in ,

இரண்டாவது வசந்தம்!? (சிறுகதை) – இரஜகை நிலவன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

ஷார்ஜா, மீன் காட்சி சாலையில் அலுவலகத் தோழிகளோடு மீன்களைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த போது தன் கண்ணாடியில் பிரதிபலித்த உருவத்தைப் பார்த்து ஒருமுறை அதிர்ந்து போனாள் ராணி.

திரும்பிப் பார்த்த போது, அதே பசுத்தோல் போர்த்திய புலியாக புன்சிரிப்புடன் செல்வம் நின்று கொண்டிருந்தார்.

இவர் எப்போது துபாய்க்கு வந்தார்? போனமுறை ஊருக்குப் போயிருந்த போது கூட இவர் கண்ணிலே விழிக்கக் கூடாது என்றுதானே சொந்த ஊருக்குக் கூட போகாமல் அஞ்சுகிராமத்தில் அக்கா புவனா வீட்டிலேயே தங்கி விட்டுத் திரும்பவும் ஹார்ஜாவிற்கு வந்தேன்.

உறவினர் பலர் வந்து பார்த்தபோதும், உறவுக்காரப் பெண் வற்புறுத்தி மாடன் பிள்ளை தர்மத்திற்கு கூப்பிட்டபோது கூட அந்த ஊருக்கு வர மறுத்து விட்டு என்னுடைய விடுமுறையை புவனாவோடு அஞ்சு கிராமத்திலும் அண்ணன் மயிலையோடு ராஜாக்க மங்கலத்திலும் கழித்து விட்டு சொந்தக் காரர்களைக் கூடப் பார்க்கப் போகாமல் திரும்பி வந்தேன்.

ஓடிப் போகலாமா… வெளியே போய் நின்று கொண்டு தோழியரை மொபைலில் அழைத்துக் கொண்டு போய் விடலாம் என்று நகர்ந்த போது, அலுவலக நண்பன் கிருஷ்ணன் “என்ன ராணி, மீன் அருங்காட்சியகம் பார்க்க வந்தீர்களா? ஓ! நம்முடைய ஆபிஸ் ஸ்டாப் திவ்யா, சித்ரா, பிரபா, ஸ்வீட்டி எல்லோரும் கூட வந்தீர்களா? இது என் மனைவி. பேர் லட்சுமி என்றவர், ராணியைக் காட்டி இது எங்க ஆபீஸ் ஹியூமன் ரிசோர்ஸ் டிபார்ட்மெண்ட் ஹெட் ராணி மேடம். இப்போதுதான் ஸ்கூலில் ஜாய்ன் பண்ணி இருக்கிறான் என் பையன் சேகர்” என்ற விரலைப் பிடித்திருந்த தன் பையனை அறிமுகப்படுத்தினான்.

உள்ளுக்குள்ளே குறுகுறு என்று சின்னப் பயம் எழுந்து கிருஷ்ணனின் குடும்பத்தை உபசரித்து விட்டு கூட வந்த திவ்யாவிடம் “எனக்குத் தலையை வலிக்கிறது. நான் அறைக்குத் திரும்புகிறேன். நீங்கள் முழுவதும் பார்த்து விட்டு வாருங்கள்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.

“ஏய், ராணி ஒரு நிமிடம் இவர் உன்னிடம் பேசவேண்டுமாம். உனக்குத் தெரியுமா இவரை?” என்று செல்வத்தோடு வந்து நின்றாள் சித்திரா.

யாரைப் பார்க்க விருப்பமில்லாமல் அந்த இடத்தை விட்டு அகல விரும்பினாளோ அவரே முன்னால் வந்து நிற்கும் போது என்ன செய்ய முடியும்? என்று தலையைப் பிடித்துக் கொண்டு ஊமையாய் நின்றாள்.

“ராணி உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேச முடியுமா?” என்று கேட்டார் செல்வம்.

“என்ன பேசணும்?” வெடுக்கென கேட்டாள் ராணி.

“இங்கே உங்கள் அலுவலக நண்பர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் பேச விரும்பினால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று செல்வம் கையை ஆட்டிப்பேச, அதே மேனரிசம் படவா..இதைப் பார்த்துதானே உன்னிடன் விழுந்தேன் என்று மனதிற்குள் கத்திக்கொண்டிருக்கும் போது “தெரிந்தவர் உன்னிடம் ஏதோ பேச வேண்டும் என்கிறார். பேசிவிட்டு வா. நாங்கள் அடுத்தப்பக்கத்தி கடல் தாவரங்கள் பார்க்கிறோம்.” என்று சொல்லி விட்டு தோழியர் பட்டாளம் கிளம்ப “அருகில் தான் காபி ஷாப் இருக்கிறது அங்கே அமர்ந்து பேசலாமா?” என்றார் செல்வம்.

“இன்னும் என்ன பேச வேண்டிக் கிடக்கிறது; சென்னையிலே விரட்டி விரட்டிக் காதலிக்கும் போது பேசியது காணாதா? திருமணமாகி அம்மா சொல்லைக் கேட்டு என்னை அடிமையாக நடத்தியது போதாதா? இன்னும் என்ன பேசனும்” கசப்பாகக் கத்தினாள் ராணி.

“ஆத்திரப்படு, நான் செய்த தவறுக்கெல்லாம் சேர்த்து வேண்டுமானால் என் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டுப் போ. அப்போதாவது உன் ஆத்திரம் தீர்ந்தால் சரி.” சிரித்துக்கொண்டே சொன்னார் செல்வம்.

“இந்தச் சிரிப்பிலே தானே விழுந்து கிடந்தேன் பாவி. என்னை என்னக் கொடுமை எல்லாம் படுத்தினீர்கள்… அம்மாவும் பிள்ளையும் சேர்ந்துகிட்டு.”

“நீ பொட்டையா இருந்து கிட்டு என்னைப் பிள்ளைப் பெத்துக்க முடியாத மலடி என்று பட்டங்கட்டின பிறகு தானே இனி உன் சவகாசம் வேண்டாமுன்னு சொல்லி விட்டு ஷார்ஜா வந்தேன்.

நான் நெனச்சிருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு பிள்ளை பெத்து காட்டியிருக்க முடியும். ஆனால்… சீ! நான் உன்னைக் காதலித்த அந்தக் காதலுக்கு மதிப்பில்லாமல் போய்விடுமேன்னு.

“என் உடம்பென்ன கல்லிலேயா செஞ்சி வச்சிருக்கு… எனக்கும் ஆசா பாசம் உண்டுதானே..

ஒவ்வொரு நாளும் எப்படி தவித்து, …. போய்யா … போய் உன் வேலையைப் பாரு, காபி ஷாப்பிலே போய் காப்பிக்குடிக்க கூப்பிடுற மூஞ்சியப் பாரு” காறி உமிழ்ந்தாள் அருகிலிருந்த குப்பைத் தொட்டியில்.

திடீரென்று அருக்இல் வந்த செல்வம் “உன் காலா நெனச்சி உன் கையைப் பிடிச்சு கேக்கிறேன் ராணி, நான் தப்பு பண்ணினேன் உண்மை தான்… ஆனா திருந்தி வந்திருக்கிறேன். விசிட் விசா வாங்கிறதுக்கு என்னப் பாடுபட்டு நீ வேலை செய்யிற கம்பெனியை விசாரிக்க, உன் அறை எங்கே இருக்கிறது என்று தேடி மூன்று மாதம் நான் பட்ட அலைச்சலுக்காக என்னோடு ஒரு ஐந்து நிமிடம் பேசு.

அப்புறமும் என்னை நீ மன்னிக்க விரும்பலைண்ணா நான் மாடன்பிள்ளை தர்மத்திற்கே திரும்பப் போய் விடுகிறேன்” தழுதழுத்தார் செல்வம்.

செல்வத்தின் கண்ணில் நீர் திரளுவதை ராணி கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. இருப்பினும் கைகளை உதறிக்கொண்டு அருகிலிருந்த கேட்பரிஸ் காபி ஷாப் நோக்கி நடக்க, கட்டிப்போட்ட நாய் போல கூடவே கூடவே நடந்தார் செல்வம்.

அமர்ந்து “கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள். எப்போது பொட்டைக் கண்ணீர் வடிக்கப் பழகிக் கொண்டீர்கள்.” என்று வார்த்தை சாட்டைகளால் சுண்டினாள் ராணி.

“பராவாயில்லை” என்று எழுந்த செல்வத்தை கையைப் பிடித்து அமர்த்தி “காபி குடியுங்கள். எனக்கு யோசிக்க நேரம் தாருங்கள். செய்தவைகளை எல்லாம் அவ்வளவு வேகமாக மறந்து விட முடியாது. விசா முடிய நேரமிருக்குதில்லையா?” என்று கேட்டாள்.

“ஆம் ஒரு மாத விசாவில் தான் வந்தேன்” என்றார் செல்வம்.

“எங்க தங்கியிருக்கிறீர்கள்”

“ஹோட்டல் கருணாவில்”

“சரி ஒரு வாரம் பொறுங்கள். யோசித்துச் சொல்கிறேன். முடிந்தால் அடிக்கடி சந்திப்போம். இதோ என் தொலைபேசி எண்கள்” என்று நம்பரை கொடுத்து விட்டு “செல்வம், காயங்கள் ஆறிப்போனாலும் வடுக்கள் இன்னும் மறைய வில்லை. இப்போதே என் உள்ளம் உங்களை என் வீட்டிற்கு அழைத்துப் போகத்தான் துடிக்கிறது. ஆனால்… பொறுமை என்கிற இன்னொரு மனம்….”

“பரவாயில்லை ராணி. காத்திருக்கிறேன்.” என்று அவளுடைய தொலைபேசி எண்ணை குறித்துக்கொண்டு கிளம்பினார் செல்வம்.

பையிலிருந்து கர்சீப் எடுத்து துடைத்துக் கொண்ட செல்வம் “இரண்டு சாக்லேட் காபி” என்றார்.

“எனக்கு சாக்லேட் காபி பிடிக்கும் என்பது இன்னும் மறக்கவில்லையா?” என்று கோபமாகவே கேட்ட ராணி “என்ன சொல்ல வந்திருக்கிறீர்கள் நாடு கடந்து வந்து…” என்று கிண்டல் பண்ணினாள்.

“நீ ஊர் வந்திருந்தது தெரிந்திருந்தால் கண்டிப்பாக பார்க்க வந்திருப்பேன். ப்ச்.. எனக்கு தெரியாமல் போய்விட்டது..”

“சரி, சரி பச்சைப் பாவ்லா எல்லாம் காட்ட வேண்டாம். என்ன சொல்ல வந்தீர்கள் என் தோழிகள் காத்துக் கொண்டிருப்பார்கள்.”

“ஒரு மனிதன் எல்லா வேளைகளிலும் தவறு செய்து கொண்டிருபானா ராணி?” என்று செல்வம் கேட்ட தொனியில் கொஞ்சம் ஆடிப்போனாள் ராணி.

“என்ன சொல்ல வருகிறீர்கள்?” அவள் குரல் தணிந்திருந்தது.

“நான் திருந்தி வந்திருக்கிறேன் என் அருமைக் காதலியிடம் என் வாழ்வின் சரி பாதியான மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்தது போதும். இனி அவளோடு வாழ வந்திருக்கிறேன்.” ஏளனமாகச் சிரித்த ராணியைப் பார்த்து “உனக்கு அடிமையாக, உனக்கு சேவகம் செய்யப் போகிறவளாக… சென்னை வேண்டாம் மாடன்பிள்ளைதர்மமும் வேண்டாம். இதே துபாயில் எனக்கும் நான் ஒரு வேலை தேடிக் கொண்டு… நாம் இருவரும் சேர்ந்து வாழ்க்கையின் மிச்ச வசந்தங்களை எதிர் கொள்ளலாம் ராணி” அப்படியே உருகிப் போய் பேசி முடித்த போது, நீர்த்துளிகள் கன்னத்தில் உருண்டோட, எழுந்து கையிலிருந்த கர்சீப்பை எடுத்து அவருடைய கண்களையும் கன்னத்தையும் துடைத்து விட்டு காபி வர,    மௌனமாக பருக ஆரம்பித்தாள் ராணி.

“இனி உன் விருப்பம் ராணி. நான் காபிக்கு பணம் தந்து விட்டேன்.  வருகிறேன்…..” என்று எழுந்தார் செல்வம்.

“காபி சாப்பிடல்லியா?” ஈனஸ்வரத்தில் கேட்டாள் உருகிப்போன ராணி.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சூப்பையன் (சிறுகதை) – முகில் தினகரன், கோயமுத்தூர்.

    இருள் மனங்கள் (சிறுகதை) – முகில் தினகரன்