வணக்கம்,
ஆகஸ்ட் 2022 மாத சிறந்த படைப்பு போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் முதற்கண் வாழ்த்துக்கள்
நாளுக்கு நாள், நம் ‘சஹானா’ இணைய இதழ் குழுமத்தில், நிறைய புது உறுப்பினர்கள் சேர்ந்து வருகிறார்கள். அவர்களின் படைப்பை நம் இதழின் போட்டியில் பகிர்ந்து, சிறப்பித்து வருவதில் மகிழ்ச்சி.
இந்த வருடத்தில் இன்னும் நிறைய எழுத்தாளர்கள் நம் சஹானா இணைய இதழ் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, அவர்களின் கதைகள் பெருவாரியான வாசகர்களை சென்றடைந்ததில் பெரும் மகிழ்ச்சி.
இது மாத போட்டிகளை இன்னும் கடினமாக்கி, வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் எங்கள் பணியையும் சவாலாக்கி உள்ளது.
ஆகஸ்ட் 2022 மாதத்தின் சிறந்த படைப்பு போட்டியின் வெற்றியாளர் விவரத்தை இந்த பதிவின் மூலம் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
பரிசு என்ன என்பதை இந்த அறிவிப்புலேயே பகிர்வதை விட, வெற்றியாளருக்கு surprise ஆக பரிசை அனுப்புவது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறோம். ஆகையால், வாசகர்களுக்கு பரிசு விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். நன்றி
வெற்றி பெற்றவர் பற்றிய விவரங்கள் இதோ:-
பெயர்:
உமாதேவி வீராசாமி, மலேசியா
பணி:
இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர் (கெத்தாரி இடைநிலைப்பள்ளி, பெந்தோங், பகாங், மலேசியா) – முன்னாள் ஆசிரியர் கல்விக்கழக விரிவுரையாளர்
இலக்கியத் துறை ஈடுபாடு:
- மலேசியாவில் நடைபெற்ற பாடலாசிரியர் பயிலரங்கு – முதல் பத்து நிலை வெற்றியாளர்களில் ஒருவர் (டிசம்பர் 2020)
- ஆசிய உலகச் சாதனை புத்தக பாடல் எழுதும் போட்டி (டிசம்பர் 2020) – பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பாடப்பட்டது.
- தெருக்கூத்து உலக அளவிலான பன்னாட்டு கவிதைப்போட்டி (டிசம்பர் 2020) (தமிழகம்) – சிறப்புப் பரிசு
- வெண்பலகை சிறுகதைப் போட்டிகள் – இயல் பதிப்பகத்தின் மூன்று வெண்பலகை சிறுகதைப் பயிலரங்குகளில் கலந்து கொண்டு போட்டிகளுக்குச் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
- தேசிய நிலநிதிக்கூட்டுறவுச் சங்கம், டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் 29ஆம் ஆண்டு இலக்கியப் போட்டிகள் (சிறுகதைப் போட்டியில் பங்கேற்பு)
- மலாயாப் பல்கலைக்கழக 35ஆம் பேரவைக் கதைகள் போட்டியில் பங்கேற்பு
- சஹானா (www.sahanamag.com) சிறுகதைப் போட்டி 2021இல் பங்கேற்பு (தமிழகம்)
- மொழி, இலக்கியம் சார்ந்த கருத்தரங்குகளில் பங்கேற்பு (மலேசியா, தமிழ்நாடு)
- சிறுகதை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் (UPSI பல்கலைக்கழகம்)
- இளந்தமிழர் பேரவை ‘கேட்கிறதா என் குரல்’ – பேச்சுப்போட்டி குரல் வல்லார் விருது
- இயல் பதிப்பகம், மலேசியா – இயல் விருது
- செந்தமிழ் விழா – மாவட்டம், மாநில நிலையிலான பேச்சுப் போட்டிகளுக்கான நீதிபதி.
- அனைத்துல ரீதியிலான வளர்தமிழ் சொற்போர் (உம்சி பலகலைக்கழகம், மலேசியா) – நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இலக்கியப் பாடம் எடுக்கும் மாணவர்களுக்கான இலவச வகுப்பு
- BOOK BENCHERS மின்னூலுக்கான கவிதைப் படைப்புகள் (தமிழகம்)
- யாப்பு பதிப்பகம் ‘உணவே மருந்து’ கவிதைப் படைப்பு (தமிழகம்)
- சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
GIPHY App Key not set. Please check settings