2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4
அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8
அத்தியாயம் 9 அத்தியாயம் 10 அத்தியாயம் 11 அத்தியாயம் 12
அத்தியாயம் 13 அத்தியாயம் 14 அத்தியாயம் 15
ஊரை மூழ்கடித்திருந்த வெள்ளம் மொத்தமாய் வடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாய்த் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அரசாங்கமும் மற்றும் சமூக அமைப்புக்களும் தங்களால் இயன்ற அளவிற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களைக் கொண்டு வந்து குவித்தன. மழை வெள்ளத்தால் தங்களது பாட புத்தகங்களை இழந்த மாணவ, மாணவியருக்கு இல்லத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் தங்கள் சேமிப்புப் பணத்தை வழங்கி மகிழ்ந்தனர்.
கோபிக்கும் அவன் சகாக்களுக்கும் அந்த இல்லத்திலேயே ஒரு வேலையை ஏற்பாடு செய்து கொடுத்து, அவர்களுக்குத தங்குமிடம் வழங்கினார் ஆறுமுகம்.
“சார்… “காத்திரு…நடக்க இருப்பது சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான காரணத்தோடு நடக்கு”ன்னு அன்னிக்கு ஒரு பெரியவர் டி.வி.லே சொல்லிட்டிருந்தார்… அதைக் கேட்டு அப்ப நான் சிரிச்சென்!… ஆனா அது எவ்வளவு உண்மைன்னு இப்ப புரிஞ்சுக்கிட்டேன் சார்!…” என்று நெகிழ்ந்து போச் சொன்னான் கோபி.
“இங்க பாருங்க கோபி… நான் என்னால் முடிஞ்ச அளவுக்கு இங்க இருக்கற மாற்றுத் திறனாளிகளுக்கு பல நன்மைகளைச் செய்திருக்கேன்!… இனிமேல் உங்களுக்கும் அந்தப் பொறுப்பைப் பகிர்ந்து தரப் போறேன்!… நீங்க இவங்க உயர்வுக்காக உங்களால் முடிஞ்ச அளவுக்கு உழைங்க… எல்லோரும் சேர்ந்து எதையாவது சாதிப்போம்” என்றார் ஆறுமுகம்.
கோபியின் சகாக்காளில் ஒருவனான கிட்டு எதோ சொல்லத் தயங்குவதைப் புரிந்து கொண்ட ஆறுமுகம், “என்னப்பா என்ன சொல்ல வர்றே போலிருக்கு சொல்லு” என்றார் ஆறுமுகம்.
“அது வந்து… என்று ஆரம்பித்தவன் பிறகு, “வேண்டாம் சார்!… அது ஆகாது சார்” என்றான்.
மெலிதாய்ச் சிரித்த ஆறுமுகம், “இங்க பாருங்க… உங்க பேரு என்ன சொன்னீங்க?” கேட்டார்.
“ஆங்… கிட்டு!… நீங்க என்ன சொல்ல வந்தீங்களோ… அதைச் சொல்லுங்க… அதுக்கப்புறம் அது ஆகுமா?… ஆகாதா?ங்கறதை நான் சொல்றேன்” என்றார்.
“வந்து… கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் டி.வி.ல ஒரு நியூஸ் பார்த்தேன்!… மத்தவங்களுக்கெல்லாம் எப்படி ஒலிம்பிக் போட்டி வைக்கறாங்களோ… அதே மாதிரி… உடல் ஊனமுற்றோர்களுக்காக… இண்டர்நேஷனல் அளவுல விளையாட்டுப் போட்டிகள் நடத்தி… அதுல நல்லா செய்யறவங்களுக்கு… தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கமெல்லாம் குடுக்கறாங்களாம்!… அதுக்குப் பேரு கூட என்னமோ சொன்னாங்க… அதுதான் மறந்து போச்சு” என்றான் கிட்டு தலையைச் சொறிந்து கொண்டே,
சில நிமிடங்கள் அமைதியாய் அவன் முகத்தையே உற்றுப் பார்த்த ஆறுமுகம், “சார்… கிட்டு சார்… நீங்க பெரிய ஆளு சார்!… எனக்குக் கூட வராத யோசனை உங்களுக்கு வந்திருக்கு!… அந்த விளையாட்டுப் போட்டிக்கு பேரு “பாராலிம்பிக் கேம்ஸ்”… இல்லேன்னா “பாராலிம்பிக்ஸ்”ன்னு கூடச் சொல்லலாம்!… உண்மையில் எது என்ன?ன்னா.. பல்வேறு குறைபாடுகள் உல்ள விளையாட்டு வீரகளுக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டி!… இது… ரெண்டு வருஷத்துக்கு ஒரு தரம், நடக்கும் போட்டி!…” என்றார்.
அந்தப் பேச்சில் ஆர்வமான கோபி, “சார்… அதைப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லுங்க சார்” என்றான்.
“சொல்றேன்… உங்களுக்கு மட்டுமல்ல… இந்த இல்லத்துல இருக்கற எல்லாருக்கும் விளக்கிச் சொல்றேன்… என் கூட வாங்க” என்று சொல்லி எல்லோரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு இல்லத்தினுள் வந்த ஆறுமுகம் அங்கிருந்த மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் அழைத்தார்.
“இந்த பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டில இரண்டு பதிப்புக்கள் இருக்கு… ஒண்ணு குளிர்கால விளையாட்டுக்கள்… இன்னொண்ணு கோடைக் கால விளையாட்டுக்கள்!… இதை நிர்வாகம் பண்ணுறது… சர்வதேச பாராலிம்பிக் குழுன்னு ஒரு குழு!…”
“அதுல எந்த மாதிரியான உடற் குறைபாடுகளை வகைப்படுத்தியிருக்காங்க சார்?” சரஸ்வதி கேட்க,
“ம்ம்ம்… அதுல எட்டு வகையான உடற் குறைபாடுகளை லிஸ்ட் அவுட் பண்ணியிருக்காங்க… அதாவது ஒரு மூட்டு, உடலின் ஒரு பக்கம் அல்லது கீழ்ப் பாதி போன்ற தசைகளால் உற்பத்தி செய்யப்படும் குறைக்கப்பட்ட சக்தி… அப்படின்னா முதுகுத் தண்டு காயம், போலியோ நோய்க்குறி, கீழ் வாதம், பிறவி மூட்டுக் குறைபாடு, கால் நீள வேறுபாடு, குறுகிய உயரம், தசைகளின் இயக்கங்களை ஒருங்கிணைக்க இயலாமை, பெரு மூளை வாதம், பார்வைக் குறைபாடு, அறிவு சார் இயலாமை… இன்னும் பலப் பல குறைபாடுகள்”
“நம்ம நாட்டைச் சேர்ந்தவங்க யாராவது அதுல கலந்து பதக்கங்களை வாங்கியிருக்காங்களா சார்?” குள்ளமான உடல்வாகு கொண்ட ஒரு சிறுவன் கேட்டான்.
“ம்… நிறையவே இருக்காங்க!.. ஹரியானவைச் சேர்ந்த “குமார்”ன்னு ஒருத்தர்… இவர் கார் விபத்துல சிக்கி முதுகெலும்பு முறிஞ்சு சுததமா செயலற்றுக் கிடந்தார்… ஆக்சுவலா இந்த அமித் குமார் ஒரு காலத்துல ஹாக்கி வீரர்.. ஆடுன கால் சும்மாயிருக்குமா?… வீல் சேர் போட்டிகளுக்கு தன்னைத் தயார் படுத்தினார்… வீல் சேர்ல உட்கார்ந்தபடியே வட்டு எறிதல், கிளப் த்ரோ போட்டிகள்ல பயிற்சி எடுத்தார்… விளைவு?… ஆசியன் பாரா கேம்ஸ், அத்லெடிக்ஸ் உலக சாம்பியன்ஷிப், பிரெஞ்ச் ஓப்பன் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப்ன்னு அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்று தொடர்ந்து பதக்கங்களைக் குவிச்சார்!… அர்ஷுனா விருது இவரைத் தேடி வந்தது”
அதைக் கேட்ட மாற்றுத் திறனாளிகள் அனைவரும் ஒரு சேரக் கை தட்டி மகிழ்ந்தனர்.
“சரிங்க சார்… நம்ம தமிழ்நாட்டு ஆளுக யாராச்சும் இதுல சாதிச்சிருக்காங்களா சார்?” கோபி கேட்டான்.
“ஏன் இல்லாம?… சேலத்துக்குப் பக்கத்துல பெரிய வடுகபட்டின்னு ஒரு கிராமம்… அங்க மாரியப்பன்னு ஒரு பையன்!… ஸ்கூலுக்குப் போகும் போது லாரி மோதி… வலது கால் நசுங்கிப் போனது!… கால் இல்லை என்பதற்காக அந்த மாரியப்பன் முடங்கிப் போய் விடவில்லை!… உயரம் தாண்டுதலில் முழு மூச்சாய் ஈடுபட்டான்… 2013ல் தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் தன் திரமையைக் காட்டினான்!… அப்புறம் துனிஸியாவில் நடந்த ஐபிஸி கிராண்ட் பிரிக்ஸ் தொடர்ல 1.78 மீ உயரம் தாண்டி ரியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானான்!… தோகாவுல கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டில 1.81 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கம் வென்றான்!…”
தட்டுத் தடுமாறி எழுந்து நின்றான் முதுகு வீங்கியிருக்கும் சிறுவன் காந்தி. “சார்…. எனக்கும் ஏதாச்சும் பயிற்சி குடுங்க சார்… நானும் சாதிச்சுக் கட்டறேன்” என்று சொல்ல,
உட்கார்ந்தபடியே கைகளை ஊன்றி நகர்ந்து கொண்டிருக்கும் சிறுவன் சுந்தரம் “சார் நானும் வீல் சேர்ல உட்கார்ந்து வட்டு எறிதல் போட்டில கலந்துக்கறேன் சார்” என்றான்.
கண் பார்வையில்லாத சத்தியவேந்தன், “சார்.. எனக்கும் ஏதாச்சும் போட்டி இருக்கா சார்?” கேட்டான்.
சூப்பைக்கால் முருகன், “சார்… நான் உயரம் தாண்டுதல் போட்டில கலந்துக்கறேன் சார்” என்றான்.
கை தட்டி மகிழ்ந்த ஆறுமுகம், “ஆஹா… நீங்க சொல்றதையெல்லாம் கேட்கும் போது எனக்கே ஒரு நம்பிக்கை வருதுப்பா… கவலைப் படாதீங்க… எப்படியாவது முயற்சி செஞ்சு… உங்களுக்கெல்லாம் முறையான பயிற்சி குடுத்து… உங்களை பாரா ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி… இந்த ஊரும் நம்ம நாடும் உங்களால பெருமைப் பட வைக்கிறேன்” உறுதியளித்தார் ஆறுமுகம்.
அதற்கான முதல் முயற்சியை அடுத்த நாளே ஆரம்பித்தார். யார் யாரை எந்தப் போட்டிக்குத் தேர்வு செய்வது, யாரைக் கொண்டு அவர்களுக்கு பயிற்சியளிப்பது போன்ற திட்டங்களை வகுத்தார்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings