2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4
அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8
அத்தியாயம் 9 அத்தியாயம் 10 அத்தியாயம் 11 அத்தியாயம் 12
புதிதாய் இல்லத்திற்கு அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. கோபியும் அவன் நண்பர்களும் அவர்களுடனேயே அமர்ந்து கொண்டனர். வழக்கமாய் சாப்பிட அமர்ந்தவர்களுக்கு தட்டு வைத்து தண்ணீர் வைப்பது சரஸ்வதியின் வேலை. ஆனால், அவள் இன்று அதைச் செய்ய வரவில்லை.
அவளுக்கு பதிலாக சமையல்கட்டில் எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு மூத்த பெண்மணி அதைச் செய்து கொண்டிருந்தாள். என்ன காரணத்தால் சரஸ்வதி அங்கு வரவில்லை, என்பதைப் புரிந்து கொண்ட ஆறுமுகம் நேரே சமையல்கட்டிற்குள் சென்றார்.
“என்ன சரஸ்வதி… வழக்கமாய் நீதான் எல்லோருக்கும் சாப்பாடு மரிமாறுவே… இன்னிக்கு வேறொரு அம்மா பரிமாறுதே?” கேட்டார்.
“என்ன சார் தெரியாத மாதிரி கேட்கறீங்க?… அந்த நாதாரிப்பயலுக்கு… நான்… என்… கையால் சோறு போடுவதா?… நிச்சயம் மாட்டேன் சார்!… அதுக்கு பதிலா ஒரு நாய்க்குப் போட்டால் கூட அது வாலை ஆட்டிக்கிட்டு நம்ம கூட காவலுக்கு நிக்கும்” வெறுப்பைக் கக்கினாள்.
“சரஸ்வதி… எல்லா மனிதர்களும்… எல்லா நேரத்திலும்… எல்லா காலத்திலும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்!… சில சூழ்நிலைகள் அவர்களைத் தீயவர்கள் ஆக்கினாலும்… பல சூழ்நிலைகள் அவர்களைத் திருந்த வைக்கும்” என்றார் ஆறுமுகம்.
அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்த சரஸ்வதி, “சார்… நீங்க சொல்ற தத்துவமெல்லாம் மனிதர்களுக்கு… இவன் மனிதனே அல்ல” என்றாள்.
“ம்ம்ம்… நான் அவனைக் கடந்த மூன்று மணி நேரமாய்த்தான் பார்க்கிறேன்… அவன் இங்கே வந்த போதிருந்த மனநிலை வேறு.,.. இங்கு வந்த பின் இருக்கும் மனநிலை வேறு”
“எப்படிச் சொல்றீங்க?… அவன் அமைதியாய் இருக்கானே அதை வைத்துச் சொல்றீங்களா?… சார் அவன் அமைதியாய் இருக்கான்னா… பின்னாடி ஏதோ சதித்திட்டம் பண்ணிட்டிருக்கான்!னு அர்த்தம்!… எதுக்கு நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்க” என்றாள் சரஸ்வதி.
“ம்ம்ம்… நமக்குள் எதுக்கு வாக்குவாதம்?… ஊர் இருக்கும் நிலையைப் பார்த்தால் தண்ணீர் வற்ற இன்னும் ரெண்டு மூணு நாளாகும் போலத்தான் இருக்கு!… இந்த ரெண்டு மூணு நாள்ல நிறைய மாற்றங்கள் ஏற்படலாம்!…அவை நல்லவையாகவும் இருக்கலாம்” சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தவர் நேரே மக்கள் உணவருந்திக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தார்.
ஆறுமுகம் மீதுள்ள அதீத நம்பிக்கையின் காரணமாகவும், இருளாய் இருந்த தன் வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தித் தந்த அந்த நல்ல உள்ளத்திற்கு தான் செய்யும் பிரதியுபகாரமாகவும், ஆறுமுகத்தின் பேச்சை மதித்து தானே உணவு பரிமாறச் சென்றாள் சரஸ்வதி. ஆனால், அதற்கு முன்பே கோபி சாப்பிட்டு முடித்து எழுந்து சென்று விட்டதால், நிம்மதியாய் மற்றவர்களுக்குப் பரிமாறினாள் அவள்.
சாப்பாட்டுக் கூடத்திலிருந்து வெளியே வந்த கோபி கையை கழுவி விட்டு, இல்லத்திற்கு வெளியே உள்ள மைதானத்தில் நின்று, சட்டைப் பாக்கெட்டிலிருந்து பீடியை எடுத்துப் பற்ற வைக்க, “என்ன சார்… பாதி சாப்பாடிலேயே எழுந்து வந்திட்டீங்க போலிருக்கு?” ஆறுமுகத்தின் குரல் அருகாமையில் கேட்க,
சட்டென்று பீடியைக் கீழே போட்டு விட்டு, “அது… வந்து… வயிறு சரியில்லை சார்” என்றான் கோபி.
“உண்மையில் வயிறு சரியில்லையா?… இல்லை மனசு சரியில்லையா?”
“விருட்”டென்று தலையைத் தூக்கி ஆறுமுகத்தை நேர்ப் பார்வை பார்த்த கோபி, “தெரியல சார்” என்றான்.
“உங்களுக்குத் தெரியலை… ஆனா எனக்குத் தெரியும் உங்களுக்கு மனசுதான் சரியில்லை…”
தன் மன ஓட்டத்தைத் தெளிவாய்ப் புரிந்து கொண்டு ஆறுமுகம் பேசியதை வியப்போடு கவைத்தான் கோபி.
“கோபி சார்… உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?… கடவுள் நம்ம எல்லோருக்குமே ஒரு சிநேகிதர்… அவர் யாரையும் பகைச்சுக்க மாட்டார்… யார் மீதும் வெறுப்பு காட்ட மாட்டார்… எல்லோரையும் ஒரே மாதிரிதான் காப்பார்!…”
அவர் என்ன சொல்ல வருகிறார் அன்பது புரியாத கோபி, புருவங்களை நெரித்துக் கொண்டு ஆறுமுகத்தின் முகத்தைப் பார்க்க,
“ஏன் கடவுள் எல்லோரையும் ஒரே மாதிரி காப்பாத்துகிறார்ன்னா… அப்பத்தான் மனிதர்களும் ஒருத்தர் மீது ஒருத்தர் பகை பாராட்டாமல்… மத்தவங்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பார்கள் என்பதற்காக… ஆனா இங்க அப்படியா இருக்கு?… மனுஷனை மனுஷன் சாப்பிடறான்!… அடுத்தவனோட கஷ்டங்களிப் பத்தி யோசிக்காம தான் சந்தோஷமா இருந்தா போதும்!ன்னு நினைக்கிறான்!… அவன் அப்படி நினைக்கறதினாலதான் இந்த இல்லத்துல இத்தனை மாற்றுத் திறனாளிகள் குவிஞ்சிருக்காங்க!… இந்த சமுதாயம் அவங்களை ஊனமுற்றவர்களாய்ப் பார்க்காம நல்லவிதமா பார்த்திருந்தா… இவங்க இங்க வந்து அடைக்கலம் புக வேண்டிய அவசியமேயில்லை!… சுலபமான இந்த வாழ்க்கையை சுலபம் ஆக்கிக் கொள்வதும்… அதைக் குழப்பி ஒரு போராட்டமாக ஆக்கிக் கொள்வதும்… நம்ம கைலதான் இருக்கு கோபி” ஒரு நீண்ட பிரசங்கமாய் ஆறுமுகம் பேசி முடிக்க
“ஆறுமுகம் சார்… எனக்கு உங்க முன்னாடியும்… அந்த ஊனமுற்ற பிள்ளைக முன்னாடியும் நிற்கவே கூசுது சார்!… நினைச்சுப் பார்த்தேன்… உங்க வாட்ச்மேனைத் தாக்கினேன்… கால் சூம்பிப் போன பையனோட வெயிட் பார்க்கிற மெஷினை உடைச்சேன்… அவனையும் அடிச்சேன்!… அதே மாதிரி கண்ணுத் தெரியாத அந்த இளைஞனோட கையிலிருந்த பணத்தையெல்லாம் பிடுங்கினதும் இல்லாம அவனையும் உதைச்சுக் கீழே தள்ளினேன்!… ஆனா நான் இங்க வந்து இறங்கினப்ப… அவனுகதான் மின்னாடி வந்து என்னையும் என் ஆட்களையும் சந்தோஷ முகத்தோட வரவேற்று… சாப்பாடு தந்தாங்க!…ச்சே…. என்னை நெனச்சா எனக்கே வெட்கமாயிருக்கு சார்!… நான் ஊனமுற்றவன் மாதிரி உணர்றேன்” உணர்ச்சி பொங்கப் பேசினான் அந்த கோபி.
“கோபி… யாரை வேணா நீங்க ஏமாத்திடலாம்!… ஆனா உங்க மனசாட்சியை நீங்க ஏமாத்த முடியாது!… அது இறுதி வரைக்கும் உங்களைக் குத்திக்கிட்டேயிருக்கும்!…. “
“இல்லை சார்… நான் இப்ப என் தவறுகளை உணர்ந்திட்டேன்!…. இனிமேல் நான் என்னால் முடிஞ்ச அளவுக்கு இந்த இல்லத்துல இருக்கற பசங்களுக்கும்… இந்த ஊர் மக்களுக்கும் நல்லதே செய்யப் போறேன்” கண்களில் பிரகாசம் மின்ன கோபி சொல்ல,
“நீங்க மத்த பசங்களுக்கு நல்லது செய்யறதுக்கு முன்னாடி முதல்ல உங்க மகனுக்கு நல்லது செய்யுங்க” என்று ஆறுமுகம் சொல்ல,
குழப்பமானான் கோபி. “சார்… என்ன சொல்றீங்க… என்னோட மகனா?… அப்படி யாரும் எனக்கு இல்லையே?”
“அப்படின்னு நீங்க நெனச்சிட்டிருக்கீங்க… ஆனா உண்மையில் உங்களுக்கு ஒரு மகன் இருக்கான் அவனை நான் இப்ப உங்களுக்கு அறிமுகப்படுத்தறேன்” என்ற ஆறுமுகம் சட்டென்று அங்கிருந்து சென்று, சரஸ்வதியின் மகன் ராஜாவைத் தூக்கிக் கொண்டு வந்தார்.
கோபி அந்தச் சிறுவனைப் பார்த்து முகம் சுளிக்க, “முகம் சுளிக்காதீங்க கோபி… உண்மையிலேயே இவன் உங்க மகன்தான்!… என்னடா கோணல் மூஞ்சியோடவும் பிளவுபட்ட மேலுதடும்… கீழுதடும் இருக்கற எவனோ ஒரு பையனைக் கொண்டு வந்து “இவன்தான்… உன் மகன்”ன்னு சொல்றாரே ஆறுமுகம் சார்ன்னு யோசனையா இருக்கா….?”
கோபி பதிலேது சொல்லாமல் நிற்க, “கோபி சார்… அடுத்து உங்களுக்கு இன்னோரு முக்கியமான ஆளையும் அறிமுகப்படுத்தப் போறேன்” என்றார்.
யார்? என்று கோபி பார்வையால் கேட்க,
“உங்க மனைவியை…”
“என்…. ம…. னை….வி?… யா?”
“ஆம்…. உங்க மனைவியேதான்…!… அதாவது இந்தச் சிறுவனோட அம்மா” என்ற ஆறுமுகம், அந்தச் சிறுவனைக் கீழே இறக்கி விட்டு, “ராஜா… போய் அம்மாவை சார் கூப்பிடறேன்!னு சொல்லி இங்க கூட்டிட்டு வா பார்க்கலாம்” என்றார்.
அவன் தன் பிளவுபட்ட வாயால் சிரித்துக் கொண்டு ஓடினான்.
சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துக் கொண்டிருந்த சரஸ்வதியிடம் சென்று, “ம்மா… உன்னைய சார் கூப்பிடறார்” என்றார்.
“என்னையா?” என்றவள், ஜன்னல் வழியே ஆறுமுகம் வெளியே நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, அவர் மட்டும்தான் நிற்கிறார் என்று எண்ணிக் கொண்டு வேக வேகமாய் வந்தாள்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings