in , ,

ஏனிந்த கொலை வெறி (இறுதி அத்தியாயம்) – சுஶ்ரீ

இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“நவகன்னிக உச்சஸ்தான யாக சூத்திரம்” பஞ்சநாத கிறுக்கு சித்தர் எழுதின அந்த ஜிலேபித் தமிழ் புத்தகம் பதை பதைக்க வைத்தது.

அவசரமாய் பேன்ட் ஷர்ட்டை மாட்டிக் கொண்டு தினேஷ் கமிஷனர் ஜான் சக்திவேலின் வீட்டை அடைந்தான். பாதுகாப்பு காவலர்களை தாண்டி அவரை பாப்பது கஷ்டம்தான்.

என்ன. தினேஷ் திடீர்னு, ஃபோன் கூட பண்ணாம.

சார், இந்த புத்தகத்தை பாருங்க.

என்ன தமிழா இது புரியலையே?

3 வது பேஜ்ல இருந்து வரையப் பட்டுள்ள சித்திரங்களை பாருங்க சார்.

அட இது எப்படி சாத்தியம் 14,15 வயசு பொண்ணு தொப்புள்ல இருந்து மார் வரை ரத்தக் கோடு அதே மாதிரி இருக்கே. அடப்பாவி இவனா இதை எழுதினவனா? இல்லையே பழைய புஸ்தகமாச்சே;1921ல எழுதினது.

இதை படிச்சிட்டிங்களா தினேஷ்.?

ஆமாம் சார், இது படி பாத்தா இன்னும் 6 பெண்கள், வயசுக்கு வர ஸ்டேஜ்ல உள்ள பெண்கள் கொலையாகற வாய்ப்பு இருக்கு.அவசரமா இதை நிப்பாட்டணும்.இந்த நியூஸ் கட்டிங் பாருங்க சார்.6 மாசம் முன்னைய தேதியிட்டது. அதுக்கு அடுத்த கட்டிங்கையும் பாருங்க சார்.

“பிரபல ஜோதிடர் வீட்டில் திருட்டு” கோவையிலுள்ள பிரபல ஜோதிடரின் வீட்டில் பீரோவை உடைத்து கொள்ளை. கோவை குருநாத ஆச்சாரியார், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பெயர் பெற்ற ஜோதிட சிரோன்மணி. இவர் குடும்பத்துடன் குருவாயூர் சென்றருப்பதை அறிந்த கொள்ளையர்கள் வீட்டை உடைத்து கொள்ளை அடித்து சென்றனர். மற்றும் ஏதேதோ விவரங்கள் அது இங்கு முக்கியமில்லை.

ஆனால் அதற்கு அடுத்த நாள் குருநாத ஆச்சாரியாரின் பேட்டி கொள்ளை போன பொருட்கள் பற்றி “மாலைச் செய்தி” பத்திரிகையில். கிட்டத்தட்ட ஐந்து லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன. அவை பற்றி எனக்கு அதிகம் வருத்தம் இல்லை. ஆனால் என் தகப்பனாரின் குருநாதர் பஞ்சநாத சித்தர் தன் கைப்பட எழுதிய சில புஸ்தகங்களையும் காணோம் அவை எனக்கு பேரிழப்பாகும்.

ஜான் சக்திவேல், அப்ப உடனே கோவை போலீசுக்கு சொல்லி, பெரியவரை இங்கே கூட்டிட்டு வந்துடலாமா?

தேவையில்லை சார், தயவு செஞ்சு நான் சொல்ற படி செய்ங்க சார். வேரோட களையணும்.

அடுத்த அரை மணி நேரம், ‘ஆபரேஷன் இன்னொசென்ஸ்’ புளூ பிரின்ட் தயாரானது.

கவலைப் படாதிங்க தினேஷ் நம்ம ரெண்டு பேர் தவிர வேற யாருக்கும் இந்த நடவடிக்கைகள் கடைசி வரை தெரியக் கூடாது, அப்பறமும் தெரியக் கூடாது. இன்னிக்கு நைட் இந்த கேஸ் முடியுது.

சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட், எப்போதும் போல பரபரப்பு. இம்மிக்ரேஷன், செக்யூரிடி செக்அப், பன்முக உணவகங்கள், கலைப் பொருள், ஆடை, மதுபான கடைகள், மனி எக்சேன்ஜ் கிசோக்கள் எல்லாம் பரபரப்பு .இது டிபார்ச்சர் பக்கம். அரைவல் பக்கம இதை விட பரபரப்பு.இங்கே உள்ள லக்கேஜ் வெளியே கொண்டு வரும் 8 கன்வேயர் பெல்ட்டை சுற்றி தள்ளு வண்டியுடன் வெவ்வேறு நாட்டிலிருந்து வந்த பல வண்ண பயணிகள்.

‘க்வான்டாஸ் ஏர்வேஸ்’ சிட்னியிலிருந்து வந்து 15 நிமிஷம் ஆச்சு பெல்ட் நம்பர் 5 ஐ சுற்றி சிட்னியிலிருந்து வந்த பயணிகள். குருநாத ஆச்சாரியாரும் தன் சூட்கேசுக்காக காத்திருந்தார்.வெள்ளை யூனிபார்மில் இரண்டு கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவரை அணுகினர்.

சார், நீங்கதானே குருநாத ஆச்சாரியார், கொஞ்சம் கூட வாங்க.

என் லக்கேஜ் வரணும், ஆனா எதுக்கு உங்க கூட வரணும்?எனக்கு கனெக்டிங் பிளைட் பிடிக்கணும்.

அதெல்லாம் தானே வரும், நீங்க வாங்க சார்.

அதெப்படி, நீங்க என்னை மட்டும் எப்படினு மறுப்பு தெரிவித்தவுடன், அவரை இரு பக்கமும் கைகளை பிடித்துக் கொண்டனர். வந்து எங்க சீஃப் கிட்ட உங்க கேள்விகளை கேளுங்க.இப்ப மரியாதையா வாங்க எல்லோர் முன்னால அசிங்கம் வேண்டாம்.

பாஸ்கரும், பாண்டியும் ஏர் போர்ட்டில், வருகைப் பகுதியில் வெளியே நின்றிருந்தனர்.சிட்னியிலிருந்து க்வான்டாஸ் லேண்டிங் அறிவிக்கப் பட்டதிலிருந்து வெளியே வந்தது ஆஸ்திரேலிய டிப்ளமேடிக் குழு         6 பேர். அவர்களுக்கு அதிகம் கஸ்டம்ஸ், இமிக்ரேஷன் தொந்தரவு கிடையாது. ஆனாலும் அவர்கள் காத்திருந்த வேனில் ஏறி உள்நாட்டு விமான தளத்துக்கு போகாமல் காத்திருந்தார்கள் யாருக்கோ.அவர்கள் கண்களில் டென்ஷன் தெரிந்தது. 40 நிமிட காத்திருப்புக்கு பின் வேன் ஏறி டொமஸ்டிக் டெர்மினலுக்கு புறப்பட்டனர்.

பாஸ்கருக்கும், பாண்டிக்கும் ஒன்றும் விசேஷமாய் தெரியவில்லை வெளியே வரும்போது சில பத்திரிகை நிருபர்கள் உள்ளே அவசரமாய் விரைந்தனர்.பாண்டி தெரிந்த ஒரு நிருபரை நிறுத்தி என்ன ஆச்சுனு கேட்டான். ஒரு இன்டர்நேஷனல் டிரக் ஸ்மக்ளர் பிடி பட்டானாம், 10 கோடி சரக்கு பிடி பட்டதாம்.

திரிசூலம் டர்னிங்கில் அதே நேரம் ஒரு பயங்கர ஆக்சிடென்ட். போலீஸ் கமிஷனரோட ஜீப்பில் ஒரு பைக் பயங்கரமாக மோதியதில் பைக்கில் வந்த ஒரு வெளிநாட்டு இளைஞனுக்கு பலத்த அடி.

கமிஷனரே தனியே ஜீப் ஓட்டி வந்ததால், டிராபிக் போலீஸ், உடனடியாக ஆம்பலன்ஸ் வரவழைத்து அந்த இடம் கிளியர் செய்யப் பட்டது.

மறுநாள் அலுவலகத்தில் அனைத்து செய்தித் தாள்களையும் பரப்பிக் கொண்டு உட்கார்ந்து லதா எப்பவும் போல சுவாரஸ்யமான கட்டிங்களை எடுத்துக் கொண்டிருந்தாள்.

சரியாக 10 மணிக்கு தினேஷ் ஆபிஸ்ல ஆஜர், பாஸ்கரன் பின்னாலேயே. பாண்டிதான் கோவிந்தப்ப நாயக்கன் தெருவுல, அகர்வால்பவனை நோக்கி விரைந்தான், சமோசா சூடா வாங்கணுமே, அப்படியே அந்த ஹேத்தல் கண்ல படறாளா பாக்கணும்.

என்ன மேத்தா பாய், சமோசா சூடா இருக்கு இல்லை?

அதை விடு பாண்டி பாய் இந்த காலை பேப்பரை பாரு.திரிசூலம் பைக் ஆக்சிடன்ட்.அடி பட்டு சாகக் கிடக்கறானாம் பைக்ல வந்தவன். ஃபோட்டோ பாத்தயா? இந்த ஆளுதான் நம்ம பொண்டாட்டியை சைட் அடிச்சான்னு சொன்ன வெளிநாட்டு ஆளு.உனக்கு கூட சிகரட் பாய்ட்டு கொடுத்தேனே.

அடடா , பாத்தயா நம்ம பொண்டாட்டியை வேற ஒருத்தன் சைட் அடிச்சா இந்த கதிதான்.அது சரி உன் மச்சினி ஹேத்தல்னு சொன்னயே கண்ல பாக்க முடியலை.

ஹேத்தலுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சு பாய்., மாப்பிள்ளை மதுரைல பெரிய ஹோட்டல் காரரு. இப்ப குஜராத் குல தெய்வம் கோவிலுக்கு போய் எங்கேஜ்மென்ட். கல்யாணம் 10 நாள்ல, இங்கதான் சென்னைல கண்டிப்பா வரணும் நீ.

பாண்டி தேவதாசாய் ஆபிஸ் கிளம்பினான், சமோசா, ஜிலேபி பொட்டணம் மறக்கவில்லை.

வாடா பாண்டி , தினேஷ் வரவேற்றான். ஏண்டா சோகமா வரே சமோசா தீந்து போச்சா, இல்லை மேத்தா பொண்டாட்டி திட்டிட்டாளா?

இல்லை பாஸ் ஹேத்தலுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சு.

அது யாருடா ஹேத்தல், புது ஹீரோயின்.

போங்க பாஸ் என் வருத்தம் உங்களுக்கு தெரியாது.

சரி எல்லோரும் வந்தாச்சா இப்ப அடுத்த கேஸ் நடிகை நளினலதாவோடதை எடுப்போமா, உலகப்பன் செட்டியாரோடதை எடுப்போமா?

இன்ஸ்டன்டா பாண்டி வலது கை தூக்கி நளினலதான்னான். சற்று யோசிச்சு ஏன் பாஸ் கைல இருக்கற கேசே முடியலையே. அதே கேள்விதான் லதாவுக்கும், பாஸ்கருக்கும்.

தினேஷ், இல்லை அந்த கேஸ் நேத்து ராத்திரியே முடிஞ்சு போச்சு.

மூவரும் ஒரே குரலில் கேட்டனர் எப்படி பாஸ்?

குற்றவாளி விசாரணைக்கு வேலை வைக்காம ஆக்சிடன்ட்ல மாட்டி சாகக் கிடக்கிறான்,அவன் ஒரு பன்னாட்டு கான்ட்ராக்ட் கொலையாளி, பல நாட்டு போலீசும் தேடற ஒருத்தன்.எதேச்சையா நம்ம கமிஷன்ர் வண்டில வந்து மோதிட்டான். இன்னிக்கு நைட் தாண்டாது, டாக்டர் கூற்றுப் படி.இதற்கு பிரதம சூத்ரதாரி டிரக் கடத்தல் கேஸ்ல நேத்து ஏர்போர்டல மாட்டினார்.,10 வருஷம் வெளில வர முடியாது. யாருக்காக இதெல்லாம் செய்தாரோ அந்த வெளி நாட்டு அரசியல் தலைவர் ஏமாற்றத்தோடு நாளை தம் சொந்த நாடு திரும்பறார்.

இதுதான் இந்த தொடர் கொலைக்கு முடிவு, “ஆபரேஷன் இன்னொசென்ஸ் “ வெற்றிகரமாய் முடிந்தது. பிக் தேங்க்ஸ் டு கமிஷனர் ஜான் சக்திவேல். இதற்குமேல் ஒன்றும் விளக்கம் இல்லை ஸ்டேட் சீக்ரெட்.

பாண்டி, “ அப்ப அந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவருக்கு இதில் சம்பந்தமே இல்லையா?

தினேஷ் , “ இல்லை இது ஒரு வெளிநாட்டு அரசியல் தலைவருக்காக இந்திய ஜோதிட சிரோன்மணியால் ஏற்றுக்கொள்ளப் பட்ட ‘யாக’முயற்சி.

லதா இந்த புத்கத்தை கொளுத்தி சாம்பல் கூட இல்லாமல் கரைச்சு ஃப்ளஷ் பண்ணிடு, “நவகன்னிக உச்சஸ்தான யாக சூத்திரம்” பஞ்சநாத கிறுக்கு சித்தர் எழுதின அந்த ஜிலேபித் தமிழ் புத்தகம் அடுத்த ஐந்து நிமிடங்களில் சாம்பலாய் கரைந்து போனது.

பாஸ்கருக்கும், பாண்டிக்கும் கொஞ்சம் ஏமாற்றம் கேஸ் சப்னு முடிஞ்சதேன்னு.

தினேஷ், சியர் அப் கைஸ், அடுத்து என்ன பண்ணலாம்?

பாண்டி, அசிஸ்டன்ட் லதாவை, லதா மேடம் ஆக்கிடலாம் பாஸ்.

தினேஷ் லதாவை பாத்து “என்ன லதா ஆக்கிடலாமா?”

லதா முகத்தை மூடிக்கொண்டு தன் இடத்துக்கு ஓடினாள்.

*இனி இல்லை இந்த கொலை*

இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஒரு மாருதிக் காரும், தண்ணி வண்டியும் (சிறுகதை) – முகில் தினகரன்

    சூட்சுமம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு