின் கையில் கிடைத்து விட, அவர்களை வைரமாக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக செயல் பட்டார்.
பொதுவாகவே, சுயநலக் கலப்பின்றி, பொதுநல எண்ணத்துடன் எடுக்கப்படும் எந்த முயற்சிகளுக்கும் இறைவன் துணையிருந்து வெற்றி தருவான். ஆறுமுகத்தின் முயற்சியும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டு விட்ட காரணத்தால் சரியாக ஒரே மாதத்தில் அந்த மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் பாராலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.
இல்லத்தின் முன் பகுதி காலியிடத்தில் வில் வித்தை, மற்றும் துப்பாக்கி சுடும் போட்டிக்கான பயிற்சிக்களம் அமைக்கப்பட, பின் புறமிருந்த பெரிய மைதானத்தில் ஒரு புறம் ஓட்டப் பந்தயத்திற்கான தளமும், இன்னொரு புறம் உயரம் மற்றும் நீளம் தாண்டுதல் பயிற்சிக்கான தளமும், தட்டு எறிதல் தளமும் சிறப்புற அமைக்கப்பட்டன.
முருகன் வீல் சேரில் அமர்ந்தபடி தட்டு எறிதல் போட்டிக்கு பயிற்சி செய்வதற்காக ஐந்து வீல் சேர்கள் வந்திறங்கின.
ஊர் மக்கள் அனைவரும் ஏதோ திருவிழாவைக் காண வருபவர்கள் போல் அந்த இல்லத்திற்கு வந்து அங்கு நடக்கும் கட்டுமானப் பணிகளை வியப்போடு கண்டுகளித்தனர். வழக்கம் போல் அதையும் குறை கூற ஒரு கூட்டம் புறப்பட்டிருந்தது.
“இந்த ஊனப் பசங்களைக் கூட்டி வந்து தங்க வெச்சு, மூணு நேரத்துக்கும் சோறு போடறதே பெரிய விஷயம்… இதுக விளையாட்டுப் போட்டிகள்ல கலந்துக்கணும்ன்னு இப்ப யார் அழுதா?…” பொழுது போகாத பெருசு புலம்பியது.
“இதுக்குச் செலவு பண்ற காசு தண்டத்திலும் தண்டம்!… இதுக போய்த்தான் ஒலிம்பிக்ல கலந்துக்கிட்டு நம்ம நாட்டுக்கு மெடல் வாங்கித் தரப் போகுதுகளாக்கும்?” குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான் வேலை வெட்டி எதுவும் பார்க்காத ஒரு வெத்து வெட்டு இளைஞன்.
“ஊருக்குள்ளார வெள்ளம் புகுந்தப்ப ஏற்பட்ட பாதிப்புக்களை முழுசா சரி பண்ண வக்கில்லை… இதுல ஒலிம்பிக்காம்… ஒலிம்பிக்!… இதெல்லாம் சம்மந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் சம்பாதிப்பதற்காக செய்யும் தகிடுதத்தம்” வளர்ந்து வரும் ஒரு குட்டி அரசியல்வாதி அங்கும் அரசியலைக் கலக்க முயற்சி செய்தான்.
ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிக்கும் அனுபவம் வாய்ந்த தனித்தனி பயிற்சியாளர்களை அரசாங்கம் அனுப்பி வைக்க, அவர்களுக்கான தங்குமிடம், உணவு, ஊதியம் போன்றவற்றை சில சமூக அமைப்புக்கள் ஏற்றுக் கொண்டன.
தினந்தோறும் அதிகாலையில் தொடங்கும் பயிற்சி ஒன்பது மணி வரை தடையின்றி நடக்கும். மதிய வேளைகளில் இதற்கு முன் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டிகளைப் பற்றிய விபரங்களும், அதில் கலந்து கொண்ட வீரர்கள் பற்றிய விபரங்களும், மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு கற்றுத் தரப்பட்டது.
ஒவ்வொரு மாத இறுதியிலும் ஒரு போட்டி வைத்து, அதில் அந்த மாற்றுத் திறனாளி வீரர்கள் எடுக்கும் பாயிண்ட்டுகளைப் பதிவு செய்து விளையாட்டுத்துறைக்கு அனுப்பி வைத்தனர் பயிற்சியாளர்கள்.
“என்ன சார்?… எங்க பசங்க தேறுவாங்களா?” ஒரு முறை ஆறுமுகம் தமாஷாய்க் கேட்டார்.
“நல்லாக் கேட்டீங்க!… ஒவ்வொருத்தனும் அவனவன் விளையாட்டுல சும்மா கில்லி மாதிரி இருக்கானுக!….நானும் எத்தனையோ மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு பயிற்சி குடுத்திருக்கேன்!… இவனுக மாதிரி பர்ஃபாமென்ஸ் பார்த்ததேயில்லை”” என்று ஒரு பயிற்சியாளர் பொத்தாம் பொதுவாய்ச் சொல்ல,
“சார்… வீல் சேர்ல உட்கார்ந்து தட்டு எறியறான் பாருங்க முருகன்!… அவன் முதன்முதலாய் ஒரு சாம்பிளுக்காய் வீசிக் காட்டிய தட்டு எட்டிய தூரம்… போன வருஷம் மாவட்ட அளவுல மூன்றாம் பரிசு வாங்கிய மாற்றுத் திறனாளி இளைஞன் வீசிய தூரம்!…. அதுக்கப்புறம் அவன் எறியற ஒவ்வொரு தட்டும் ரெக்கார்ட் பிரேக் செய்யப் போற தூரம்தான்” என்றார் இன்னொரு பயிற்சியாளர்.
அதுவரையில் அமைதியாயிருந்த நீளம் தாண்டுதல் போட்டியின் பயிற்சியாளர், “சார்… ராஜா…ங்கற அந்தப் பையனோட பேரைக் குறிச்சு வெச்சுக்கங்க… அடுத்த பாராலிம்பிக்ஸ்ல அவன் சாதிக்கப் போறான்” என்றார்.
“சார்… நம்ம சுந்தரம் உட்கார்ந்தபடியே நகர்ந்து போகும் சிறுவன்தான்… ஆனா எதிர்காலத்துல இந்த நாட்டை எழுந்து நிற்கச் செய்யப் போறான்!… எப்படின்னு கேட்கறீங்களா?… வில் வித்தைல ஒரு சாதனையைச் செய்து….”
“சார் நீங்கெல்லாம் சொல்றதைக் கேட்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாய்த்தான் இருக்கு!… ஆனா இங்க இந்த இல்லத்துக்குள்ளார இருக்கற மைதானத்துல இவனுக சாதிப்பதை வைத்து இவனுக… வெளிநாட்டிலெல்லாம் போய்ச் சாதிப்பானுக!ன்னு சொல்ல முடியுமா?…” தன் சந்தேகத்தை நேரடியாகவே கேட்டார் ஆறுமுகம்.
“கரெக்ட்… உங்க சந்தேகம் நியாயமான சந்தேகம்!… பல வீரர்கள் தங்களோட சொந்த நாட்டுல பிரமாதமா பர்ஃபாமென்ஸ் பண்ணுவானுக… கடைசில வெளிநாட்டுல நடக்குற பாராலிம்பிக்ஸ் போட்டில போய் சொத்தப்பிடுவானுக!…”என்றார் கோகுல்தாஸ்.
“அய்யய்யோ… அதை நெனைக்கும் போதுதான் சார் எனக்கு கொஞ்சம் நெருடலாய் இருக்கு” என்றார் ஆறுமுகம்.
“யூ டோண்ட் வொரி மிஸ்டர் ஆறுமுகம்!… அடுத்த பாராலிம்பிக்ஸ் போட்டி பாரீஸ்லதான் நடக்கப் போகுது!… அது அநேகமா இந்த வருஷம் ஆகஸ்ட்… செப்டம்பர் மாதங்கள்ல நடக்கும்!…”
“அடப்பாவமே… இன்னும் ஆறுமாசம் கூட இல்லையே சார்… அதுக்குள்ளார இவனுகளை எப்படி?” இழுத்தார் ஆறுமுகம்.
“நீங்க செலக்ட் பண்ணி வெச்சிருந்த முப்பது பேருக்கும்… நாங்க பயிற்சி குடுத்துப் பார்த்தோம்… பட்… எல்லோரும் தேர்வாகலை!… முதல் கட்டமா எங்களால்… ஒரு அஞ்சு பேரை மட்டும்தான் தேர்வு பண்ண முடிஞ்சது” கோகுல்தாஸ் மிகுந்த சங்கடத்தோடு சொல்ல,
“அப்ப… அந்த மீதி இருபத்தியஞ்சு பேரோட ஆர்வம் அவ்வளவுதானா?” அங்கலாய்த்தார் ஆறுமுகம்.
“நோ… நான் அப்படிச் சொல்லலை மிஸ்டர் ஆறுமுகம்… அந்த இருபத்தியஞ்சு பேரும் வரக்கூடிய ஆகஸ்ட் மாச பாராலிம்பிக்ஸ்ல கலந்துக்க முடியாது… காரணம் அவங்களுக்கு இன்னமும் பயிற்சி தேவை!… அதாவது அடுத்த பாராலிம்பிக்ஸ் போட்டி… ரெண்டாயிரத்தி இருபத்தியாறுல நடக்கும் அதுக்கு ரெடி பண்ணலாம்!…”
“அப்ப செலக்ட் ஆகியிருக்கற அஞ்சு பேரும் பாரீஸ்ல நடக்கப் போற பாராலிம்பிக்ஸ்ல கலந்துக்கப் போறாங்களா மாஸ்டர்?” ஆர்வமாய்க் கேட்டார் ஆறுமுகம்.
“ம்ம்ம்… அதைக் கூட உறுதியாய்ச் சொல்ல முடியாது!… அவங்க உள்நாட்டுப் போட்டிகள் சிலவற்றில் கலந்துகிட்டு ஏதாவது ரெக்கார்ட் பண்ணனும் அப்பத்தான் பாராலிம்பிக்ஸ் கமிட்டி ஆஃப் இண்டியா அவங்களை தேர்ந்தெடுத்து பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு அனுப்பி வைக்கும்!…” என்றார் கோகுல்தாஸ்.
கீழுதட்டைக் கடித்துக் கொண்டு யோசித்த ஆறுமுகம், “ஸோ… உள்நாட்டுல நடக்கப் போற சில போட்டிகளுக்கு இவங்களை நான் கூட்டிக்கிட்டுப் போகணும்… அவங்க அங்கே போய்ச் சாதிக்கணும்… அப்படித்தானே மாஸ்டர்?” கேட்டார்.
“இவங்களை நீங்க கூட்டிக்கிட்டுப் போக வேண்டிய அவசியமில்லை!… அதை நாங்க பார்த்துக்குவோம்… பை த பை… அடுத்த ஐந்தாம் தேதி பெங்களூர்ல ஒரு செலக்ஷன் போட்டி நடக்கும், அதுக்குப் பிறகு… மும்பைல ஒரு செலக்ஷன் போட்டி நடக்கும்.. அது ரெண்டாவது போட்டி… மூணாவதா இறுதி செலக்ஷன் போட்டி டெல்லில… அந்த பாராலிம்பிக்ஸ் கமிட்டி ஆளுங்க முன்னாடி நடக்கும்… அதுல செலக்ட் ஆயிட்டா… நேரா பாரீஸ்தான்” என்றார் கோகுல்தாஸ்.
“சார்… நீங்க செலக்ட் பண்ணின அந்த அஞ்சு பேர் யார்ன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா சார்?”
“கண்டிப்பா… ம்ம்ம்… முருகன்… சுந்தரம்… ராஜா…. மாரிமுத்து… ம்ம்ம் அப்புறம் ஈஸ்வரன்” என்றார் கோகுல்தாஸ்.
அதைக் கேட்டதும், “டேய்… எல்லோரும் கை தட்டுங்கடா” என்று சொல்லி அவர்களை ஊக்கப்படுத்திய ஆறுமுகம், “த பாருங்கடா… இந்த வருஷம் நம்ம இல்லத்திலிருந்து அஞ்சு பேர்தான் போறாங்க… அடுத்த ரெண்டு வருஷம் கழிச்சு நடக்கப் போற போட்டிக்கு இங்கிருந்து குறைஞ்சது முப்பது பேர் போகணும்… என்ன?” தேர்வாகாத மாற்றுத் திறனாளிகளைப் பார்த்துக் கேட்டார் ஆறுமுகம்.
எல்லோரும் கோரஸாய், “ஓ.கே.சார்” என்றனர்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings