சமையல்

அசோகா அல்வா (சியாமளா வெங்கட்ராமன்)

சோகா அல்வா, முழுக்க முழுக்க பயத்தம் பருப்பில் செய்யக்கூடியது. பயத்தம் பருப்பு ஒரு அழகு சாதன பொருள், சரும அழகு, முடி வளர்தல், நகஅழகு ஆகியவற்றிற்கு நம் உணவில் அதிக அளவு சேர்க்க வேண்டும்.

மருத்துவத்திலும் இது சிறந்த உணவாக கருதப்படுகிறது உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கிறது இதில் வைட்டமின்பி9, பி1, பி6, வைட்டமின் ஏ, இரும்புச்சத்து செம்பு சத்து, நார்ச்சத்து ஆகியவை அதிகம் உள்ளது.

எனவே நம் முன்னோர்கள் பயத்தம்பருப்பு உபயோகித்து பலவித உணவுப்பொருட்களை தயாரித்தார்கள். அதில் ஒன்றுதான் இந்த அசோகா அல்வா.

உணவே மருந்து மருந்தே உணவு என்பதே நம் ஆன்றோர்களின தாரக மந்திரம். அவர்களைப் பின்பற்றி நாமும்  நோயின்றி வாழ்வோம்

அசோகா அல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள்:-

 • பயத்தம் பருப்பு – 1 கப்
 • சர்க்கரை – 1.1/2 கப்
 • நெய் – 1/2 கப்
 • கோதுமை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
 • முந்திரி – 5
 • ஏலப்பொடி – 1 ஸ்பூன்
 • கேசரி பவுடர் – 1 சிட்டிகை

செய்முறை:-

 • பயத்தம் பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்
 • பின், அதில் அளவாக தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, 3 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும்
 • சர்க்கரையை மிக்ஸியில் நைசாக பொடித்து வைத்துக் கொள்ளவும்
 • பருப்பு ஆறியதும் அதையும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்
 • ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி, முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்
 • அதே நெய்யில் கோதுமை மாவை வறுத்து கொள்ளவும்
 • அத்துடன், அரைத்து வைத்துள்ள பருப்பு சர்க்கரை இரண்டையும் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்
 • கெட்டியாக வரும் சமயம் ஏல பொடி, கேசரி பவுடர் சேர்க்கவும்
 • ஒட்டாமல் வரும் சமயம், அடுப்பிலிருந்து இறக்கவும்
 • தேவையானால் ஒரு ஸ்பூன் நெய் விடலாம்

இதுதான் சூப்பர் அசோகா அல்வா

#ad

Cook Books 👇

Gift your better-half, these Romance Novels for Valentines Day👇

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!