எழுத்தாளர் கோபாலன் நாகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அது ஒரு சாதாரண நாள்தான்… ஆனா, நான் எதிர்பார்க்க்காத ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும் பதட்டத்தில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை…
என் அன்பு கணவருக்கு போன் செய்து, உடனே புறப்பட்டு வர சொன்னேன். செய்தியை கேட்டதும், அவருக்கும் அதிர்ச்சிதான். சில மணி நேரத்திற்குப் பிறகு வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. ஆவலுடன் கதவை திறந்தேன்,
வாசலில் நின்று கொண்டிருந்த என் அம்மா, என்னை கட்டிப்பிடித்து, “ஏம்மா கீதா எப்படி இருக்கிற? அப்பா, அம்மாவை தனியா விட்டுட்டு வந்துட்டியே? என கதறி அழுதாள்.
மூன்று வருடங்களுக்குப் பீறகு அப்பா, அம்மாவை பார்த்ததும் நானும் அழுதேன். அப்பாவும், கண்கலங்கியபடி என்னை ஆதரவாக தட்டிக்கொடுத்தார். மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது, இருக்காதா பின்னே?
என்னுடன் படித்த வேறு சமூகத்தை சார்ந்த ஒருவரை கலப்பு திருமணம் செய்து கொண்டதால், என் மீது கோபமுற்று என்னுடன் பேசாமல், தொடர்பு கொள்ளாமல் மூன்று வருடங்களாக விலக்கி வைத்திருந்தனர் .
நான் பலமுறை போன் செய்தும், என்னுடன் பேசவில்லை, தற்போது நான் கருவுற்றிருப்பதை, யார் மூலமாகவோ தெரிந்தகொண்டு, கோபத்தை கைவிட்டு, என்னை பார்க்க வருவதாக காலையில்தான் அம்மா போன் செய்தார். அம்மாவிடமிருந்து போன் வந்தவுடன்தான், நான் சந்தோஷத்தில் தடுமாறி போனேன்.
நாங்கள், நெகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்ததை, கவனித்தப்படி, ஓரமாக நின்று கொண்டிருந்த என் கணவரை நான் அறிமுகப்படுத்தியதும், என் அப்பா அவரின் அருகில் சென்று, உரிமையாக அவர் தோளில் கை போட்டப்படி “என்ன மாப்பிள்ளை, எப்படி இருக்கீங்க?
நல்லா இருக்கோம் மாமா, வாங்க உள்ளே சென்று பேசுவோம்” என்றபடி வீட்டின் உள்ளே அழைத்து சென்றார்.
பெற்றோரின் கோபம் மறைந்து என்னை மீண்டும் மகளாக ஏற்றுக்கொண்டது எனக்கு மனசுக்கு ஆறுதலாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
எழுத்தாளர் கோபாலன் நாகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)gopalan
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings