2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19
அன்று ராம்சந்த் வீட்டில் தடபுடலாக அவர்களை வரவேற்றது பரமேஸ்வரனுக்கு திருப்தியாக இருந்தது .மாலினி தேவியும் ருக்மணியை வரவேற்றாள். பிறகு எல்லோருக்கும் சம்பிரதாயமாக தண்ணீர் கொடுத்து உபசரித்து விட்டு பேசி கொண்டு இருந்தார்கள்.
ராம் சந்த் “மாலினி காவ்யா ரெடியாயிட்டாளான்னா அழைச்சிட்டு வா..
மாலினி போனபோது காவ்யா சிம்பிளா டிரஸ் பண்ணிக் கொண்டு ,ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தாள் .சாதாரண மேக்கப்பிலும், டிசைனர் சேலையிலும் தேவதையாக இருந்தாள். மாலினிக்கு ஒரு நிமிஷம் மகளைப் பார்த்து பெருமையாக இருந்தது.
‘இப்படிப்பட்ட தேவதையை யாருக்குத்தான் பிடிக்காது?’ என்று பெருமைப்பட்டுக் கொண்டாள் .மாப்பிள்ளை ஆதர்ஷை முதல் பார்வையிலேயே மாலினிக்கு பிடித்துவிட்டது. .அதிகம் பேசாவிட்டாலும், காவ்யாவுக்கு பொருத்தமான ஜோடி என்று மனதில் தோன்றியது ..
“காவ்யா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாரும் வந்துட்டாங்க …கீழே இறங்கி வா.. அப்பா உன்னை வரச் சொன்னாரு” ..காவ்யா ஒன்றும் பேசாமல் கீழே இறங்கி வந்து எல்லோரையும் நமஸ்கரித்தாள்.
தற்செயலாக காவ்யாவை நிமிர்ந்து பார்த்த ஆதர்ஷுக்கு ஒரே ஆச்சரியம்.. ‘இவளை எங்கோ பார்த்திருக்கிறோம்..எங்கே?’ என்று நினைவில் தேடினான் .
ருக்மணி தேவி,” வாம்மா காவ்யா என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துக்கோ ” என்று அன்புடன் அழைத்தார்.
“காவ்யா எல்லோருக்கும் ஸ்வீட் குடு” என்று மாலினி தேவி கூற.. வேலை பார்க்கும் பெண் பாதாம் கேசரி நிரம்பிய பௌல்களை ஒரு ட்ரேயில் வைத்து கொண்டு வந்தாள். அதை வாங்கி எல்லோருக்கும் கொடுத்தாள் காவ்யா. பிறகு ருக்மணி தேவி பக்கத்தில் அமர்ந்தாள்..
திரும்ப அம்மா அருகில் அமர்ந்திருந்த காவ்யாவை ஒரு நிமிடம் நன்றாக உற்றுப் பார்த்தான் ஆதர்ஷ். அதை கவனித்த பரமேஸ்வரனுக்கும் ,ருக்மணி தேவிக்கும் ஆச்சரியமாக இருந்தது.
‘கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல், எந்த வித ஆர்வமும் இல்லாமல் கிளம்பியவன்.. பெண்ணை பார்த்த பிறகு இரண்டாவது முறையாக அவள் முகத்தை ஏறிட்டு உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான் ..அவனுக்கு காவ்யாவைப் பிடித்திருக்கிறது போல’ என்று இருவர் மனதிலும் ஒன்றாக தோன்றியது ..
இவளை எங்கு பார்த்திருக்கிறேன் ..நினைவை கசக்கிக் கொண்டு இருந்தான் ..காவ்யா அடக்கமாக இருந்தாலும், அவள் அம்மா பண்ணிய அலட்டல்கள் அவனுக்கு எரிச்சலூட்டியது.
கையில் இருந்த காபி லேசாக அவன் டிரஸ்ஸில் சிந்தி விட, “ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு?”என்றபடி எழுந்தான்.
காவ்யா டக்கென்று “வாங்க நான் காண்பிக்கிறேன்” என்று முன்னே நடந்தாள். மாலினிக்கும், ராம்சந்த்க்கும் சந்தோஷம் பிடிபடவில்லை. அசிரத்தையாக இருந்தவள், ஆதர்ஷ்ஷைப் பார்த்ததும் அவனிடம் பேச சந்தர்ப்பம் எதிர்பார்த்து பேசியது.. மனதிற்குள் இருவருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
“வாங்க நான் காண்பிக்கிறேன்” என்றவள், ரெஸ்ட் ரூமை அவனுக்கு காண்பித்து விட்டு, டக்கென்று தன் உள்ளங்கையில் மடித்து வைத்திருந்த ஒரு சிறு பேப்பரை அவன் கையில் கொடுத்து,
“இது என்னுடைய போன் நம்பர்.. ப்ளீஸ் நைட் கால் பண்ணுங்க.. சில விஷயம் பேசனும். பெரியவங்க முன்னாடி பேச முடியாது” என்றாள் கிசுகிசுப்பாக . .
ஆதர்ஷ் டக்கென்று..” நாளைக்கு நீங்க ஃப்ரீயா இருந்தீங்கன்னா, ஊருக்கு வெளியில இருக்கிற புட் லேண்ட் ரெஸ்டாரெண்ட் ..உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் …அங்க வந்துடுங்க. அங்க மாடியில் யாருமே இருக்க மாட்டாங்க. நம்ம பிரீயா நேர்ல பேசிக்கலாம். எனக்கும் உங்ககிட்ட பேச வேண்டியதிருக்கு..” என்றான்.
பிறகு காவ்யா திரும்பிவந்து ருக்மணிதேவி பக்கத்தில் அமர்ந்து கொள்ள …சற்று நேரத்தில் திரும்பிய ஆதர்ஷ் ஒன்றுமே பேசாமல் அமர்ந்திருந்தான். பெரியவர்கள் மட்டும் பேசிக்கொண்டிருந்தனர்.
ராம்சந்த் ” நீங்க போயி தம்பி கிட்ட பேசிட்டு உங்க முடிவை சொன்னீங்கன்னா அடுத்தது ஒரு நல்ல நாள்ல நிச்சயம் பண்ணிக்கலாம். கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடலாம் …”
பரமேஸ்வரன்” நிச்சயதார்த்தத்தை தனியாக கூட நீங்க செய்யம்னு அவசியமில்ல.. கல்யாணத்துக்கு முதல்நாள் சாயங்காலம் பண்ணிக்கலாம் ..கல்யாணம் சீக்கிரம் வைக்கனும்னு சொல்றீங்க அதனால எதுக்கு ரெண்டு பங்க்ஷன் தேவையில்லாம …”
“அம்மா நீங்க ஒன்னும் உங்க கருத்த சொல்லலியே.. எங்க காவ்யாவை உங்களுக்கு புடிச்சிருக்கா?”
“உங்க பொண்ணு நல்ல பதவிசா இருக்கா ..இவளை யாருக்கு பிடிக்காமல் இருக்கும்? ..ஆதர்ஷ் விருப்பத்தை தெரிஞ்சுகிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறோம்” என்றாள் தைரியமாக ..பரமேஸ்வரன் அவளை முறைத்துப் பார்த்தார்.
“என்னப்பா ஆதர்ஷ் நீ ஒன்னும் பதில் சொல்லலியே ..”
“உடனே அவனைக் கேட்டால் அவன் எப்படிப் பதில் சொல்லுவான். வீட்டுக்கு போய் நம்ம மூணு பேரும் நிதானமா பேசி அதுக்கப்புறம் அவங்களுக்கு சொல்லலாம் .. “
“அம்மா சொல்றது சரிதான்! நாங்களும் காவ்யா கிட்ட பேசிகிட்டு அதுக்கப்புறம் நாம தேதியை முடிவு பண்ணுவோம் ..”அந்த டைம் கிடைத்ததே காவ்யாவிற்கு பெரிய ஆறுதலாக இருந்தது..
வீட்டிற்கு வந்ததும் பரமேஸ்வரன் பேச்சை ஆரம்பிக்க.. “ஐ நீட் சம் டைம்.. காலையில பேசலாம்” என்று ரூமுக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டான் ஆதர்ஷ்.
நல்லவேளையாக மறுநாள் காலையில் பரமேஸ்வரன் தன்னுடைய பிரெண்ட் ஒருவர் வீட்டு கல்யாணத்துக்கு கிளம்பிப் போய்விட, ஆதர்ஷ் நிம்மதியாக பீல் பண்ணினான்.
காலையில் காவ்யா நம்பருக்கு போன் பண்ணி “எந்த டைம் மீட் பண்ணலாம்?” என்று கேட்டபோது காலையில் 11:00 மணி என்று அவள் சொல்ல நிதானமாக கிளம்பினால் போதும்.
முதலில் ஆபீஸ் போய் விட்டு அதற்கப்புறம் அவளை பார்க்க போகலாமா என்று யோசித்தவன் ..போனால் ஏதாவது முக்கியமான வேலை இருக்கலாம் ..அதை உதறிவிட்டு கிளம்புவது சிரமமாகி விடலாம் ..” என்று நினைத்து நேராக பதினோரு மணிக்கு ஹோட்டலுக்கு போவதென்று முடிவு பண்ணினான்.
சதீஷ்க்கு போன் பண்ணினான்.” சதீஷ் நான் ஒரு ப்ரண்டைப் பார்க்க போறேன்.. வர கொஞ்சம் டைம் ஆகும். அதனால லஞ்ச் வரைக்கும் நீங்க ஏதாவது முக்கியமான போன் வந்தா என்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் ..நீங்களே ஆன்சர் பண்ணுங்க. மதியம் லஞ்ச்கு அப்புறம் ஆபீஸ் வந்துடுவேன்.”என்றான்.
10 :45 க்கு அவன் ஹோட்டலை அடைந்தபோது காவ்யா இன்னும் வரவில்லை. ரெஸ்டாரன்ட் ஃபர்ஸ்ட் ஃப்ளோர் போனவன் ஒரு லெமன் ஜூஸ் மட்டும் ஆர்டர் பண்ணி விட்டு, ஒதுக்குப்புறமாக இருந்த டேபிளில் அமர்ந்தான். பொதுவாக இந்த ரெஸ்டாரெண்ட்டில் கூட்டம் அதிகம் இருக்காது. முக்கியமான பிசினஸ் பேச அங்கே தான் ஏற்பாடு பண்ணுவான்..
சரியாக 10 : 55 காவ்யா வந்து கொண்டிருந்தாள் .கூடவே ஜெய் ..
“வாங்க மிஸ்.காவ்யா..மிஸ்டர்..உங்க பேர் தெரிஞ்சுக்கலாமா “
“என்னுடைய நேம் ஜெயச்சந்திரன்.. ஜெய்ன்னு கூப்பிடுவாங்க”
“பை தி பை அயம் ஆதர்ஷ்..’ஈஸ்வர் எக்ஸ்போர்ட்ஸ்’ எம்.டி.. வெல்கம் போத் ஆப் யூ….”
காவ்யா “மிஸ்டர்.ஆதர்ஷ்! எங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்த்ததும் நீங்க ஷாக் ஆயிடுவீங்கன்னு நெனச்சேன். ஆனா எங்களை எதிர்பார்த்த மாதிரி வெல்கம் பண்றீங்களே” என்றாள் மெதுவாக..
“மிஸ் .காவ்யா உங்களுக்குத்தான் என்னை நேற்று வரை தெரியாது. ஆனால் நான் உங்களை ரெண்டு மூணு தடவை பார்த்திருக்கிறேன் “
“எங்களை பாத்திருக்கிங்களா? எங்க?” என்று இருவரும் ஆர்வத்தோடு ஒரே குரலில் கேட்டார்கள் .
நான் ஒரு தனிமை விரும்பி. தனிமை தேவைப்படும் போதெல்லாம் பீச்சுக்குப் போவேன்.யாரும் அதிகம் இல்லாத இடத்தில் கொஞ்ச நேரம் அலைகளை பார்த்து கிட்டு உட்கார்ந்திருப்பேன்.. அப்புறம் வீட்டுக்கு கிளம்பிடுவேன். அப்படி பீச்சுல இருக்கும்போது ரெண்டு மூணு தடவ உங்க
ரெண்டு பேரையும் பார்த்திருக்கேன்.”
” நேத்து உங்கள உங்க வீட்ல பார்க்கும்போது எனக்கு உங்ககிட்ட ஒரு படபடப்ப பாக்க முடிஞ்சுது. காரணம் இதுவாக தான் இருக்கும்னு ஈஸியாக புரிஞ்சுது. அதனால் தான் உங்களை பேசுறதுக்கு இந்த ரெஸ்டாரண்டுக்கு வரச் சொன்னேன் .”
அவன் அவர்களுக்காக ஆர்டர் பண்ணிய ஜூசை இருவரும் குடித்துக்கொண்டே பேச ஆரம்பித்தனர். ..மூவரும் சந்தோஷமாக வெளியே காட்டிக் கொண்டாலும்.. ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு பதட்டம் நிலவியது..அவர்கள் கண்முன்னே சிக்கலான ஒரு எதிர்காலம் .. .அதிலிருந்து மீள வழி ?
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings