in ,

மேக்ஸ் டீச்சர் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

ழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அன்றைய தினம் மாலை கடைசி பீரியட் மேக்ஸ். எனவே புதியதாக பணியில் சேர்ந்த மேக்ஸ் டீச்சர் கனகாவிற்கு அன்று தான் முதல் நாள் மேக்ஸ் வகுப்பு. மாணவர்களின் மேக்ஸ் கல்வி திறனை அறிந்துக் கொள்ள வேண்டி கடந்த அரையாண்டு தேர்வில் மேக்ஸ்ஸில் பெற்ற ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண்களை  கேட்டு கொண்டே வந்தார்.  

அந்த வகுப்பில் இருந்த நாற்பது மாணவர்களில் 20 மாணவர்கள் மட்டுமே சராசரியாக 70 முதல் 80  மதிப்பெண்கள் வரையிலும் பெற்றிருந்தனர். மற்ற 20 மாணவர்கள் 40 முதல் 50 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.  

40 முதல் 50 வரையிலான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை தனியாக பிரித்து நிற்க வைத்து மதிப்பெண் குறைவாக பெற்றதற்கான காரணத்தை  ஒவ்வொரு மாணவரையும் பார்த்து  கேட்க அதில் பத்து மாணவர்கள் காலாண்டு தேர்விலும்,  அதற்கு முந்தைய எல்லா தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்றதாகவும், அரையாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெறாத காரணத்தை  ஒவ்வொரு விதமாக கூறினர்.

சற்று யோசனை செய்த பின்னர்,  அந்த பத்து மாணவர்களை மட்டும் தனியாக நிற்க வைத்தார். மற்ற  பத்து மாணவர்களை தனியாக பிரித்தார். மீதமுள்ள பத்து மாணவர்களை பார்த்து காரணம் கேட்க அவர்கள் கூறிய காரணம்

1. பழைய கணக்கு ஆசிரியை நடத்திய விதம் புரியவில்லை,

2. அவர் மாணவர்களின் சந்தேகங்களுக்கு சரியான பதில் சொல்வதில்லை. 

3. திரும்ப கேட்டால் கோபபடுவார். என்றனர்.

அதில் இரண்டு மாணவர்கள் மட்டும் மேடம், ஒரு சில கணக்குகள் பழைய மேக்ஸ் டீச்சருக்கே தெரியவில்லை என்று கூறி சிரித்தனர். அதை கேட்ட மற்ற மாணவர்களும் சிரிக்க, மேக்ஸ் டீச்சர் கனகா அந்த இரண்டு மாணவர்களான  சங்கரையும்,  சக்தியையும் பார்த்து சற்று கோபமாக’ நாளைக்கு கிளாஸ்க்கு வரும் போது உங்கள் அப்பாவை  கட்டாயம் அழைத்து வர வேண்டும் என்று கூற அனைத்து மாணவர்களும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,

“என்ன? என்று மேக்ஸ் டீச்சர் கனகா சற்று கோபமாக கேட்க “

“வேண்டாம் டீச்சர், இந்த வம்பு உங்களுக்கு”,  என்றனர் கோரசாக.

“அதெல்லாம் எனக்கு தெரியாது. யாராக இருந்தாலும் பரவாயில்லை. நாளைக்கு கிளாஸ்க்கு வரும் போது உங்கள் அப்பா கட்டாயம் வர வேண்டும். இல்லையென்றால் நீங்கள் இரண்டு பேரும் கிளாஸ்க்குள் வர வேண்டாம் என்று எச்சரித்தார்.

மறுநாள் மேக்ஸ் முதல் பீரியட்டாக வர  கனகா டீச்சர் வகுப்பறையில் நுழைந்தவுடன் ” சங்கரையும்,  சக்தியையும் பார்த்து எங்கே உங்கள் அப்பாக்கள்?” என்று கேட்க,

இருவரும் வந்துட்டாங்க மேடம்,  “இதோ இப்ப வந்திடுவாங்க” என்று கூற

அப்படியா? “அப்போ உங்க அப்பாக்கள் வந்தவுடன் நீங்க அவங்களோட வாங்க, இப்போ கெட் அவுட்”, என்று கூற

மாணவர்கள் மீண்டும் தங்களுக்குள்  “மேக்ஸ் டீச்சர் இன்னியோட காலி”, என்று மெல்லிய குரலில் பேசிக்கொள்ள, 

“சைலண்ட்” என்று கோபமாக கூறினார் மேக்ஸ் டீச்சர் கனகா.

சங்கரும், சக்தியும் வகுப்பறைக்கு வெளியில் வந்து நின்றனர்.

“மே ஐ கம் இன் மேடம்”,  என்று சங்கரின் அப்பா கேட்க

போர்டில் கணக்கு போட்டுக் கொண்டே “எஸ் கம் இன்” என்று மேக்ஸ் டீச்சர் கனகா கூறியபடியே திரும்பி பார்க்க, வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும் எழுந்து நின்றபடியே இருக்க,  வகுப்பறையின் வாசலில் அந்த பள்ளியின் தாளாளரும், மாநில கல்வி அமைச்சரும் நின்று கொண்டிருந்ததை பார்த்த மேக்ஸ் டீச்சர் கனகாவிற்கு எதுவும் புரியவில்லை.  

சார்..!, உள்ளே வாங்க. நீங்கள்…? இங்கே..?

முதலில் அந்த பள்ளியின் தாளாளர், மேடம் நான் சங்கரின் தந்தை என்று கூற,  உடனே கல்வி அமைச்சர், நான் சக்தியின் தந்தை என்று கூற ஒரு நிமிடம் பயந்து போனார் மேக்ஸ் டீச்சர் கனகா.

Sorry சார்,  “இரண்டு பேரும் என்னை மன்னியுங்கள். நீங்கள் தான் இவர்களின் தந்தை என்று தெரியாது”, என்று மிகவும் வருத்தமான குரலில், கண்களில் சற்று நீர் ததும்ப கூறினார் மேக்ஸ் டீச்சர் கனகா.

இரண்டு பேரும் சிரித்துக் கொண்டே, “Ok,  No problem. Relax, relax please. எதற்காக எங்கள் இருவரையும் வரச் சொன்னீங்க?” என்று கேட்க

‘முந்தைய நாள் நடந்தவற்றை மேக்ஸ் டீச்சர் கனகா விவரமாக கூற’

அதை கேட்ட இருவரும் “சரி என்ன செய்யலாம் ? நீங்களே சொல்லுங்கள்” என்று கேட்க

“பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த வகுப்பில் உள்ள என் மாணவர்கள்,  ஏன் இந்த பள்ளியில் உள்ள பத்தாம் வகுப்பில் கணக்கு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெறும் அனைத்து மாணவர்களும் வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100/100 மதிப்பெண் பெற வேண்டும். அது தான் என் விருப்பம். நான் M.Sc., M.Ed., Ph.D. in Maths. அரசு பள்ளியில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்தேன். சில அரசியல்வாதிகளின்  கட்டளைகளுக்கு அடி பணிந்து பணி புரிய விருப்பமில்லாமல் என் வேலையை ராஜினாமா செய்து விட்டேன்.  என் கல்வி திறமையை வீணடிக்க விரும்பவில்லை. எனவே தான் என் திறமையை இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள்  பயன்பெறும் வகையில் செயல்படுத்த விரும்புகிறேன். பள்ளி நேரம் போக, மாலையில் மேற்கொண்டு இரண்டு மணி நேரம் கணக்கு சொல்லி கொடுக்க விரும்புகிறேன். அதற்காக எனக்கு எந்த விதமான தனி வருமானம் வேண்டாம். இதற்கு தாங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டுகிறேன்.

பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலனை தாங்கள் விரும்பும் போது,  நாங்கள் ஏன் மறுப்பு கூற போகிறோம். தாங்கள் விரும்பியபடியே பள்ளி நேரம் முடிந்து , மாலை நேரத்தில் அதிகபடியாக இரண்டு மணி நேரம் கணக்கு பாடம் கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்களின் பெற்றோர்களிடம் அனுமதி பெற்று,  தங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று தாளாளர் கூற, கல்வி அமைச்சரும் தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக கூறினார்.

குறிப்பு:  (“கணித ஆசிரியை”  என்பதற்கு பதிலாக “மேக்ஸ் டீச்சர்”  என்று இக்கதையில் கூறியிருப்பது,  கதையினை படிக்கும் போது  புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால்)

ழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஃபைவ் ஸ்டார் வைத்தியம் (பகுதி 1) – சுஸ்ரீ

    காப்பக ரகசியம் (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு