in ,

எண்ணங்கள் வண்ணமாகட்டும் (தொடர்கதை – பகுதி 5) – கற்பக அருணா

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

கிருஷ்ணா உடனடியாக நவீனை பார்த்து, “வாங்க ப்ரோ எல்லாருமே ஒன்னா போய் பிரியாவ பார்ப்போம்” என்று சொல்ல

“ஓகே கிருஷ்ணா வாங்க போகலாம்”னு சொல்லி அனைவரையும் ப்ரீயா இருக்கும் அறைக்குள் நுழைந்தார்கள். 2825

அனைவரும் பார்த்து “ஐ அம் சாரி” என்றாள் பிரியா.

உடனே கிருஷ்ணா, “ஏன் பிரியா, மயக்கம் போட்டதுக்காக சாரி கேக்குறீங்க?” என்று கேட்டவுடன்

ஒரு நிமிடம் யோசித்தவளாய், “அப்ப உண்மை உங்க யாருக்குமே தெரியாது போல, அதனாலதான் இப்படி சொல்றாங்க”ன்னு உண்மையை கூற முற்படுகையில்

“இல்ல…. நம்ம எல்லாம் பயப்பட வச்சதுக்காக பிரியா சாரி கேக்குறாங்க போல” பிரியாவை கண்களால் தான் கூறுவது ஒப்புக்கொள்ள செய்கிறான் நவீன்.

“ஆம் அதுக்காகத்தான் நான் சாரி கேட்டேன்” என பிரியாவும் சமாளிக்கிறாள்.

சிறிது நேரம் கழித்து அனைவரும் சென்று விட, “ஃப்ரீயா நான் டேப்லெட் வாங்கி விட்டு வருகிறேன் ரெஸ்ட் எடு”  நவீன் கிளம்ப

“நவீன்” என்று பிரியா அழைக்க

“சொல்லு ப்ரியா”

“என்னை மன்னித்துவிடுங்கள், நான் தவறு செஞ்சிட்டேன்” என்று சொல்லிட்டு  தலையை குனிந்து கொள்கிறாள்.

அருகில் இருந்த நாட்காலியை இழுத்து பிரியா அருகில் அமர்ந்து அவளுடைய தாடையை தூக்கி நவீன் “நீ ஏன் இவ்வாறு செய்தாய் என்பதை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், திரும்பவும் இப்படி பண்ணாத. தயவு செஞ்சு உன்னை கெஞ்சி கேட்கிறேன்,  விழுந்த உடனே என்னால அந்த ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னு தெரியல, செத்துடலாம் போல இருந்துச்சு”

“அப்படி சொல்லாதீங்க, ஐ அம் சோ சாரி என்னை மன்னிச்சிடுங்க. நேற்று நடந்தது இன்சூரன்காக தான். அது மட்டும் இல்லாம நீங்க அதுக்கு அப்புறம் பேசாம வேற போனதுல பயந்துட்டேன், அதனாலதான் நான் அப்படி பண்ணினேன். அதுவும் நைட் ஃபுல்லா அந்த இன்சுனால எனக்கு தூக்கம் வரல, பயத்துல தான் நான் மார்னிங் ஆபீஸ் கிளம்பி வரையில அப்படி ஒரு முடிவு எடுத்துட்டு” என்று சொல்லி கண்களில் நீர் தழும்பி வழிய நவீனை பார்க்கிறாள்.

நவீன் அவருடைய கைகளை பிடித்து “சரி விடு பிரியா, இனிமேலாவது இப்படி பண்ணாத. இதனால வந்த விளைவுகள் எப்படி இருக்கும். உன் கனவுல கூட நினைச்சு பார்த்து இருக்க மாட்ட” சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து டேப்லெட் வாங்க சென்றான்.

சில மணித்துளிகள் பின் நவீன் பிரியாவிடம் வந்து “நம்ம ரெண்டு நாளைக்கு இங்கதான் தங்குற மாதிரி இருக்கும். உனக்கு மெடிக்கல் லீவ் கிடைச்சதும் கேட்டா டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்றாங்கன்னு சொல்லிக் கொள்ளலாம்” என்று சொல்ல

“வேணாம் நீங்க போய் வாங்க ஒருக்கா ஆபீஸ்ல பாருங்க. ஐ ஆம் ஓகே”

“நோ” என்று கத்துகிறான் நவீன்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    லோகன் (குறுநாவல் – இறுதிப்பகுதி) – சின்னுசாமி சந்திரசேகரன்

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 5) – முகில் தினகரன்