in

இணையற்ற இந்திய இளைஞர்களே (புத்தக விமர்சனம்) – ச.பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்

 நூலின் பெயர் : இணையற்ற இந்திய இளைஞர்களே

 நூலின் ஆசிரியர் : வெ.இறையன்பு

இளைஞர்களின் அறிவை சாணை தீட்டுபவரா, சமுதாய அழுக்கை வெளுப்பவரா, தூர்வாருபவரா, வியாபாரியா மருத்துவரா ஆசிரியரா மாணவரா பொறியாளரா வழக்கறிஞரா விஞ்ஞானியா அறிவியல் அறிஞரா, கவிஞரா அரசியல்வாதியா ஞானியா, தன்னார்வலரா  சுயதொழில் செய்பவரா   இயற்கை விரும்பியா இப்படி இவரை கேட்டுக் கொண்டே செல்லலாம்  ஏனெனில் இணையற்ற இந்திய இளைஞர்கள்  பட்டமளிப்பு விழாவில் எல்லா துறைகளை பற்றியும் இறை இறை  என அறிவை   இறைத்து கொட்டியுள்ளார் . ………. இறை  (அன்பு ) *அறிவு* .

 முயற்சியாலும் விடாமுயற்சியாலும் முடிந்த நொடிகளை மூட்டை கட்ட முடியாது. ஆனால் முடியாத நொடிகளில் கோட்டை கட்ட முடியும்.

 எழுதுகோல் ( பென்சில் ) எப்பொழுதும் சீவி சீவி காகிதத்தில் எழுதுவது போல எண்ணங்களை பட்டம் பெற்றவுடன் அறிவுத் துளிரை  பட்டு போய்விட விடாமல்  துருவித்துருவி வண்ணங்களாக எழுதுங்கள் புதிய உலகை உருவாக்கலாம்.

 ஏட்டறிவும் பயன்பாட்டு அறிவும் ஆயுதத்தை விட சிறந்தது

 பட்டமளிப்பு விழாவில்  இறை இறைத்த  அறிவு மணிகள்…..

 மானுட முன்னேற்றத்திற்கு மருந்தளித்தவர்களுக்கு  விருந்தளிக்கும் விழா.

 கணத்துக்குக் கணம் முன்னேறிச் செல்வது உயிர் துடிப்போடு இருக்கும் வாழ்க்கையின் அத்தாட்சி.

 பல்கலைக்கழகங்கள் கூழாங்கற்களை மின்ன வைக்கின்றன வைரங்களை மழுங்கடித்து விடுகின்றன ஓடாத கடிகாரம் இரண்டு வேலை சரியான நேரத்தை காட்டும் என்பது போன்ற விதண்டாவாதம் ஆகும்.

 வளர்ச்சி அடைந்த வளமான நாடுகளில் முதல் பங்களிப்பை செலுத்துவது அங்கிருக்கும் பல்கலைக்கழகங்கள் தான். இரண்டாம் உலகப்போரின் போது கூட கேம்பிரிட்ஜ் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்களில் குண்டு ஏறியகூடாது என்று இரண்டு கருத்து வேறுபாடு கொண்ட நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன. ஏனெனில் பல்கலைக்கழகங்கள் உலகத்திற்கான பொது சொத்து அங்கிருந்துதான் கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிகள் தடுப்பு மருந்துகள் நச்சுப் பொருட்களும் வேதிப்பொருட்களும் ஒட்டு மொத்த உலகத்தையே அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்லும் கிரியா ஊக்கிகள்.

 பட்டத்தை வேண்டுமானால் உரை என்ற லேமினேஷன் போட்டு பத்திரப்படுத்துங்கள். ஆனால் நம்மை நாமே செதுக்கிக் கொண்டே ஒவ்வொரு நிமிடமும் பறித்தால் மட்டுமே இந்த உலகத்தை நம்மால் வெல்ல முடியும்.

 இது பயணமே தவிர இக்கல்ல இது சமன்பாடு தவிர இதுவே விடை அல்ல இது விதையே தவிர இதுவே கனியல்ல.

 கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு

 நம் அறியாமையை ஒத்துக்கொள்வது அறிவு. பட்டம் பெறுவதே வாழ்க்கை மாளிகையின் முதல் படிக்கட்டு.

 விழித்துக்கொண்டிருக்கும் நேரமெல்லாம் படித்துக் கொண்டிரு. படித்தவற்றை தேவைப்படுகின்ற போது உதிர்ப்பதற்கும் தெரிவதுதான் கற்றுக்கொள்கிற மனப்பான்மை.

 எல்லா பணிகளையும் உயர்ந்தவைதான் அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் செய்தால் பெருக்குகின்ற பணி கூட பெருமை வாய்ந்தது தான்.இந்த பணியே போதும் என்று அங்கேயே தங்கி விடாதீர்கள்.

 சுதந்திர தியாகிகள் ராணுவ தியாகிகள் என பலருக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சிந்தித்து செயல்படுங்கள்.

 ஈட்டி கின்ற  அத்தனை தொகையும் நம் குடும்பத்திற்காக என்று நினைக்காமல்  அதில் ஒரு சிறு பகுதியையே நம்மை சார்ந்தவர்கள் அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

 பணத்தால் மட்டுமே ஒருவருக்கு உதவும் முடியும் என்பதில்லை வழிகாட்டியாக மற்றவர்களுக்கு உதவ முடியும்.

 இந்திய திருநாட்டின் இனிய பிரஜையாகப் பிரகடனப்படுத்தும் செயல்கள் சாலையோரங்களில் காகிதங்களை எறிவதில் இருந்து  கோவில் சுவர்களை அழகாக்குவது வரை அத்தனை விதமான செயல்களில் இருந்தும் விலகி நின்று அவர்கள் நடத்தை மற்றவர்களுக்கு படிப்பினையாக இருக்கும் அளவு நீங்கள் குடிமை நெறியினை பேணவேண்டும்.

 நம் தமிழ் மொழியை காக்க வேண்டும். எந்த நாட்டில் பணி செய்தாலும் தமிழை மறக்காது இருத்தல் வேண்டும்.

  ஆசிரியர்,ராணுவ அதிகாரி மருத்துவராகப் பணியில் இருந்தாலும் எப்படியாயினும் சிறப்பாக செய்திடுக.

  இன்று பெண்கள் பட்டங்கள் பெறுவதும் சட்டங்களால் ஆள்வதிலும் தலை நிமிர்ந்து நிற்கின்றனர் பாரதி கண்ட புதுமை பெண்ணாக புரட்சிப் பெண்ணாக படிப்பு ஒரு துருப்புச் சீட்டு குடும்பத்தையும் வகிக்கிற பணியையும் சமன் செய்வது தான் சாமர்த்தியம் இருக்கிறது. திருமணம் மிக முக்கியம் ஆண்களுக்கு திருமணம் பிரகாரம் பெண்களுக்கு கர்ப்பக்கிரகம்.

 நம் நாடு தன்னிறைவு பெறுவதற்கான நம் உடல் பொருள் ஆற்றல் அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்டு பாடுபடவேண்டும் இந்தியர்கள் என்கின்ற பெருமையோடும் தமிழர்கள் என்கின்ற பெருமிதத்தோடும் நாம் பெற்ற கல்வியை நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

*குறைகள்*

ஒரு குழந்தை பிறந்தால் முதலில் தாய் தந்தையின் முகம் பார்த்த பின்புதான் அக்கம்பக்கம் அயலார் முகம்பார்க்கும் . ஆனால் நம் ஆசிரியர் அவர்கள் அயல் நாட்டவர்களை முதலில் எடுத்துக் காட்டிவிட்டு  பின்புதான் நம் நாட்டவர் சுபாஷ் சந்திரபோஸ் மகாத்மா காந்தி நேரு பாரதியார் திருவள்ளுவர் போன்றவர்களை புத்தகத்தின் பிற்பகுதியில் எடுத்துக்காட்டாக  காட்டியுள்ளது குறையாக தெரிகிறது.

 திருமணமான 60 நாட்கள் எந்த மனம் தாங்களும் இல்லாமல் ஓட்டி விட்டால் அதன் பிறகு 60 ஆண்டுகள் பிணக்கம் இல்லாமல் வாழ முடியும் என்கிறார் ஆசிரியர். ஆனால் பிணக்கம் சுணக்கம் இல்லாமல் இணக்கம் எப்படி ஏற்படும்.

இன்று தன் முனைப்பின் காரணமாக விரும்பி திருமணம் செய்து கொள்பவர்களே விரைவில் வெறுத்து விலகிவிடும் சூழல் பார்க்கிறோம் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

 தன்முனைப்பு ( காதல் ) திருமணங்களால் தானே ஜாதி மத பேதம் களைய முடியும். ஒரு பேப்பரை பசை வைத்து ஒட்டிகிறோம் என்றால் அதில் சுருக்கம் விழாமல் இருக்க அதற்கு நான்கு விரல்களின் உதவி தேவைப்படுகிறது. அந்த நான்கு விரல்கள் போல  பெற்றோர்கள் தன்முனைப்பு திருமணத்தில் உதவாததே காரணம்.

 திருமணம் ஆண்களுக்கு  பிரகாரம் பெண்களுக்கு கர்ப்பக்கிரகம் என்கிறார் ஆசிரியர். பெண்களை ஆற்றல் என்று சொல்லி மீண்டும் இருட்டு அறையில் பூட்ட  நினைக்கிறாரோ என்று பயம். பிரகாரத்தை சுற்றி வர முடியும் *கர்ப்பக்கிரகத்தில்*… ………

 நன்றி

 ச.பூங்குழலி

வடசேரி

தஞ்சாவூர் மாவட்டம்.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 20) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்

    மீட்சி (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு