Depression எனப்படும் மனச்சோர்வு என்பது, உண்மையில் பெரிய பிரச்சனையா என்று யோசித்தால், பதில் NO என்பதே ஆகும்
ஒரு பிரச்சனை பெரியதாக ஆவதும், சிறியதாக இருப்பதும் நம்முடைய கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது
மனதுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
நாம் வேண்டாமென முடிவு செய்தால், மூளை அதை ஏற்றுக் கொள்ளும். ஆனால் மனம், அது அத்தனை சுலபத்தில் ஏற்காது
இப்படி நடந்துவிட்டதே என நினைத்து, ஒவ்வொரு நொடியும் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கும்.
அதன் விளைவு, மூளையின் செயல்பாடு பாதிக்கும். அது எதைப் பற்றியும் யோசிக்க முடியாமல், தன்னுடைய பணிகளை செய்ய முடியாமல் தடுமாறும். இதனால் நமக்கு தேவையில்லாத பிரச்சனைகள் வரும்
சரியான உறக்கம் இருக்காது
உடல் மற்றும் மனதில் சோர்வு வரும்
எதிலும் விருப்பம் இல்லாமல் இருக்கும்
கடைசியாக என்ன வாழ்க்கை இது எனும் விரக்தி வரும்
இந்த நிலை நமக்கு வேண்டாமே. ஆரம்பத்திலேயே சில விஷயங்களை செய்தால், இதை சரி செய்ய இயலும். அவை என்னவென பாப்போம்:-
1) நமக்கு பிடித்த பாடலைக் கேட்பது
2) வெளிக்காற்றை சுவாசிப்பது
3) உங்கள் மனதில் இருப்பதை ஒரு காகிதத்தில் எழுதி, பின் அதை கிழித்து விடுவது
4) வண்ணம் திட்டுதல்
5) உங்களுக்கு பிடித்த கை வேலை ஏதாவது செய்யலாம்.
யாரிடமாவது சொல்லலாமா?
நாம் மற்றவர்களிடம் இதைப் பற்றி கூறினால், அதில் பாதிப்பேர் கூட காது கொடுத்து கேட்க மாட்டார்கள் என்பது தான் நிஜம். மிகவும் நம்பிக்கைக்கு உரியவர் எனில் பகிரலாம்
ஆனால் பெரும்பாலோனோர், “இதெல்லாம் ஒரு பிரச்சனையா? நீதான் தேவையில்லாம யோசிக்கிற” என இலவச அறிவுரை தருவார்கள்
இதனால் நமக்கு இருக்கும் டிப்ரஷன் கூடுமே தவிர குறையாது.
வேறு என்ன செய்யலாம்?
1) கண்ணாடி முன் நின்று நம்முடைய பிரச்சினைகளை கூறுவது.
2) மனதிலிருக்கும் கவலைகளை எல்லாம் அதனிடம் கொட்டித் தீர்த்து விடுவது.
நாம் வெறும் கண்ணாடியை மட்டும் பார்த்து பேசப் போவதில்லை.
நம்மை பார்த்து தான் பேசப் போகிறோம், நம்முடைய பிரச்சனைகளை நம்மிடமே மனம் விட்டு பேசப் போகிறோம்.
பிறரிடம் சொல்லும் போது அவர்கள் நம்மை என்ன நினைப்பார்களோ என்ற தயக்கம் இருக்கலாம். அவர்கள் நம்மை பார்த்து ஏளனமாக சிரிக்கவும் செய்யலாம், ஆனால் கண்ணாடி அதை செய்யாது.
அதில் தெரிவது நம்முடைய பிம்பம். நாம் என்ன செய்கிறோமோ, அதை மட்டுமே அது வெளிப்படுத்தும் .
கண்ணாடியிடம் கூறிய பின், அடுத்து என்ன செய்வது?
கண்களை மூடி படுக்கவும், உறங்கினாலும் நல்லது தான்
ஒரு 10 முதல் 20 நிமிடங்கள் அப்படியே இருக்கவும். அதன்பின் கண்களை திறந்தால், இது ஒரு பிரச்சனையே இல்லை என்று தோன்றும், செய்து பாருங்கள்
அதற்கு பின்னும் உங்கள் மனம் சரியாகவில்லையெனில், மீண்டும் சில முறைகள் இதை முயற்சித்து பாருங்கள். அப்படியும் இயலவில்லை எனில், தகுந்த மருத்துவரை நாடுவதே சிறந்தது. நன்றி
#ad
நீங்கள் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள இயலாது. மனச்சோர்வு அதிகமானால் அது தற்கொலையில் முடியும். கண்ணாடி முன் பேசிப் பழகுவது மேடைப் பேச்சுக்கு உதவும். ஆனால் மனச்சோர்வுக்குத் தீர்வல்ல. மனச்சோர்வு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆறு மாதத்திற்கு மேல் மனச்சோர்வு என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள் என்று நம்பிக்கையை குலைக்கும் வகையில் எழுதாதீர்கள். மனித மனங்கள் பொதுவாக தன்னுடைய பிரச்சியை யாராவது காது கொடுத்து கேர்ப்பார்களா என்று ஏங்கும்.
இப்படிக்கு
உளவியல் துறை சார்ந்த ஒருவர்.
வணக்கம் மேடம்,
நீங்கள் சொல்வது போல், மனசோர்வு பிரச்சனைக்கு மருத்துவரை நாடுவதே சிறந்து என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்
ஆனால், சற்று இளைப்பாறினால் சரியாகக்கூடிய ஆரம்பநிலை மனசோர்வுக்கு மருத்துவரிடம் சென்றால், Anti-depressant மருந்துக்கள் பரிந்துரைத்து, பெரிய நோய் என்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்த வாய்ப்புள்ளதே. அது இன்னும் மனஉளைச்சலை அதிகரிக்கத்தானே செய்யும்.
நான் மருத்துவ துறையை சார்ந்தவள் அல்ல, ஆனால் பல்வேறு நாட்டின் பல தரப்பட்ட மனிதர்களை கடந்து வந்தவள், நட்பின் அடிப்படையில் சிலருக்கு மனஉளைச்சலில் இருந்து வெளியே வர உதவியும் இருக்கிறேன். அதோடு, மனோவியல் துறை சார்ந்த தரவுகளை சுயவிருப்பத்தின் பேரில் தேடி படிப்பவள் என்ற முறையில், மனஉளைச்சல் என்றதுமே மருத்துவரை நாடுவதோ, அதை பிரதாபிப்பதோ சரியில்லை என்பதே என் கருத்து
ஏனெனில், நாம் இருப்பது இந்தியாவில், மனநல மருத்துவரிடம் செல்வதை இயல்பாய் எடுத்துக் கொள்ளும் நிலை, இன்னும் நம் சமூகத்தில் குறைவே. அது பாதிக்கப்பட்டவரின் மனதை இன்னும் மோசமடையத் தான் செய்யும்
நம்மை விட, நம்மை அறிந்தவர் வேறு யாரும் இல்லை. அதன் அடிப்படையில் பார்த்தால், சுயபரிசீலனையின் மூலமே பெரும்பாலும் சரி செய்ய இயலும். அல்லது நெருங்கியவர்களிடம் பகிர்வதால் அதை கடந்து செல்ல முடியும்.
அதுவும் முடியாத பட்சத்தில் மட்டுமே, மருத்துவரை நாடுவது ஏற்புடையது என்பது என் கருத்து. அதை இந்த கட்டுரையை எழுதியவர், இறுதியாய் குறிப்பிட்டு இருக்கிறார், அதை நீங்கள் வாசித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்
யாரும் கேட்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் நான் எதையும் அப்படியே எங்கள் இதழில் பதிப்பிப்பதில்லை. யாரும் கேட்கவில்லை என்றாலும் என் மனசாட்சிக்கு விரோதமாய் தோன்றுவதை, அதை எழுதியவர் யார் என்றாலும் பிரசுரிக்கமாட்டேன். நன்றி
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
editor@sahanamag.com