2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9
டாக்டர் புன்னகையுடன் வாழ்த்து சொல்ல… ஆயிரம் இடிகள் தலையில் இறங்கியது போல் அதிர்ச்சி ராம்க்கு. இந்த நான்கு வருடங்களாக இல்லாதது… இப்போது பார்த்தா வர வேண்டும்.
ஒருவேளை வந்தனா அவன் வாழ்வில் இல்லாமல் இருந்திருந்தால், இந்த குழந்தையின் வரவு அவனுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்குமோ என்னமோ.. அப்போது அது அதிக கவலையையே கொடுத்தது.
வந்தனாவை எப்படி சமாளிக்க… இந்த விஷயம் தெரிந்தால் அவ்வளவுதான். மகாவையே தன் வாழ்க்கையிலிருந்து கழற்றி விட வேண்டும் என்று நினைக்கும்போது புது தலைவலியாய் இந்த குழந்தை.
ஆனால் அவன் கூட நின்றிருந்த தங்கத்தின் மனநிலை வேறு மாதிரி இருந்தது. அவள் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. இந்தக் குழந்தைக்காக மகாம்மா எவ்வளவு தூரம் ஏங்குறாங்க… தான் உண்டாயிருக்கிறது தெரியவரும் போது எவ்வளவு சந்தோஷப்படுவாங்க.
தங்கம் மெதுவாக, “அம்மா கருமாரியம்மன கும்பிட்டது வீண் போகல… அவ கடைசில கண்ணத் திறந்திட்டா. அம்மாவுக்கு வயிறு திறந்திடுச்சு” என்றாள் மகிழ்ச்சியோடு .தன் மகிழ்ச்சியை யாரிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தவளுக்கு வெளியே கவலையோடு காத்திருந்த சுந்தரம் கண்ணில் பட்டார்.
ஓடிப் போய், “அண்ணே! நம்ம மகா அம்மாவுக்கு பாப்பா பிறக்கப் போகுது, அம்மா உண்டாயிருக்காங்க” என்றாள் மகிழ்ச்சி பொங்க.
சுந்தரத்திற்கு ஒருகணம் உடல் புல்லரித்தது. அந்த அம்மன் கருணை மகாவிற்கு ஒரு குழந்தை கிடைச்சிருக்கு. இனி ராம் கூட மனம் மாறக்கூடும். மற்ற சகவாசத்தையெல்லாம் விட்டுட்டு மகாவிடம் அன்பாக பிரியமாக வாழலாம் என்ற நம்பிக்கை கூட அவருக்கு பிறந்தது.
‘இந்தக் குழந்தை கடவுள் அருளால் இருவரையும் ஒன்று சேர்த்து வைக்கட்டும்’ என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டார்.
டாக்டர் சில மாத்திரை, மருந்துகள், டானிக் எல்லாம் எழுதிக் கொடுத்து விட்டு, “நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. வெயில் அதிகமா இருக்கு.. நிறைய ஜூஸ், இளநீர் குடிங்க. அதிகமாக வெயில்ல அலையாதீங்க… மற்றபடி மாத்திரை, டானிக் எல்லாம் ஒழுங்கா எடுத்துக்கங்க. ஒரு மாதம் கழிச்சு செக்கப்கு வாங்க” என்றார்.
வீட்டிற்கு வந்த மகாவிற்கு இனம் புரியாத ஒரு உணர்ச்சி, ராம் மடியில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
“ஏங்க! எவ்வளவு பெரிய பரிசு அந்த கருமாரியம்மன் எனக்கு கொடுத்திருக்கா. நீங்க அப்பா ஆகப் போறீங்க… நான் அம்மா ஆகப் போறேன். நம்ம வீட்டுல ஒரு குட்டி குழந்தை நடமாட போகுது. எவ்வளவு பெரிய சந்தோஷம். இந்த நாலு வருஷத்து வேண்டுதலுக்கு இப்பதான் அந்த அம்மா மனமிறங்கி இருக்கா. அப்பா அம்மா, மாமா, அத்தை ஆசீர்வாதம் எனக்கு இந்த குழந்தை கிடைச்சிருக்கு. இப்பவே ராகினி சித்திகிட்ட சொல்லனும். அவள்தான் எனக்காக கோவில் கோவிலா போய் கும்பிட்டுகிட்டிருக்கா.”
ராம் தன் உணர்ச்சியை வெளிக்காட்டாமல், “நீ இப்பதான் நாலு வருஷத்துக்கப்புறம் குழந்தை உண்டாயிருக்க. நல்ல ரெஸ்ட் எடுக்கனும். இந்த மாதிரி உணர்ச்சி வசப்படக் கூடாது. டாக்டர் எழுதி கொடுத்த மருந்தெல்லாம் ஒழுங்கா சாப்பிடு. இப்ப கொஞ்ச நேரம் நல்ல ஓய்வெடு. வீட்டு பொறுப்பையெல்லாம் சுந்தரமும், தங்கமும் பார்த்துப்பாங்க.”
அவள் சித்தி ராகினி அவளுடைய அம்மாவுடைய சொந்த தங்கை, மகா மேல் உயிரையே வைத்திருந்தாள். மகா சொன்ன செய்தியைக் கேட்டதும் கை கொள்ளாமல் இனிப்புகளை வாங்கிக்கொண்டு, மகாவைப் பார்க்க சாயங்காலமே வந்து சேர்ந்தாள்.
மகாவை பார்க்க வந்த ராகினி பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பும்போது, “ராம் எனக்காக நீங்க ஒரு உதவி செய்யனும். நீங்க மகாவை எங்க வீட்டுக்கு அனுப்புங்க, நான் அவளை பத்திரமா பார்த்துக்கறேன். மசக்கை அதிகமா இருக்குற நேரத்துல அவ ஒரு மாசம் எங்க வீட்டுல இருந்தா. அவளுக்கு வேண்டியதை நான் செஞ்சு கொடுப்பேன். அவளுக்கும் அவள் வீடுன்னா ஓய்வெடுக்கத் தோணாது. எங்க வீட்டில கொஞ்சம் ஓய்வு இருப்பா. தயவுசெய்து மாட்டேன்னு சொல்லிடாதீங்க. முடியும் போதெல்லாம் நீங்களும் அங்கு வந்து இருக்க” என்றாள் .
பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்தது போல உணர்ந்தான் ராம்.
“கண்டிப்பா நீங்க கூட்டிட்டுப் போங்க! அவ உங்க கூட இருந்தா சந்தோஷமா இருப்பா. இங்கே நான் கம்பெனிக்கு போயிட்டா தனியா தான் இருப்பா. நானும் அப்பப்ப உங்க வீட்டுக்கு வந்து பாத்துக்குறேன்” என்றான் அவசரமாக.
மகா மனதில்லாமல் சம்மதிக்க, மறுநாள் ராம் தானே கொண்டு வந்து அவளை ராகினி வீட்டில் விடுவதாக வாக்களித்தான்.
இந்த விஷயத்தை வந்தனாவுக்கு சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் அவனை ஆட்டுவித்தது. இது தெரிந்தால் வந்தனா வானத்திற்கும், பூமிக்கும் குதிப்பா. கையில கிடைத்ததையெல்லாம் போட்டு உடைப்பா. இப்போதைக்கு இந்த விஷயம் அவளுக்கு தெரிய வேண்டாம் என்று முடிவு செய்தான்.
அவன் செல்போன் சிணுங்க, ‘மகா தான் கூப்பிடறா போல. இப்பதானே அவளை சித்தி வீட்ல கொண்டு போய் விட்டுவிட்டு வந்தேன்’ என்ற எரிச்சலில் போனை எடுத்தவன் வந்தனா பெயரைப் பார்த்து சற்று அதிர்ச்சியாகி பிறகு அட்டெண்ட் பண்ணினான்.
“என்னடா நைட் கூப்பிடுற… இன்னும் தூக்கம் வரலையா?”
“இல்லை ஹனி! உனக்கு நான் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கப் போறேன், என்னன்னு சொல்லு பார்க்கலாம்” என்று கொஞ்சினாள்.
குழப்பத்தில் இருந்த ராமுக்கு யோசிக்கும் திறனே போனது போல் இருந்தது. “நீயே சொல்லிடு டார்லிங்”
“நாளைக்கு நானும், அம்மாவும் மதியம் 12மணி பிளைட்ல சென்னை வர்றோம்”
அதிர்ந்தான் ராம்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings