in ,

மத்யமாவதி (பகுதி 2-மாயா மாளவ கௌளை) – சாய்ரேணு சங்கர் 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1

“என்ன விஷ்ணு? எத்தனை நாள் உன் கோபத்தை இப்படியே மெயின்டெயின் பண்ணப் போற? அவனும் உன் பையன்ங்கறத மறந்துடாதே!” என்றார் வக்கீல் பாண்டுரங்கன்.

“அதை நான் மறந்து 15 வருஷத்துக்கு மேல ஆச்சு” என்று உறுமினார் விஷ்ணுகுமார்.

“சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாதே. உனக்கு இது இரண்டாவது அட்டாக். உன் மனைவிக்கும் வயசாயிடுச்சு. இனிமே எதுக்கு இந்தக் கோபதாபமெல்லாம்…”

“உளறாதே பாண்டு. என் பேச்சைக் கேக்கறவங்கதான் என் பிள்ளைங்க. எவனோ ஓடுகாலித் தறுதலையை எல்லாம்…”

“அவன் இன்னிக்கு லீடிங் மியூசிக் டைரக்டர்.”

“இருக்கட்டும். அதுக்காக…”

“அதைத்தான் நான் கேட்கறேன். அதுக்காகத்தானே அவனை இந்த வீட்டுக்குள் நீ அனுமதிக்காம இருக்கே? உன் அதிகாரத்தை வெறுத்து அவன் சின்ன வயசிலேயே இந்த வீட்டை விட்டு ஓடிப் போயிட்டான். கெட்டழிஞ்சு தறுதலையாத்தான் திரிவான்னு நீ சொன்னே. ஆனா அவன் வாழ்க்கையில் ஜெயிச்சுப் பெரிய நிலையை அடைஞ்சுட்டான். உன் தோல்வியை ஒப்புக்க நீ தயாரில்லை. அதோட அவனைப் பார்த்துட்டா எங்கே உன் கோபங்களெல்லாம் வடிஞ்சு அவனை ஏத்துக்கிட்டிருவியோன்னு உனக்கே சந்தேகம். அவனைப் பார்த்து உன் மத்த குழந்தைகள் உன் கைப்பிடியை விட்டுப் போயிடுவாங்களோன்னு பயம்.”

“உளறாதே” என்றார் விஷ்ணுகுமார் மறுபடியும். “சரி, அவன் தீபாவளிக்கு வந்து தொலையட்டும். காமாட்சியை அவனுக்கு எழுதச் சொல்றேன்.”

“இன்னுமா லெட்டர் எழுதிக்கிட்டிருக்கீங்க உங்க வீட்ல? நான் கால் பண்ணிச் சொல்லிக்கறேன் அவனுக்கு.”

“உன் இஷ்டம்” என்றார் விஷ்ணுகுமார்.

தன் தந்திரம் பலித்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தார் பாண்டுரங்கன்.

விஷ்ணுகுமார்-ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே அநாதையாக்கப்பட்டவர். ஆனால் தாய்மாமன் உதவியுடன் நன்கு படித்தார். பிறகு ராணுவத்தில் சேர்ந்தார்.

தாய்மாமன் மகளையே திருமணம் செய்துகொண்டார். நான்கு குழந்தைகளுக்குத் தந்தையானார். இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று வந்ததும், அவர் நண்பர் வக்கீல் பாண்டுரங்கன் உதவியுடன் வியாபாரம் ஒன்றைத் தொடக்கி அதில் பெருவெற்றியும் கண்டார்.

சிறுவயதில் பட்ட கஷ்டங்களும் கண்ட அதிர்ச்சிகளும் ராணுவப் பயிற்சிகளும் அவரை மிகவும் கண்டிப்பான குடும்பத் தலைவராக ஆக்கி விட்டிருந்தன. அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் அந்த வீட்டில் சட்டம். எல்லோரும் எத்தனை மணிக்கு உணவருந்த வேண்டும், எத்தனை மணிக்கு உறங்கச் செல்ல வேண்டும், யார் யார் என்னென்ன படிக்க வேண்டும், எத்தகைய தொழில் அல்லது உத்யோகத்தில் அமர வேண்டும் எல்லாம் அவருடைய இஷ்டந்தான்.

மூத்த மகன் சம்பத்குமார் அவர் சொன்னபடியே எம்பிஏ படித்தான். அவருடைய வியாபாரத்தைக் கவனிக்கலானான்.

இரண்டாம் பெண் ஷீலா, ஏகப்பட்ட மார்க் எடுத்தும் தொழில்முறைக் கல்விக்குப் போகாமல் அப்பா சொற்படியே ஆசிரியப்பணிக்குப் போனாள். இன்னொரு ஆசிரியரையே அவளுக்குத் திருமணம் செய்து வைத்தார். அவரால் நடத்தப்படும் பள்ளியின் கரஸ்பாண்டெண்ட் ஆகவும் பிரின்சிபாலாகவும் இருவரும் இருக்கிறார்கள். விஷ்ணுகுமார் வீட்டிலேயே வாசம்.

கடைசிப் பெண் ஜானவிக்கு அவ்வளவாகப் படிப்பு வரவில்லை. பாவம், அவளுக்கு ஓவியம் வரைவதில் மிகவும் பிரியம். அந்த ஆசை விஷ்ணுகுமாரால் சிறுவயதிலேயே ஒடுக்கப்பட்டது. விளையாடுவது தடுக்கப்பட்டது. பல டியூஷன்கள். விஷ்ணுகுமார் விருப்பப்படியே அவளுக்கு ஐஐடி கிடைத்துப் படித்து வருகிறாள்.

மூன்றாவது பையன் ஜெயக்குமாரை டாக்டராக்கி விட வேண்டுமென்பது விஷ்ணுகுமாரின் லட்சியம். ஆனால் அவன் அவர் இஷ்டப்படி நடக்கவில்லை. 17 வயதிலேயே வீட்டைவிட்டு ஓடி விட்டான். எங்கெங்கோ திரிந்தான். ஒரு பணக்கார நல்ல மனிதரின் உயிரைக் காப்பாற்றினான். அவர் அவனை அவன் ஆசைப்படியே இசைக் கல்லூரியில் சேர்த்து விட்டார்.

20 வயதில் திரைப்படத்தில் பாட முதல் வாய்ப்பு. இருபத்தி ஐந்து வயதில் இசை அமைப்பாளன். இருபத்தியெட்டு வயதில் பிரபல திரைப்பட நடிகை அஞ்சனாதேவியோடு திருமணம். இதோ 32 வயதில் வெற்றிகரமான, தேசிய அளவில் விருதுகள் பெற்ற இசைக் கலைஞன்.

நீலாங்கரையில் கடலைப் பார்த்தவாறு அமைந்துள்ள ஆடம்பரமான பங்களாவில் அவனை நாம் சந்திக்கிறோம்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 9) – தி.வள்ளி, திருநெல்வேலி

    ஓட்டப்பந்தயம் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்