in

கோதுமை அல்வா (எளிமையான செய்முறை) – 👩‍🍳 கமலா நாகராஜன், சென்னை

கோதுமை அல்வா

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

தேவையான சாமான்கள்

  • கோதுமை ரவை – 1 கப்
  • சக்கரை  – 2  1/2 கப்
  • நெய் – 1/2 கப்
  • ஏலப்பொடி – 1 டீஸ்பூன்
  • ஜாதிக்காய் பொடி – 1 டீஸ்பூன்
  • முந்திரி – 10

செய்முறை

  • 2 மணி நேரம் ரவையை ஊற வைக்கவும்.
  • களைந்து தண்ணீர் ஊற்றி மிக்சியில் அரைக்கவும்.
  • 3 முறை பால் எடுக்கவும்.
  • 1/2 மணி மூடி வைக்கவும்.
  • தெளிந்து இருக்கும், தெளிவை எடுத்து விடவும்.
  • சக்கரையை சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  • கொதிக்கும் போது ஒரு கரண்டி பால் விடவும்.
  • அழுக்கெல்லாம் திரண்டு மேலே வரும், அதை எடுத்து விடவும்.
  • கோதுமை பாலை சேர்த்து கை விடாமல் கிளறவும்.
  • கெட்டியாகும் போது 1 டம்ளர் கொதிக்கற தண்ணீரை அதில் ஊற்றி கிளறவும்.
  • கொஞ்சம் கொஞ்சமா நெய் சேர்த்து கிளறவும்.
  • கொஞ்சம் சக்கரை காரமலைஸ் செய்து அல்வாவில் ஊற்றவும். (காரமலைஸ் செய்வது – கொஞ்சம் சக்கரையை தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கிளறிண்டே இருந்தால் தேன் கலர் வரும்)
  • இப்போது முந்திரி (வறுக்க வேண்டாம்), ஏலம், ஜாதிக்காய் பொடி சேர்த்து கிளறவும்
  • நெய் கக்கி வரும் போது தட்டில் கொட்டி ஆறியதும் வில்லை போடவும்.

சூப்பரான கோதுமை அல்வா ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

வீணைக்கு நான் கேரண்டி (சிறுகதை) – ✍ பவானி உமாசங்கர், கோவை

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 27) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்