in , ,

பனி விழும் மது வனம் ❤️(இறுதி பாகம்) – பவானி உமாசங்கர்

இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

    காதலர்களான மதுவந்தியும் ராஜஹம்சனும் தங்கள் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ராஜஹம்சனின் தொழிற்சாலை பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  மதுவந்தி ராஜஹம்சன் சக்கர நாற்காலியில் வருவதைப் பார்த்து விக்கித்து போகிறாள்.

      பொன்விழா நாளுக்கு முதல் நாள் மாலை ராஜஹம்சன் மதுவை சந்தித்து தன் உணர்வுகளை பரிமாறிக் கொண்ட பின் மனம் கொள்ளா பூரிப்புடன் காரில் பயணித்தான். வாயில் இட்ட இனிப்பின் தித்திப்புச் சுவை மெது மெதுவாய் தொண்டைக்குள் இறங்குவது போல் மதுவை சந்தித்து அவளுடன் பேசியது அவனுள் வியாபித்தது. அவனையும் அறியாமல் வாயில் காதல் பாட்டு ஒன்று சீட்டியாக வெளி வந்தது. அவன் உடல் முழுவதும் காதல் தணப்பில் திளைத்தது. கல்லூரியிலிருந்து வெளி வந்து காரை மெதுவாக ஓட்டியவன் மெயின் ரோடு வந்ததும் சற்று வேகமெடுத்தான்.

      திடீரென அவனை முந்திய பைக்கிற்கு வழி விட நினைத்து பிரேக்கை மிதித்தவன் பிரேக் சரியாக பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து கல்லூரிக்கு வரும்போதுகூட பிரேக் சரியாகத் தானே இருந்தது இப்போ என்ன ஆச்சு பிரேக் வயர்ஸ் தானாக கட்டாகாது எனில் இது யார் செய்த வேலை. அந்த சமயத்திலும் பதட்டமில்லாமல் யோசித்தவன் வண்டியை ஒரு ஓரமாக சுவரோ மரமோ எதன் மீதாவது மோதி நிறுத்தி விட முயற்சி செய்தான் ராஜஹம்சன். 

    அவன் காரை தொடர்ந்து பின்னால் சரவணனும் அவன் நண்பனும் பைக்கில் வந்தனர் எப்பொழுது ராஜஹம்சனின் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழப் போகிறது என நினைத்து பார்த்துக் கொண்டே வந்தனர்.

      ஊட்டியிலிருந்து அன்று விடியற்காலையே கோவைக்கு கிளம்பினர் மதுவந்தியின் குடும்பத்தினர். முதல் நாள் இரவு கனகவல்லி விசாக மோட்டார்ஸின் பொன்விழா பத்திரிகையை தன் கணவரிடம் கொடுத்து ராஜஹம்சனும் அவன் அக்கா உமையாளும் விழாவுக்கு வரும்படி போனில் அழைப்பு விடுத்ததை கூறினார்.

முதலில் வர மறுத்த ஜெகன்நாதனிடம் நேரில் போனால் மதுவையும் பார்க்கலாம். காலேஜ்ல என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கலாம் தேவையில்லாததை எல்லாம் கற்பனை செய்துவிட்டு கவலைப்பட வேண்டாமே என்று கனகா எடுத்துக் கூறியதும் வர சம்மதித்தார் ஜெகன்நாதன்.

      கோவை வந்ததும் ஜெகன்நாதன்  முதலில் கல்லூரிக்குச் சென்று மதுவை பார்த்து விட்டு ஃபேக்டரிக்கு போகலாம் என்றார். ஆனால் கனகாவோ மதியம் அவங்க கலை நிகழ்ச்சிக்காக ஃபேக்டரிக்கு தான் மது வரப்போறா. அப்ப பார்த்துக்கலாம். முதல்ல ஹம்சன் தம்பி வீட்டுக்கே போகலாம் என்றார். ஜெகன்நாதனும் மனைவியின் கருத்துக்கு சம்மதிக்க அனைவரும் ராஜஹம்சனின் வீட்டுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் வீடு ஒரே பரபரப்பாக இருந்தது. கோவிலில் பூஜை முடித்து வந்தவர்கள் தொழிற்சாலைக்கு  செல்ல கிளம்பி கொண்டிருந்தனர்.

      ஜெகன்நாதன் குடும்பத்தை பார்த்ததும் அனைவரும் அவர்களை வரவேற்றனர். விசாகன் ஜெகன்நாதனை பார்த்து “உங்களை எங்கேயோ சந்திச்சிருக்கேன். ஆனா நினைவுக்கு வரலை” என்று கூறியவர் திடீரென “டேய்  நீ ஜெஜே தானே” என்று கேட்டவரை “டேய் வைசாக்கு நீயா” என்று கூவிய ஜகன்நாதன் அவரை கட்டிக் கொண்டார்.

      இருவரும் கல்லூரி தோழர்கள் அனைவரின் அறிமுகத்திற்கு பின் முப்பது  வருடங்கள் கழித்து சந்திக்கும் இருவரும் தங்கள் இளமைக் கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 

    முடிவில் ராஜஹம்சனின் தந்தை விசாகன் ஜெகன்நாதனிடம் “டேய் நாம நண்பர்கள் என்ற இடத்தில் இருந்து இப்போ சம்பந்தியாக போறோம். என் பையனும் உன் பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. பெரியவங்களா நாம் அதை ஏத்துக்கிட்டு அவங்களுக்கு கல்யாணம் செய்து வைத்துவிடலாம் ” என்றார் ஆவலாக. 

         “நீ சொன்னா அதுக்கு அப்பீல் ஏது தாராளமா செய்யலாம் டா” என்றார் ஜெகன்நாதன் முழு சம்மதத்துடன்.

அதன்பின் முதல் நாள் ராஜஹம்சனுக்கு ஏற்பட்ட அந்த பெரிய விபத்து குறித்தும் அதிலிருந்து ஹம்சன் கடவுள் அருளால் சிறு காயத்துடன் தப்பித்தது பற்றியும் மதுவந்தியின் பெற்றோரிடம் கூறினார் விசாகன். உதயன் மட்டும் ராஜஹம்சனை அழைத்து வர மாப்பிளை மனோகர் அவன் தம்பி  ரகுரனுடன் மருத்துவமனைக்கு சென்றான். 

     ரகுவரன் மதுவின் தம்பி உதயனிடம் “ஹம்சனுக்கு கால்ல தான் எலும்பு முறிவு ஆகிடுச்சு. மத்தபடி அங்கங்க கொஞ்சம் சிராய்ப்புதான் நல்ல வேளை காரை  அவன் மெதுவா ஓட்டினதால பெருசா அடிபடல. பிரேக் பிடிக்காத கார்ல இருந்து அதிகம் அடிபடாம தப்பிச்சது உங்க மாமாவாத் தான் இருக்கும்” என விளையாட்டாக கூறினான். 

    “மாமாவுக்கு நல்ல சமயோசித புத்தி உண்டு. அவர்தான் அன்னைக்கு எங்களையும் பெரிய ஆக்சிடென்டிலிருந்து காப்பாத்தினாரே” என்று பெருமையாக கூறினான் உதயன்.

ரகுவரனோ “உன் மாமாவை பத்தி உனக்கு தான் நல்லா தெரியுமே” என கேலி பேசினான். 

       மருத்துவமனையில் காலில் மாவு கட்டுடன் அமர்ந்திருந்தான் ராஜஹம்சன். டாக்டரிடம் டிஸ்சார்ஜ் சம்மரியை வாங்கிக்கொண்டு அனைவரும் தொழிற்சாலைக்கு கிளம்பினர்.

உதயனின் வருத்தமான முகத்தைப் பார்த்து ராஜஹம்சன் “உதயா எனக்கு ஒண்ணும் இல்லடா நீ வருத்தப்படாத ஒரே மாசத்துல திரும்ப நான்  நல்லா ஆயிடுவேன் சரியா” என்றான்.

      “மது அக்கா உங்களை பார்த்தா ரொம்ப கவலையாகிடுவா” என்றான் உதயன். ஒரு புன்சிரிப்புடன் அதை ஆமோதித்தான் ஹம்சன். தன்னுடைய நிகழ்ச்சி முடியும் தருவாயில் ராஜஹம்சனை சக்கர நாற்காலியில் பார்த்த மது அதிர்ச்சியுடன் நடனத்தின் பாடல் முடிந்ததும் உடுப்பை கூட மாற்றாமல் உடனடியாக மேடையிலிருந்து இறங்கி அங்கு  ஓடிச் சென்றாள்.

     அவளுக்கு அதைவிட ஆச்சரியமான விஷயம் அங்கு அவள் பெற்றோரும் உதயனும் இருந்ததுதான். பிரியா அனைத்தையும் மேடையில் இருந்து பார்த்தவள் வாய் மூடி மௌனமானாள். ஹம்சனின் இந்த நிலைக்கு காரணமானவன் யார் என அவளுக்கு தெரியும் அல்லவா. மதுவந்திக்கு ஹம்சனின் நிலைமையைப் பார்த்து கண்ணீர் ஆறாக பெருகியது. பொங்கி வரும் கண்ணீரை அவளால் அடக்கவே முடியவில்லை. ராஜஹம்சனை அப்படி பார்த்த தொழிலாளர்களும் திகைத்துப் போயினர்.

     மது அழுவதை பார்த்து எல்லோரும் அவளையும் அழைத்துக்கொண்டு மேடையின் பின்புறம் சென்றனர். “வந்திம்மா எனக்கு ஒண்ணும் ஆகல. நீ இப்படி அழுவேன்னு தான் நான் உன் ப்ரோக்ராம் முடியும் வரை உன் முன்னாடி வரவே இல்லை” என்று கூறி அவளைத் தேற்றினான்.

“இது எப்படி நடந்தது” என்று கேட்ட நீலாம்பரியிடம் “நேற்று கல்லூரியில் என் காரின் பிரேக் வயரை கட் பண்ணி இருக்காங்க”. 

     பொதுவா நான் ரொம்ப வேகமாக கார் ஓட்ட மாட்டேன். அதனால காரில் பிரேக் சரியா பிடிக்கலைன்னு புரிஞ்சு ஒரு ஓரமா அதை நிறுத்த ட்ரை பண்ணினேன். ஆனா கதவு திறந்ததுல நான் கீழே விழுந்துட்டேன் அதனால கால்ல ஒரு சின்ன ஃபிராக்சர் அவ்ளோதான். ஆனா இதை செஞ்சவங்க தான் இப்போ மருத்துவமனையில் இருக்காங்க பாவம்” என்றான் ஹம்சன். 

    “அவங்க யாரு” என்று கேட்ட மதுவிடம்

“எனக்கு என்ன ஆகப் போகுதுன்னு பார்த்துட்டே வந்தவங்க டிவைடரில் முட்டி கீழ விழுந்துட்டாங்க.ரெண்டு பேருக்கும் சரியான அடி” என்று கூறிய ஹம்சன் “அது அந்த சரவணனும் அவன் பிரண்டும் தான்” என்றான். மனோகர் கவலையான தொழிலாளர்களிடம் ஹம்சனுக்கு பெரிதாக ஒன்றும் ஆகவில்லை என்று அவர்களை சமாதானப்  படுத்தினான். அதன்பின் அடுத்த நிகழ்ச்சி ஆரம்பமானது.

       அதற்குள் மேடையின் பின்புறம் வந்த விசாகனும் மீனாட்சியும் மதுவின் பெற்றோரிடம் “சம்மந்தி வாங்க. இந்த நிகழ்ச்சி முடிந்ததும்  நம்ம பிள்ளைங்க திருமண விஷயத்தை அறிவிச்சிடலாம் ” என்று அவர்களை அழைத்தனர். மதுவந்தி திகைப்புடன் அவள் பெற்றோரை பார்க்க “மதும்மா ஹம்சன் தம்பி எல்லாம் சொல்லிட்டாரு அப்பாவும் உங்க திருமணத்துக்கு சம்மதிச்சுட்டாரு” என்றார் கனகவல்லி.

      ஜெகன்நாதன் பெருமிதமாக ஒரு புன்னகை செய்தார். மது திரும்பி ஹம்சனை பார்க்க அவன் மாறாத காதலுடன் அவளை தன் அருகில் வருமாறு கண் அசைத்தான். மது வெட்கத்துடன் அவன் அருகில் சென்றாள். உதயன் அதைப் பார்த்தும் பாராதது போல் புன்னகைத்தான். ஹம்சனின் அருகில் நின்ற உமையாளோ இருவரும் பல்லாண்டு வாழ மனமாற வாழ்த்தி மகிழ்ந்தாள்.

இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அம்மா என்றால் அம்மா தான் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

    வைராக்கியம் (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்