தீபாவளி போட்டிகள்

சஹானா இணைய இதழின் “தீபாவளி 2020 போட்டிகள்”

வணக்கம்,

எல்லோரும் நலமா? 

நவராத்திரி கொண்டாட்டங்கள் எல்லாம் நல்லபடியாய் முடிந்ததா? எல்லோரும் தீபாவளிக்கு தயாராகி வருகிறீர்கள் என நினைக்கிறேன் 

இந்த வருடம் கொரோனா பெரும் தொற்றின் காரணமாய், தீபாவளி  கொண்டாட்டங்கள் எப்போதும் போல் இருக்காது என்ற வருத்தம் நிறைய பேரின் மனதில் உள்ளது 

ஸ்கூல், ஆபிஸ், கருத்தரங்கு, இன்னும் கல்யாணம் வரையும் கூட இணையத்தில் (Online) நடக்கும் போது, தீபாவளியையும் ஆன்லைனில் கொண்டாடுவோம் என்ற எண்ணத்தில், இந்தப் போட்டி அறிவிப்பை வெளியிடுகிறது சஹானா இணைய இதழ்  

போட்டிகள்

“மறக்க முடியாத தீபாவளி” போட்டி

“தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி” போட்டி

“தீபாவளி” படம் வரையும் போட்டி (குழந்தைகளுக்கு)

போட்டி விதிமுறைகள்:-

மறக்க முடியாத தீபாவளிபோட்டி

 • உங்கள் வாழ்வில் மறக்க முடியாத தீபாவளி பற்றிய நினைவுகளை, தமிழில் டைப் செய்து அனுப்ப வேண்டும் 
 • ஒருவர் ஒரு பதிவு மட்டுமே அனுப்பலாம்

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிபோட்டி

 • தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி என்றால், இனிப்பாய் மட்டும் தான் இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை
 • உங்கள் வீட்டில் தீபாவளி அன்று செய்யும் ஸ்பெஷல் ரெசிபி, அல்லது உங்கள் ஊரின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி, இப்படி எது வேண்டுமென்றாலும் பகிரலாம். ஆனால் சைவம் மட்டுமே
 • ரெசிபியுடன் அதன் புகைப்படமும் அவசியம். அது உங்கள் சொந்த படமாக இருக்க வேண்டும், இணையத்தில் இருந்து எடுத்ததை பகிரக் கூடாது  
 • ஒருவர் எத்தனை ரெசிபிக்கள் வேண்டுமானாலும் பகிரலாம் 
 • ரெசிபியை  தமிழில் டைப் செய்து அனுப்ப வேண்டும்   

தீபாவளி” படம் வரையும் போட்டி (குழந்தைகளுக்கு)

குழந்தைகளே, 

 • தீபாவளி என்ற கருப்பொருளில் (Theme) படம் வரைந்து, பொருத்தமான வண்ணங்கள் மற்றும் அலங்காரங்கள் சேர்த்து, அதை போட்டோ எடுத்து ஈமெயில் மூலம் அனுப்புங்கள்   
 • எந்த கண்டிஷனும் இல்லை, உங்கள் கற்பனையில் தோன்றுவதை வரையலாம். ஆனால் நீங்களே வரையே வேண்டும் 
 • ஒருவர் எத்தனை படம் வேண்டுமானாலும் அனுப்பலாம் 
 • வயது வரம்பு இல்லை (அதற்காக, “எனக்கு குழந்தை மனசு” என 30 வயசு அங்கிள், 60 வயசு பாட்டியெல்லாம் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது 😊) 
 • பள்ளி கல்லூரி பிள்ளைகள் பங்கேற்கலாம் 

வாழ்த்துக்கள்

மேலே குறிப்பிட்டுள்ள போட்டிகளுக்கு, உங்கள் படைப்புகளை contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

ஒவ்வொரு பிரிவிலும் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு வழங்கப்படும்

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள், நவம்பர் 10, 2020

தீபாவளி நாளான நவம்பர் 14 அன்று, போட்டி முடிவுகள் வெளியிடப்படும் 

போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற வாழ்த்துக்கள் 

அனைவருக்கும் (Advanced) இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 

Click here to subscribe to சஹானா இணைய இதழ்

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த் 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!