in ,

எண்ணங்கள் வண்ணமாகட்டும் (தொடர்கதை – பகுதி 3) – கற்பக அருணா

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

நவீன் தனது வண்டியின் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி பிரியா வீடு நோக்கி விரைந்தான். அப்பொழுது பிரியா எனது வீட்டின் முகவைரியை என்னிடம் கேட்காமலே செல்கிறீர்கள்? நவீன் என ,அவள் கேள்வி முடிப்பதற்குள் நான் கவனித்து இருக்கிறேன் என் வீடு செல்லும் வழியில் தான் உங்கள் வீடும் இருக்கிறது என்று ஆவலுடன் பதில் கூற, “ம்ம்ம,நன்றாகவே என்னை கவனித்திருக்கிறீர்கள் நவீன் என்னை நக்கல் செய்து புன்னகைக்கிறாள். “

தன்னைப்போல இருக்கிறவளிடமே அவமானமடைந்து விட்டோமே என்று உணர்ந்தனவன் சமாதானமாக செல்ல வேண்டும் என்பதற்காகவே பல்லை காட்டி கீழே குனிந்து கொள்கிறான் வேறு எங்கேயும் செல்ல வேண்டுமா? ப்ரியா என்கிறான் *வாழ்க்கை முழுவதும் இவ்வாறு செய்தாலும் ஓகே தான் என்றாள்*.

இதனைக் கேட்ட நவீன் உடனே சடன் பிரேக் அடித்து வண்டியை ஒரு மணி துளிக்குள் கட்டிப்படுத்தி அணைத்தான் அவன் காதில் விழுந்த வார்த்தைகள் உண்மைதானா இல்லை அது அவனது கற்பனையாக இருக்க கூடுமோ? என்ற கேள்வி அவன் மனதில் எழவே, என்ன நவீன் என்னாச்சு? என்று பிரியா கேட்க பிரியா அது சீரியஸா? என்கிறான் நவீன்.

என்ன சீரியஸ்? என பிரியா திரும்ப கேட்கவே, அதற்கு நாம் நீங்க சொன்ன வார்த்தைகள் என்றவன் திரும்பித் பின்னே அமர்ந்திருக்கும் பிரியாவை பார்க்கிறான் “எஸ், நவீன் ஐ அம் சீரியஸ்” என்கிறாள்.

வாட் ஆனா எப்படி? ஏன்? என அவன் மனதுக்குழம்புகையில் ப்ரீயாவே அதற்கான விடையை அவன் கேள்வி கேட்பதற்கு முன்பே கூறுகின்றாள்

குளிர்ந்த நடுவானில் குளிர் காற்று வீசுகையில் நவீனை பார்த்து பொன்மொழிகள் புரிந்து அவள் கூறியதற்கான காரணத்தை சொல்ல ஆரம்பிக்கின்றார். நவீன், நான் எப்பொழுதுமே உங்களை நமது அலுவலக வேலையின் போது கவனத்திற்க்கின்றேன் நீங்கள் மற்றவர்கள் காட்டு மரியாதை குறிப்பாக வயது வேறுபாடு இன்றி தாங்களாகவே உதவ முன் வரும் தன்மை உங்களின் பொறுமை குணமே மிகவும் என்னை ம்ரஸ்செய்துவிட்டதோ என்று நினைக்கிறேன் அது மட்டும் இல்லாமல் என் மனதில் ஏதோ உங்களை மட்டும் இழந்து விடக்கூடாவிடக்கூடாது இன்று என்னை வலியுறுத்துகிறது என்கிறாள்

இதனை எல்லாம் கேட்ட நவீன் நாம் ஏதோ கனவில் இருக்கின்றோமா? இல்லை நிஜமாகவே தன் மனதில் இருந்து?எனவே நவீன் என பிரிய அழைக்க எஸ் இது நிஜம்தான் நேற்று வரை எனக்கு ஒரு விதத்தில் பிடித்தவள் இன்று தன்னை பிடித்திருக்கிறது என்று கூறுகிறாரே என நீ என வியந்தான்.

பிரியா பட் இருந்தாலும் இதெல்லாம் எப்படி சரியாக இருக்கும் என்று தாங்கள் நினைக்கிறீர்களா? என கேட்டவனுக்கு அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை நவீன் ஐ லைக் யூ என்றாள்

நவீன் எதுவும் பேசாமல் வண்டியை ஸ்டார்ட் செய்து நான் உங்களை உங்கள் வீட்டில் டிராப் செய்து விடுகிறேன் என்று கூறினான் பிரியாவுக்கு இவன் இவ்வாறு கூறியது “ஒரு வித ஏமாற்ம் கலந்த கவலையை ஏற்படுத்தவே, மோட்டார் வாகனத்தில் ஏறினாள்

வண்டியானது அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே அவள் வீட்டில் முன்பு வந்து நின்றது. அவள் ,வண்டியை விட்டு இறங்கி நவீன் நான் எதுவும் தவறாக பேசவில்லை என்று நினைக்கிறேன் நீங்க இப்ப எனக்கு பதில் சொல்லினாலும் பரவால்ல ; எனக்கு கூடிய சீக்கிரத்துல ஒரு நல்ல பதில் சொல்லுவீங்கன்னு நம்புறேன்னு சொல்லிட்டு தன் வீட்டினுள் சென்றாள்.

நவீன் அவளிடம் எதுவுமே கூறாமல் வண்டியை தன் வீடு நோக்கி நகர்ந்துகிறான். நவீன் அவன் வீட்டினை அடைந்தவுடன் தம் படுக்கையில் படுத்துக்கொண்டு குறிப்பிட்ட அரை மணி நேரத்தில் நடந்த நிகழ்வு நினைத்துக் கொண்டிருக்க கண்ணை மூடினாலும் அவனால் நிம்மதியாக உறங்கவே முடியவில்லை அன்று இரவு பொழுது இவனுக்கு இந்த நிலைமையிலேயே நகர்ந்தது”

மறுநாள் காலையில் எழுந்து தன் அலுவலகத்தை நோக்கி புறப்படுகிறான். அவனின் வருகைப் பதிவை உறுதி செய்து விட்டு,தனது இடத்தில் நோக்கி செல்லும் முன் லிப்டில் ஏற நினைத்து பட்டனை அழுத்தியவனுக்கு ஆச்சரியம் உள்ளே பிரியா நிற்கிறாள்; உள்ளே சென்று ஸ்டாட் பட்டனை அழுத்துகின்றான் அது மெல்ல நகர ஆரம்பிக்கிறது அமைதியாக

                                                                                                ——- தொடரும்……

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கொலைப் பணமும்… வீடியோவும் (சிறுகதை) – நாமக்கல் வேலு

    உயிரணுக்களால்  உருவாகிய… (கவிதை) – மஞ்சுளா ரமேஷ்