எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வேதாச்சலம் தவித்தார். பேரனை ஆசையாகக் கொஞ்ச வேண்டும், அவனுடன் விளையாட வேண்டும் என்று எவ்வளவோ ஏக்கங்கள் அவருக்கு. அனைத்தும் கானல் நீராகும் நிலையில் தவிக்காமல் நிம்மதியாக இருக்க முடியுமா?
வெளிநாட்டில் வசிக்கும் மகன் குடும்பத்துடன் வந்ததிலிருந்து பேரனைக் கொஞ்ச முயன்றார். வீடியோ காலில் மட்டுமே பழக்கமான முகம் என்பதாலோ என்னவோ வேதாச்சலம் அருகில் வந்தாலே குழந்தை அழுதான். யாரிடமும் ஒட்டவில்லை.
வேதாச்சலத்தின் மனைவி கமலாவிடம் மட்டும் எப்படியோ சமாதானமாகிவிட்டான். ஆனால் வேதாச்சலத்தை தொடக் கூட அனுமதிக்கவில்லை.
ஆயிற்று, மாலை மறுபடியும் வெளிநாட்டுப் பயணம். ஒரு தாத்தாவாக அவரின் அடிப்படை ஆசை கூட நிறைவேறவில்லையே என்று தவித்தார்.
கிளம்பும் வேளையில், தளிர்நடை நடந்துவந்து வேதாச்சலத்தின் கால்களைக் கட்டிக் கொண்ட குழந்தை, நிமிர்ந்து அவரைப் பார்த்ததும் சட்டென்று விலகி, “ப்பா…” என்று அழ ஆரம்பித்தான்.
குழந்தை தன் கால்களைக் கட்டிக்கொண்ட சிலநொடி ஸ்பரிசத்தால் மெய் மறந்து நின்றிருந்தார் வேதாச்சலம்.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings